YouTube அம்சங்களை அறிந்துகொள்ளுதல்

உள்நுழைந்துள்ளீர்களா? உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைப் பொறுத்து உங்களுக்கான YouTube அனுபவம் வெகுவாக மாறுபடும். Google கணக்கை YouTubeல் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

 முகப்பு

Android சாதனத்திற்கான YouTube ஆப்ஸைத் திறந்து உள்நுழைந்ததும் முகப்புப் பக்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கியதும் YouTubeல் உங்கள் விருப்பத்தேர்வுகளையும் செயல்பாடுகளையும் பொறுத்து பரிந்துரைக்கப்படும் வீடியோக்கள் முகப்புப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் பரிந்துரைகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

YouTubeல் உலாவும்போது, முகப்பு  என்பதைத் தட்டி எப்போது வேண்டுமானாலும் முகப்புப் பக்கத்திற்குத் திரும்பலாம்.

 கண்டறிக மெனு

கண்டறிக மெனு  பிரபலமடைபவை மற்றும் இலக்குப் பக்கங்களைக் காட்டுகிறது. பின்வரும் வகைகளிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்: பிரபலமடைபவை, ஷாப்பிங்கேமிங், இசை, விளையாட்டுசெய்திகள், திரைப்படங்கள் & ஷோக்கள், நேரலை,  ஃபேஷன் & அழகு, பாட்காஸ்ட்கள்YouTube Premium, YouTube Studio, YouTube Kids, YouTube TV, YouTube Music மற்றும் கோர்ஸ்கள் அல்லது கற்றல் (காட்டப்படும் வகைகள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்).

சந்தாக்கள்

நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களின் புதிய வீடியோக்களை 'சந்தாக்கள்' பிரிவில் பார்க்கலாம். நீங்கள் குழு சேர்ந்துள்ள சேனல்களின் பட்டியலைப் பக்கத்தின் மேற்பகுதியிலும் பார்க்க முடியும். சேனல் ஆர்ட்வொர்க் மீது தட்டினால் சேனலுக்குச் செல்ல முடியும். சேனல்களில் குழுசேர்தல் குறித்து மேலும் அறிக.

 அறிவிப்புகள்

அறிவிப்புகள் பிரிவில் உங்கள் மெசேஜ்களையும் அறிவிப்புகளையும் பார்க்கலாம். உங்கள் அறிவிப்புகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

 லைப்ரரி

இதுவரையிலானவை, உங்கள் வீடியோக்கள், பர்ச்சேஸ்கள், பிறகு பார்க்க எனும் பிளேலிஸ்ட், பிளேலிஸ்ட்கள் போன்ற தகவல்களை 'லைப்ரரி' பிரிவில் பார்க்கலாம். உங்கள் லைப்ரரியை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

 அலைபரப்பு

உங்களிடம் Chromecast, ஸ்மார்ட் டிவி அல்லது ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கும் சாதனம் இருந்தால் 'அலைபரப்பு ' பட்டனைப் பயன்படுத்தி YouTube ஆப்ஸை இணைக்கலாம். டிவியில் YouTube பார்ப்பதற்குச் சாதனங்களை எப்படி இணைப்பது என்பது குறித்து அறிக.

 உருவாக்கு

வீடியோ ரெக்கார்டு செய்யவோ லைவ் ஸ்ட்ரீமைத் தொடங்கவோ உங்கள் மொபைலில் இருந்து வீடியோக்களைப் பதிவேற்றவோ 'உருவாக்கு ' என்பதைத் தட்டவும். வீடியோக்களைப் பதிவேற்றுதல், லைவ் ஸ்ட்ரீம்களைத் தொடங்குதல் ஆகியவை குறித்து மேலும் அறிக.

 Shorts

YouTube முழுவதிலும் உள்ள Shorts வீடியோக்களை Shorts  பிரிவில் பார்க்கலாம். Shorts குறித்து மேலும் அறிக.

தேடுக

நீங்கள் YouTubeல் பார்க்க விரும்பும் வீடியோக்களைக் கண்டறிய 'தேடல்' அம்சம் உதவுகிறது. தொடங்குவதற்கு, தேடுக என்பதைத் தட்டி நீங்கள் தேட விரும்புவதை உள்ளிட்ட பிறகு வீடியோக்கள், சேனல்கள்/பிளேலிஸ்ட்கள் ஆகியவற்றின்படி முடிவுகளை வடிகட்டவும். YouTubeல் உங்கள் விருப்பத்தேர்வுகளையும் செயல்பாட்டையும் பொறுத்து தேடல் முடிவுகள் இருக்கும். உங்கள் தேடல் முடிவுகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

சுயவிவரப் படம்

'நீங்கள்' பிரிவிற்குச் செல்ல, கீழ் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தை  தட்டவும். அங்கே நீங்கள் YouTubeல் பார்த்த, பதிவிறக்கிய அல்லது பர்ச்சேஸ் செய்த அனைத்தையும் பார்க்கலாம். இந்தப் பக்கத்தில் கணக்கு தொடர்பான அமைப்புகளையும் சேனல் குறித்த தகவல்களையும் பார்க்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2257309691315608917
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false