பதிப்புரிமை எதிர்ப்பு பற்றிய அடிப்படைகள்

இந்த உள்ளடக்கம் பதிப்புரிமை எதிர்ப்புகள் பற்றியது. சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்புகள் (பதிப்புரிமை எதிர்ப்புகளிலிருந்து வேறுபட்டவை) குறித்த தகவல்களைத் தேடுகிறீர்கள் எனில் எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறியதற்கான எதிர்ப்புகள் பற்றிய அடிப்படைகள் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

நீங்கள் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெற்றால், பதிப்புரிமையாளரின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகச் சட்டப்பூர்வமான பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை அவர் சமர்ப்பித்துள்ளார் என்று அர்த்தமாகும். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை எங்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது அதை மதிப்பாய்வு செய்வோம். அகற்றுதல் கோரிக்கை சரியானதாக இருந்தால், பதிப்புரிமைச் சட்டத்திற்கு இணங்க உங்கள் வீடியோவை YouTubeல் இருந்து அகற்றுவோம்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை செயல்முறை குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் ஒரு பதிப்புரிமை எதிர்ப்பை மட்டுமே ஒரு வீடியோ பெற முடியும். பதிப்புரிமை அல்லாத வேறு காரணங்களுக்காகவும் வீடியோக்களைத் தளத்திலிருந்து அகற்றலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேலும், எதிர்ப்பைப் பெறுவதற்கு Content ID உரிமைகோரல்கள் வழிவகுக்காது.

YouTube Studio உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும்போது என்ன நடக்கும்?

நாம் அனைவரும் தவறுகள் செய்வது இயல்பானதே. முதன்முறையாகப் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறும்போது பதிப்புரிமைப் பள்ளிப் பயிற்சிகளை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும். பதிப்புரிமைக் கொள்கைகளையும் அவை YouTubeல் எப்படி அமலாக்கம் செய்யப்படுகிறது என்பதையும் கிரியேட்டர்கள் புரிந்துகொள்ள பதிப்புரிமைப் பள்ளி உதவுகிறது. பதிப்புரிமைப் பள்ளி நான்கு எளிதான பல தேர்வுக் கேள்விகளைக் கொண்டுள்ளது. எங்கள் பதிப்புரிமைக் கொள்கைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: எங்கள் பதிப்புரிமைக் கொள்கைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்.

செயலிலுள்ள லைவ் ஸ்ட்ரீம் பதிப்புரிமைக்காக அகற்றப்பட்டால், 7 நாட்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியாமல் உங்கள் அணுகல் கட்டுப்படுத்தப்படும்.

3 பதிப்புரிமை எதிர்ப்புகளை நீங்கள் பெற்றால்:

  • உங்கள் கணக்கும் அதனுடன் தொடர்புடைய எந்தச் சேனலும் முடக்கப்படக்கூடும்.
  • உங்கள் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் அகற்றப்படும்.
  • நீங்கள் புதிய சேனல்களை உருவாக்க முடியாது.
கூடுதல் அவகாசம்
உங்கள் சேனல் YouTube கூட்டாளர் திட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தால் 7 நாட்கள் கூடுதல் அவகாசத்திற்கு நீங்கள் தகுதிபெறுவீர்கள். 3 பதிப்புரிமை எதிர்ப்புகளுக்குப் பிறகு, உங்கள் சேனல் முடக்கப்படுவதற்கு முன்பு தேவையான நடவடிக்கைகள் எடுக்க கூடுதலாக 7 நாட்கள் வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில், பதிப்புரிமை எதிர்ப்புகள் காலாவதியாகாது. மேலும் உங்களால் புதிய வீடியோக்களையும் பதிவேற்ற முடியாது. உங்கள் சேனல் தொடர்ந்து செயலில் இருக்கும். மேலும் எதிர்ப்புகளுக்குத் தீர்வுகாண அதை நீங்கள் அணுக முடியும்.

உங்கள் எதிர்ப்பு எண்ணிக்கையை 3க்கும் கீழ் கொண்டுவரக்கூடிய எதிர் அறிவிப்புகளை நீங்கள் சமர்ப்பித்திருந்தால், அவை தீர்க்கப்படும் வரை உங்கள் சேனல் முடக்கப்படாது. இந்த எதிர் அறிவிப்புகள் பதிப்புரிமை உரிமைகோருபவருக்கு அனுப்பப்பட்டால், பதிவேற்றுவதற்கான வசதி மீட்டெடுக்கப்படும். எதிர் அறிவிப்பு உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட்டாலோ அகற்றுதல் கோரிக்கை திரும்பப் பெறப்பட்டாலோ உங்கள் சேனல் பாதிக்கப்படாது.
உங்கள் எதிர்ப்பு பற்றிய தகவல்களைப் பெறுவது எப்படி?
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் உள்ளடக்கம்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வடிப்பான் பட்டி அதன் பிறகு பதிப்புரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கட்டுப்பாடுகள் நெடுவரிசையில் உள்ள பதிப்புரிமை என்பதற்கு மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  5. விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
பதிப்புரிமை எதிர்ப்பைத் தீர்த்தல்

பதிப்புரிமை எதிர்ப்பைத் தீர்க்க மூன்று வழிகள் உள்ளன:

  1. காலாவதியாகும் வரை காத்திருத்தல்: பதிப்புரிமை எதிர்ப்புகள் 90 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். இதுதான் நீங்கள் பெறும் முதல் பதிப்புரிமை எதிர்ப்பு எனில் பதிப்புரிமைப் பள்ளி பயிற்சிகளை நிறைவுசெய்ய வேண்டும்.
  2. திரும்பப் பெறக் கோருதல்: உங்கள் வீடியோவை உரிமை கோரிய நபரைத் தொடர்புகொண்டு பதிப்புரிமை மீறல் தொடர்பான உரிமைகோரலைத் திரும்பப் பெறுமாறு அவரிடம் கேட்கலாம்.
  3. எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்தல்: உங்கள் வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டதாகவோ நியாயமான பயன்பாட்டிற்குத் தகுதிபெற்றதாகவோ நீங்கள் கருதினால் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.
உங்கள் கணக்கை ஃபிஷிங் முயற்சிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். no-reply@youtube.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து மட்டுமே YouTube பதிப்புரிமை எதிர்ப்பு அறிவிப்புகளை அனுப்புகிறோம். உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருந்து இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும்.

மேலும் அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்

பதிப்புரிமை எதிர்ப்புகள் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள YouTube கிரியேட்டர்களுக்கான சேனலின் இந்த வீடியோவைப் பாருங்கள்.

Copyright in YouTube Studio: Addressing Copyright Claims with New Tools, Filters and More

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13095249840434003092
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false