YouTube பரிந்துரைக்கும் பதிவேற்ற என்கோடிங் அமைப்புகள்

YouTube Studio உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும். அணுகலைப் பெற, உங்கள் YouTube கூட்டாளர் நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

YouTubeல் உங்கள் வீடியோக்களுக்கான பரிந்துரைக்கப்படும் பதிவேற்ற என்கோடிங் அமைப்புகள் இதோ. 

கண்டெய்னர்: MP4
  • எடிட் பட்டியல்கள் எதுவுமில்லை (அல்லது வீடியோ சரியாகச் செயலாக்கப்படாமல் போகலாம்)
  • ஃபைலின் தொடக்கத்தில் மூவ் ஆட்டமை (moov atom) வைத்தல் (விரைவுத் தொடக்கம்)
ஆடியோ கோடெக்: AAC-LC
  • சேனல்கள்: ஸ்டீரியோ அல்லது ஸ்டீரியோ + 5.1
  • சாம்பிள் ரேட் 96khz அல்லது 48khz
வீடியோ கோடெக்: H.264
  • புராகிரஸிவ் ஸ்கேன் (இண்டர்லேஸிங் இல்லை)
  • ஹை புரொஃபைல்
  • 2 தொடர்ச்சியான B ஃபிரேம்கள்
  • மூடப்பட்ட GOP. பாதி ஃபிரேம் வீதத்தின் GOP.
  • CABAC
  • மாறக்கூடிய பிட் விகிதம். பிட் விகித வரம்பு தேவையில்லை, எனினும் குறிப்புக்காகப் பரிந்துரைக்கப்படும் பிட் விகிதங்களைக் கீழே வழங்குகிறோம்
  • குரோமா சப்சாம்பிளிங்: 4:2:0
ஃபிரேம் வீதம்

உள்ளடக்கம் ரெக்கார்டு செய்யப்பட்ட அதே ஃபிரேம் வீதத்தில் என்கோடிங் செய்யப்பட்டுப் பதிவேற்றப்பட வேண்டும்.

பொதுவான ஃபிரேம் வீதங்கள்: வினாடிக்கு 24, 25, 30, 48, 50, 60 ஃபிரேம்கள் உள்ளிட்டவை (பிற ஃபிரேம் வீதங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன).

இண்டர்லேஸிங் செய்யப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதற்கு முன் டீஇண்டர்லேஸிங் செய்யவேண்டும். உதாரணத்திற்கு, 1080i60 உள்ளடக்கத்தை 1080p30க்கு டீஇண்டர்லேஸிங் செய்யவேண்டும். வினாடிக்கு 60 இண்டர்லேஸிங் செய்யப்பட்ட புலத்தை வினாடிக்கு 30 புராகிரஸிவ் ஃபிரேம்களாக டீஇண்டர்லேஸிங் செய்யவேண்டும்.

பிட் விகிதம்

கீழேயுள்ள பிட் விகிதங்கள் பதிவேற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆடியோ இயக்க பிட் விகிதம் வீடியோ தெளிவுத்திறனுடன் தொடர்பற்றது.

SDR பதிவேற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வீடியோ பிட் விகிதங்கள்

4Kயில் புதிய 4K பதிவேற்றங்களைப் பார்க்க, VP9ஐ ஆதரிக்கும் உலாவியையோ சாதனத்தையோ பயன்படுத்தவும்.

வகை வீடியோ பிட் விகிதம், நிலையான ஃபிரேம் வீதம்
(24, 25, 30)
வீடியோ பிட் விகிதம், அதிகபட்ச ஃபிரேம் வீதம்
(48, 50, 60)
8K 80 - 160 Mbps 120 முதல் 240 Mbps
2160p (4K) 35–45 Mbps 53–68 Mbps
1440p (2K) 16 Mbps 24 Mbps
1080p 8 Mbps 12 Mbps
720p 5 Mbps 7.5 Mbps
480p 2.5 Mbps 4 Mbps
360p 1 Mbps 1.5 Mbps

HDR பதிவேற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வீடியோ பிட் விகிதங்கள்

வகை வீடியோ பிட் விகிதம், நிலையான ஃபிரேம் வீதம்
(24, 25, 30)
வீடியோ பிட் விகிதம், அதிகபட்ச ஃபிரேம் வீதம்
(48, 50, 60)
8K 100 - 200 Mbps 150 முதல் 300 Mbps
2160p (4K) 44–56 Mbps 66–85 Mbps
1440p (2K) 20 Mbps 30 Mbps
1080p 10 Mbps 15 Mbps
720p 6.5 Mbps 9.5 Mbps
480p

ஆதரிக்கப்படாது

ஆதரிக்கப்படாது
360p ஆதரிக்கப்படாது ஆதரிக்கப்படாது

பதிவேற்றங்களுக்கான பரிந்துரைக்கப்படும் ஆடியோ பிட் விகிதங்கள்

வகை ஆடியோ பிட் விகிதம்
மோனோ 128 Kbps
ஸ்டீரியோ 384 kbps
5.1 512 kbps
வீடியோ தெளிவுத்திறன் மற்றும் தோற்ற விகிதம்

கம்ப்யூட்டரில் YouTubeக்கான நிலையான தோற்ற விகிதம் 16:9 ஆகும். செங்குத்து, சதுரம் போன்ற பிற தோற்ற விகிதங்களில் பதிவேற்றும்போது, வீடியோவின் அளவிற்கு ஏற்றவாறு பிளேயர் தானாகவே தன்னை மாற்றியமைக்கும். தோற்ற விகிதம் மற்றும் சாதனத்தின் அடிப்படையில் சிறந்த பார்க்கும் அனுபவத்தை இந்த அமைப்பு வழங்குகிறது.

வீடியோ தெளிவுத்திறனையும் தோற்ற விகிதங்களையும் எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதை அறிக.

வண்ணப்பகுதி

SDR பதிவேற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வண்ணப்பகுதி

SDR பதிவேற்றங்களுக்கு நிலையான வண்ணப்பகுதியாக BT.709ஐ YouTube பரிந்துரைக்கிறது:
வண்ணப்பகுதி வண்ணப் பரிமாற்றப் பண்புகள் (TRC) முதன்மை வண்ணங்கள் வண்ண மேட்ரிக்ஸ் மதிப்புகள்
BT.709 BT.709 (H.273 மதிப்பு: 1) BT.709 (H.273 மதிப்பு 1) BT.709 (H.273 மதிப்பு 1)


வீடியோவைச் செயலாக்குவதற்கு முன்பு ஒரே மாதிரி செயல்படும் வண்ண மேட்ரிக்ஸ்களையும் முதன்மை வண்ணங்களையும் YouTube தரநிலைப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, BT.601 மற்றும் BT.709 TRC ஒரே மாதிரியானவை. YouTube அவற்றை BT.709 ஆக ஒன்றாக்குகிறது. அல்லது BT.601 NTSC மற்றும் PAL ஒரே மாதிரி செயல்படும் வண்ண மேட்ரிக்ஸ்களைக் கொண்டுள்ளன. YouTube இவற்றை BT.601 NTSC ஆக ஒன்றாக்குகிறது. கூடுதலாக, வண்ணப்பகுதி மதிப்புகளை எடுத்துக்கொள்வதற்கு YouTube பின்வரும் செயல்களை முன்னெடுக்கக்கூடும்:

பதிவேற்ற வண்ணப்பகுதி YouTube செயல்
பதிவேற்ற வண்ணப்பகுதி குறிப்பிடப்படாத TRC ஐக் கொண்டுள்ளது. BT.709 TRCஐ யூகிக்கிறது.
பதிவேற்ற வண்ணப்பகுதி தெரியாத அல்லது குறிப்பிடப்படாத வண்ண மேட்ரிக்ஸையும் முதன்மை வண்ணங்களையும் கொண்டுள்ளது. BT.709 வண்ண மேட்ரிக்ஸையும் முதன்மை வண்ணங்களையும் யூகிக்கிறது.
பதிவேற்ற வண்ணப்பகுதி BT.601 மற்றும் BT.709 முதன்மை வண்ணங்களையும் மேட்ரிக்ஸையும் குறிப்பிட்ட மதிப்பில் கலக்கிறது. முதன்மையான வண்ணங்களை மாற்றவும் அவற்றைச் சீராக்கவும் வண்ண மேட்ரிக்ஸைப் பயன்படுத்துகிறது.
பதிவேற்ற வண்ணப்பகுதி BT.601 மற்றும் BT.709 முதன்மை வண்ணங்களையும் மேட்ரிக்ஸையும் கலக்கிறது. மேலும் இதில் முதன்மை வண்ணங்கள் அல்லது மேட்ரிக்ஸ் குறிப்பிடப்படாத ஒன்றாக உள்ளது. குறிப்பிடப்படாததை மாற்றி அமைக்க முதன்மை வண்ணங்கள்/மேட்ரிக்ஸின் குறிப்பிட்ட மதிப்பைப் பயன்படுத்துகிறது.


பதிவேற்ற வண்ணப்பகுதியைத் தரநிலைப்படுத்திய பிறகு BT.709 அல்லது BT.601 பொருந்துவதையும் வண்ணப்பகுதி வழியே செல்வதையும் YouTube சரிபார்க்கும். அவ்வாறு இல்லையெனில், YouTube பிக்சல் மதிப்புகளை மேப் செய்து ஆதரிக்கப்படாத வண்ணப்பகுதிகளை BT.709 ஆக மாற்றும்.

கவனத்திற்கு: ஒரே மாதிரியான வண்ணங்களைக் காட்டுவதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்ப்பதற்காக, ஆதரிக்கப்படும் HDR பரிமாற்றச் செயல்பாடின்றி உயர் வண்ண அடர்த்தி தேவைப்படும் முதன்மை வண்ணங்களை YouTube மாற்றுகிறது (உதாரணத்திற்கு, BT.2020லிருந்து 8-bit BT.709க்கு). YouTube முழு வண்ண வரம்பை வரம்பிடப்பட்ட வண்ண வரம்பாக மாற்றுகிறது.
எச்சரிக்கை: பதிவேற்றங்களில் RGB வண்ண மேட்ரிக்ஸை YouTube பரிந்துரைப்பதில்லை. இந்தச் சூழலில், தரநிலைப்படுத்துவதற்கு முன்பு YouTube முதலில் வண்ண மேட்ரிக்ஸைக் குறிப்பிடப்படாதது என அமைக்கிறது. பின்பு, தரநிலைப்படுத்தும் போது முதன்மை வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ண மேட்ரிக்ஸை யூகிக்கும். sRGB TRC ஆனது BT.709 TRC என மாற்றப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். FFmpeg வண்ணப்பகுதி மாற்ற வடிப்பானால் முதன்மை வண்ணங்கள்/மேட்ரிக்ஸ்/TRC ஆதரிக்கப்படவில்லை எனில் YouTube அதை BT.709 ஆக மீண்டும் குறியிடும்.

HDR பதிவேற்றங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் வண்ணப்பகுதி

HDR வீடியோக்கள் பதிவேற்றம் எனும் கட்டுரையைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10579500412407203192
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false