பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

பதிப்புரிமை பெற்ற உங்கள் படைப்பு உங்கள் அனுமதியின்றி YouTubeல் வெளியிடப்பட்டிருந்தால் அதை அகற்றும்படி கேட்டு நீங்கள் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பது சட்டரீதியான செயல்முறையாகும்.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைத் தயார்செய்தல்

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு பின்வருபவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்:

  1. பதிப்புரிமை விதிவிலக்குகள்: நியாயமான பயன்பாடு, நியாயமாகக் கையாளுதல் அல்லது அவற்றைப் போன்ற ஒரு பதிப்புரிமை விதிவிலக்கு பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் இதைச் சரிபார்த்துவிட்டதை உறுதிப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கக்கூடும். உங்கள் பதில் போதுமானதாக இல்லை என்றாலோ பதிப்புரிமை விதிவிலக்கு பொருந்தினாலோ அகற்றுதல் கோரிக்கையில் கண்டறியப்பட்டுள்ள உள்ளடக்கம் அகற்றப்படாது.
  2. தனிப்பட்ட தகவல்: பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்ததும் உங்கள் தொடர்புத் தகவல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யவும்.
  • பதிப்புரிமையாளரோ அவர் சார்பாகச் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டோ அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

திட்டமிடப்பட்ட அகற்றுதல் கோரிக்கைகள்: உங்கள் அகற்றுதல் கோரிக்கை 7 நாட்களில் செயல்படுத்தப்படும் வகையில் திட்டமிடுங்கள். இது பதிவேற்றியவர் தனது சேனலில் பதிப்புரிமை எதிர்ப்பைப் பெறாமல் தவிர்க்க வீடியோவை நீக்குவதற்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கிறது.

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

கம்ப்யூட்டரில் எங்கள் இணையப் படிவத்தை நிரப்புவதே பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையை விரைவாகவும் எளிதாகவும் சமர்ப்பிப்பதற்கான வழியாகும். மின்னஞ்சல், ஃபேக்ஸ், அஞ்சல் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்கிறோம்.

பொய்யான உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். அகற்றுதல் கோரிக்கைக்கான இணையப் படிவத்தைத் தவறாக உபயோகிப்பது (உதாரணம்: பொய்யான தகவல்களைச் சமர்ப்பிப்பது) உங்கள் கணக்கை இடைநீக்குவதற்கோ பிற சட்ட விளைவுகளுக்கோ வழிவகுக்கக்கூடும்.

இணையப் படிவத்திற்குச் செல்ல இந்த பட்டனைக் கிளிக் செய்யவும்:

பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள்

நீங்கள் நேரடியாக YouTube Studioவில் இருந்தும் இணையப் படிவத்திற்குச் செல்லலாம்:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பதிப்புரிமை  என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. புதிய அகற்றுதல் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.

 

வீடியோ அல்லாத உள்ளடக்கம்: சேனல் பேனர் படங்கள் போன்ற வீடியோ அல்லாத உள்ளடக்கத்திற்கான அகற்றுதல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க எங்கள் இணையப் படிவத்தைப் பயன்படுத்த முடியாது. வீடியோ அல்லாத உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பது எப்படி என அறிக.

மீண்டும் பதிவேற்றாமல் தடுத்தல்

நீங்கள் புகாரளிக்கும் வீடியோக்களின் நகல்களை மீண்டும் YouTubeல் பதிவேற்றாமல் தடுப்பதற்கான விருப்பத்தை இணையப் படிவத்தில் தேர்ந்தெடுக்கலாம். இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியும் பதிப்புரிமையாளரின் பெயரும், நகல் வீடியோவை மீண்டும் பதிவேற்ற முயன்றவருடன் பகிரப்படக்கூடும். அகற்றப்பட்ட வீடியோக்கள் மீண்டும் பதிவேற்றப்படுவதைத் தடுப்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் அகற்றுதல் கோரிக்கைகளை நிர்வகித்தல்

இதற்கு முன்பு YouTubeல் நீங்கள் சமர்ப்பித்த பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கைகளைப் பார்க்க:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பதிப்புரிமை  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அகற்றுதல் கோரிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

பதிப்புரிமை பெற்ற படைப்புகள் பலவற்றை நீங்கள் நிர்வகிப்பதுடன் அவற்றை அகற்றுவதற்கான கோரிக்கைகளை அடிக்கடி சமர்ப்பிக்க வேண்டியிருந்தால், அதிக மேம்படுத்தப்பட்ட பதிப்புரிமை நிர்வாகக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தகுதிபெற்றிருக்கக்கூடும். YouTubeன் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகள் குறித்து மேலும் அறிக.

அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும் என்பது உட்பட, அகற்றுதல் கோரிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கை செயல்முறை குறித்த எங்கள் அறிமுகத்தைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17996379670018641823
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false