உரிமைகோரப்பட்ட பகுதியை வீடியோக்களில் இருந்து அகற்றுதல்

Content ID உரிமைகோரலை உங்கள் வீடியோ கொண்டிருந்தால், வீடியோ காட்டப்படும் இடம் குறித்தும் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட முடியுமா என்பது குறித்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம். உரிமைகோரலையும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளையும் அகற்ற, புதிய வீடியோவைப் பதிவேற்றாமலேயே உரிமைகோரப்பட்ட பகுதியை மட்டும் நீங்கள் எடிட் செய்து அகற்றலாம்.

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு விருப்பத்தேர்வைப் பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்து, Content ID உரிமைகோரலைத் தானாக அகற்றும்படி செய்யலாம்:

  • உரிமைகோரப்பட்ட பகுதியை டிரிம் செய்தல்: உரிமைகோரப்பட்ட பகுதியை மட்டும் வீடியோவில் இருந்து நீங்கள் டிரிம் செய்து அகற்றலாம். Studio எடிட்டர் கருவியில் மங்கலாக்கும் அம்சத்தைப் பயன்படுத்திய வீடியோக்களை டிரிம் செய்ய முடியாது.
  • பாடலை மாற்றுதல்: உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை யாராவது உரிமைகோரினால், அந்த ஆடியோவை YouTube ஆடியோ லைப்ரரியில் உள்ள வேறு ஆடியோ மூலம் நீங்கள் மாற்றலாம்.
  • பாடலை ஒலியடக்குதல்: உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை யாராவது உரிமைகோரினால் அதை நீங்கள் ஒலியடக்கலாம். உரிமைகோரப்பட்ட பாடலை மட்டும் ஒலியடக்கலாம் அல்லது வீடியோவில் உள்ள ஆடியோ அனைத்தையும் நீங்கள் ஒலியடக்கலாம்.

உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை YouTube Studioவில் டிரிம் செய்தல், மாற்றுதல் அல்லது ஒலியடக்குதல்

உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை வீடியோவில் இருந்து அகற்ற:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வடிப்பான் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் அகற்ற விரும்பும் வீடியோவைக் கண்டறியவும்.
  5. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில் பதிப்புரிமை என்பதற்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  6. விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. இந்த வீடியோவில் கண்டறியப்பட்டுள்ள உள்ளடக்கம் எனும் பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட உரிமைகோரலைக் கண்டறிந்து, செயல்களைத் தேர்ந்தெடுங்கள் அதன் பிறகு உரிமைகோரப்பட்ட பகுதியை டிரிம் செய்தல், பாடலை மாற்றுதல் அல்லது பாடலை ஒலியடக்குதல் என்பவற்றில் ஒன்றைக் கிளிக் செய்யவும்.

 உரிமைகோரப்பட்ட பகுதியை டிரிம் செய்தல்

உங்கள் வீடியோவில் Content ID உரிமைகோரலைப் பெற்ற பகுதியை இந்த விருப்பத்தேர்வு மூலம் எடிட் செய்து அகற்றலாம்.
  1. (விரும்பினால்) நீங்கள் அகற்றுகின்ற பகுதியின் தொடக்க நேரத்தையும் இறுதி நேரத்தையும் மாற்றவும்.
    • உரிமைகோரப்பட்ட உள்ளடக்கத்தின் சில பகுதிகள் உங்கள் வீடியோவில் தொடர்ந்து இடம்பெற்றால் உரிமைகோரல் அகற்றப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
    • Studio எடிட்டர் கருவியில் மங்கலாக்கும் அம்சத்தைப் பயன்படுத்திய வீடியோக்களை டிரிம் செய்ய முடியாது.
  2. தொடர்க அதன் பிறகு டிரிம் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
உரிமைகோரப்பட்ட உள்ளடக்கம் முழுவதும் டிரிம் செய்யப்பட்ட பிறகு உங்கள் வீடியோவில் இருந்து Content ID உரிமைகோரல் அகற்றப்படும்.

 பாடலை மாற்றுதல் (ஆடியோ உரிமைகோரல்களுக்கு மட்டும்)

உரிமைகோரப்பட்ட ஆடியோவை YouTube ஆடியோ லைப்ரரியில் உள்ள பிற ஆடியோவைக் கொண்டு மாற்ற இந்த விருப்பத்தேர்வு உதவுகிறது.
  1.  புதிய ஆடியோ டிராக்கைக் கண்டறிய தேடல் வடிப்பான்களை பயன்படுத்தவும். டிராக்குகளைக் கேட்க, பிளே செய் என்பதைத் தட்டவும்.
  2. உங்களுக்கு விருப்பமான பாடலைக் கண்டறிந்த பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும். எடிட்டரில் நீல நிறப் பெட்டியில் பாடல் தோன்றும்.
    • பாடல் தொடங்கும் நேரத்தை மாற்ற, பெட்டியைக் கிளிக் செய்து இழுக்கவும். உரிமைகோரப்பட்ட ஆடியோவின் சில பகுதிகள் உங்கள் வீடியோவில் இருந்தால், உரிமைகோரல் அகற்றப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
    • பாடலின் பிளேயாகும் அளவை மாற்ற பெட்டியின் ஓரங்களை இழுக்கவும்.
    • மிகத் துல்லியமாக எடிட் செய்ய வேண்டுமெனில் பெரிதாக்கல் Zoom in விருப்பங்களைப் பயன்படுத்தவும்.
  3. (விரும்பினால்) கூடுதல் டிராக்குகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  4. சேமி அதன் பிறகு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உரிமைகோரப்பட்ட ஆடியோ முழுவதும் மாற்றப்பட்ட பிறகு உங்கள் வீடியோவில் இருந்து Content ID உரிமைகோரல் அகற்றப்படும்.

 பாடலை ஒலியடக்குதல் (ஆடியோ உரிமைகோரல்களுக்கு மட்டும்)

உங்கள் வீடியோவில் உரிமைகோரப்பட்ட ஆடியோவை இந்த விருப்பத்தேர்வு மூலம் ஒலியடக்கலாம். பாடலை மட்டும் ஒலியடக்க வேண்டுமா அல்லது வீடியோவில் உள்ள எல்லா ஆடியோவையும் ஒலியடக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  1. எப்படி ஒலியடக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • பாடல் பிளே ஆகும்போது ஆடியோ அனைத்தையும் ஒலியடக்குதல்
      • உரிமைகோரப்பட்ட ஆடியோ இருக்கும் வீடியோவின் பகுதியில் உள்ள எல்லா ஆடியோவையும் ஒலியடக்கும்.
      • இந்த விருப்பத்தேர்வு விரைவானது மற்றும் இதன் மூலம் உரிமைகோரல் தானாகவே அகற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.
    • பாடலை மட்டும் ஒலியடக்குதல் (பீட்டா)
      • உரிமைகோரப்பட்ட பாடலை மட்டும் ஒலியடக்கும். பிற ஆடியோ (உரையாடல், சவுண்டு எஃபெக்ட்டுகள் போன்றவை) ஒலியடக்கப்படாது.
      • இதற்கு வழக்கமாக அதிக நேரமாகும். பாடலை அகற்றுவது கடினமாக இருக்கும்பட்சத்தில் இது இயங்காமல் போகலாம்.
  2. (விரும்பினால்) ஆடியோவில் ஒலியடக்க வேண்டிய பகுதியின் தொடக்க நேரத்தையும் இறுதி நேரத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.
    • உரிமைகோரப்பட்ட ஆடியோவின் சில பகுதிகள் உங்கள் வீடியோவில் இருந்தால், உரிமைகோரல் அகற்றப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
  3. எடிட் செய்த பகுதியின் மாதிரிக்காட்சியை வீடியோ பிளேயரில் பார்க்கவும்.
  4. தொடர்க அதன் பிறகு ஒலியடக்கு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் செய்த மாற்றத்தின் செயலாக்கம் தொடங்கும்.

உரிமைகோரப்பட்ட அனைத்து ஆடியோக்களும் ஒலியடக்கப்பட்டால் Content ID உரிமைகோரல் உங்கள் வீடியோவில் இருந்து அகற்றப்படும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:
  • எடிட் செய்த பிறகு அதைச் செயலாக்குவதற்கான கால அளவுகள் மாறுபடலாம்.
  • வீடியோ செயலாக்கப்படும்போது உங்களால் வேறு மாற்றங்களைச் செய்ய முடியாது, ஆனால் சாளரத்தை மூட முடியும். செயலாக்கம் முடிவடையும் வரை, வீடியோ அதன் தற்போதைய நிலையிலேயே (எடிட் செய்வதற்கு முன்பிருந்த நிலை) இருக்கும்.
  • உங்கள் வீடியோ 6 மணிநேரத்திற்கு மேல் நீண்டதாக இருந்தால் உங்களால் அதில் மாற்றங்களைச் சேமிக்க முடியாமல் போகலாம்.
  • உங்கள் சேனல் YouTube கூட்டாளர் திட்டத்தில் (YPP) இல்லை என்பதுடன் உங்கள் வீடியோவுக்கு 1,00,000 பார்வைகளுக்கு மேல் கிடைத்திருந்தால் உங்களால் அதில் மாற்றங்களைச் சேமிக்க முடியாமல் போகக்கூடும்.
உதவிக்குறிப்பு: செயலாக்கம் நிறைவடைந்த பின்னர் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதையும் உரிமைகோரல் அகற்றப்பட்டுள்ளதையும் உறுதிசெய்ய, பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்யவும்.

YouTube Studio ஆப்ஸில் உரிமைகோரிய உள்ளடக்கத்தை ஒலியடக்குதல்

வீடியோவில் உரிமைகோரிய உள்ளடக்கத்தை ஒலியடக்க இவற்றைச் செய்யவும்:

  1. YouTube Studio ஆப்ஸில் உள்நுழையவும்.
  2. உள்ளடக்கம்  என்பதைத் தட்டவும்.
  3. பதிப்புரிமைக் கட்டுப்பாடு உள்ள வீடியோவைத் தேர்ந்தெடுத்து கட்டுப்பாட்டின் மீது தட்டவும்.
  4. கீழுள்ள பேனலில், சிக்கல்களைச் சரிபாருங்கள் என்பதைத் தட்டவும்.
  5. தொடர்புடைய உரிமைகோரலைத் தட்டவும்.
  6. பகுதியை ஒலியடக்கு என்பதைத் தட்டவும்.

மாற்றங்களைச் செயல்தவிர்த்தல்

வீடியோவில் நீங்கள் செய்த மாற்றங்களைச் செயல்தவிர்த்து அசல் நிலைக்கு வீடியோவை மாற்றியமைக்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோவின் சிறுபடத்தைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுற மெனுவில் எடிட்டர்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வீடியோவில் நீங்கள் செய்த மாற்றங்களை அகற்ற, விருப்பங்கள் மேலும்அதன் பிறகு பழைய நிலைக்கு மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3130652002373030197
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false