வீடியோக்களையும் பிளேலிஸ்ட்களையும் உட்பொதித்தல்

உட்பொதிப்பது மூலம் இணையதளத்திலோ வலைப்பதிவிலோ YouTube வீடியோ அல்லது பிளேலிஸ்ட்டைச் சேர்க்கலாம்.

நீங்கள் ஒரு கல்வியாளர் எனில், உங்கள் வகுப்புகளுக்கான YouTube உள்ளடக்கத்தை எவ்வாறு உட்பொதிப்பது என்பது குறித்த தகவல்களுக்கு உங்கள் கல்வித் தொழில்நுட்ப பிளாட்ஃபார்மைப் பாருங்கள்.

YouTube API சேவை விதிமுறைகளும் டெவெலப்பர் பாலிசிகளும் YouTube உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் அனைத்து அணுகலுக்கும் உபயோகத்திற்கும் பொருந்தும்.

வீடியோ/பிளேலிஸ்ட்டை உட்பொதித்தல்

  1. கம்ப்யூட்டரில், நீங்கள் உட்பொதிக்க விரும்பும் YouTube வீடியோ/பிளேலிஸ்ட்டிற்குச் செல்லவும்.
  2. பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பகிர்வு விருப்பங்களின் பட்டியலில் உட்பொதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. காட்டப்படும் பெட்டியிலுள்ள HTML குறியீட்டை நகலெடுக்கவும்.
  5. உங்கள் இணையதள HTMLலில் குறியீட்டை ஒட்டவும்.
  6. நெட்வொர்க் நிர்வாகிகளுக்கு: ஃபயர்வால் ஏற்புப் பட்டியலில் youtube.comமை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கும்.
  7. முக்கியமானது: உங்கள் இணையதளமோ ஆப்ஸோ முதன்மையாகச் சிறுவர்களுக்குரியதாக இருந்து அதில் YouTube வீடியோக்களை உட்பொதித்தால், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் தளத்தையோ ஆப்ஸையோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்று நீங்களாகவே குறிப்பிட வேண்டும். இப்படிக் குறிப்பிடுவதன் மூலம் இந்தத் தளங்களிலோ ஆப்ஸிலோ பிரத்தியேக விளம்பரங்களை Google காட்டாது என்பது உறுதிப்படுத்தப்படுவதோடு உட்பொதிக்கப்பட்ட பிளேயரில் சில அம்சங்களும் முடக்கப்படும்.
கவனத்திற்கு: வயதுக் கட்டுப்பாடு உள்ள வீடியோக்களைப் பெரும்பாலான மூன்றாம் தரப்பு இணையதளங்களில் பார்க்க முடியாது. இந்த வீடியோக்கள் இயக்கப்படும்போது பார்வையாளர்கள் YouTube பக்கத்திற்கே மீண்டும் செல்வார்கள்.

வீடியோவை உட்பொதிப்பதற்கான விருப்பங்களை நிர்வகித்தல்

தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறையை இயக்குதல்

YouTube உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறை இயக்கப்பட்டால், ஒருவர் பார்க்கும் உட்பொதிக்கப்பட்ட YouTube வீடியோக்களின் அடிப்படையில் அவரின் YouTube தேடல்கள் மாறாமல் இருக்கும். அதாவது, உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறையில் காட்டப்படும் வீடியோவின் பார்வை, உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறைக்குள்ளோ பார்வையாளர் YouTubeல் பெறும் அடுத்தடுத்த அனுபவங்களிலோ YouTube உலாவல் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்தப்படாது.

உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறையில் காட்டப்படும் வீடியோவிற்கு விளம்பரங்கள் வழங்கப்பட்டால், அவையும் பிரத்தியேகப்படுத்தப்படாத விளம்பரங்களாகவே இருக்கும். அதுமட்டுமன்றி, உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறையில் ஒருவர் பார்க்கும் வீடியோ உங்கள் தளத்திற்கோ ஆப்ஸுக்கோ வெளியில் அவருக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்தப்படாது.

YouTube API சேவை விதிமுறைகளும் டெவெலப்பர் பாலிசிகளும் YouTube உட்பொதிக்கப்பட்ட பிளேயரை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பொருந்தும் என நினைவூட்டுகிறோம்.

தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறையைப் பயன்படுத்த:

  1. உங்கள் HTMLலில் உள்ள உட்பொதி URLலுக்கான டொமைனை https://www.youtube.com என்பதிலிருந்து https://www.youtube-nocookie.com என மாற்றவும்.
  2. நெட்வொர்க் நிர்வாகிகளுக்கு: ஃபயர்வால் ஏற்புப் பட்டியலில் youtube-nocookie.comமை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கும்.
  3. ஆப்ஸில் பயன்படுத்த, உட்பொதிக்கப்பட்ட பிளேயரின் WebView நேர்வைப் பயன்படுத்தவும். இணையதளத்திலுள்ள உட்பொதிக்கப்பட்ட பிளேயர்களுக்கு மட்டுமே தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறை கிடைக்கும்.
  4. முக்கியமானது: உங்கள் இணையதளமோ ஆப்ஸோ முதன்மையாகச் சிறுவர்களுக்குரியதாக இருந்தால், உங்கள் YouTube வீடியோக்களைத் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட பயன்முறைப் பிளேயரில் உட்பொதித்திருந்தாலும் கூட YouTube API சேவை விதிமுறைகளுக்கும், டெவெலப்பர் பாலிசிகளுக்கும் இணங்க இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் தளத்தையோ ஆப்ஸையோ 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்று நீங்களாகவே குறிப்பிட வேண்டும்.

உதாரணம்:

இதற்கு முன்:

<iframe width="1440" height="762"

src="https://www.youtube.com/embed/7cjVj1ZyzyE"

frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

இதற்குப் பின்:

<iframe width="1440" height="762" src="https://www.youtube-nocookie.com/embed/7cjVj1ZyzyE"

frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

கவனத்திற்கு: உட்பொதிக்கப்பட்ட வீடியோவிற்கு வெளியே கிளிக் செய்தாலோ தட்டினாலோ அது பார்வையாளரை வேறொரு இணையதளத்திற்கோ ஆப்ஸுக்கோ கொண்டு சென்றால், அந்த இணையதளம்/ஆப்ஸின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப பார்வையாளர்களின் நடவடிக்கைகளை அந்த இணையதளமோ ஆப்ஸோ கண்காணிக்கக்கூடும்.

உட்பொதிக்கப்பட்ட வீடியோ தானாக இயங்கும்படி அமைத்தல்

உட்பொதிக்கப்பட்ட வீடியோ தானாக இயங்க, வீடியோ ஐடிக்கு ("embed/" என்பதற்கு அடுத்து வரும் எழுத்துகள்) அடுத்திருக்கும் வீடியோவின் உட்பொதிக் குறியீட்டில் "&autoplay=1" என்பதைச் சேர்க்கவும்.

தானாக இயங்கும் உட்பொதிக்கப்பட்ட வீடியோக்கள் அவற்றின் பார்வைகளை அதிகரிக்காது.

உதாரணம்:

<iframe width="560" height="315"
src="https://www.youtube.com/embed/D6Ac5JpCHmI?&autoplay=1"frameborder="0"
allowfullscreen></iframe>
உட்பொதிக்கப்பட்ட வீடியோக்களைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குதல்

குறிப்பிட்ட இடத்திலிருந்து வீடியோவைத் தொடங்க, வீடியோவின் உட்பொதிக் குறியீட்டில் “?start=” என்பதைச் சேர்க்கவும். இதையடுத்து எந்த நேரத்திலிருந்து வீடியோ தொடங்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை வினாடிகளில் கொடுக்கவும்.

உதாரணமாக, 1 நிமிடம் 30 வினாடிகளிலிருந்து வீடியோ தொடங்க வேண்டுமெனில் உங்கள் உட்பொதிக் குறியீடு இவ்வாறு இருக்கவேண்டும்:

<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/UkWd0azv3fQ?start=90" width="420"></iframe>
உட்பொதிக்கப்பட்ட வீடியோவிற்கு வசனங்களைச் சேர்த்தல்

உட்பொதிக்கப்பட்ட வீடியோக்களில் தானாக வசனங்கள் தோன்றுவதற்கு, வீடியோவின் உட்பொதிக் குறியீட்டில் "&cc_load_policy=1" என்பதைச் சேர்க்கவும்.

உட்பொதிக்கப்பட்ட வீடியோவிற்கு எந்த மொழியில் வசனங்கள் தோன்ற வேண்டுமென்றும் நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் உட்பொதிக்க விரும்பும் வீடியோவின் வசன மொழியைக் குறிப்பிட, வீடியோவின் உட்பொதிக் குறியீட்டில் "&cc_lang_pref=fr&cc_load_policy=1" என்பதைச் சேர்க்கவும்.

  • வீடியோக்களில் காட்டப்படும் வசனங்களுக்கான மொழியை "cc_lang_pref" அமைக்கும்.
  • இயல்பாக வசனங்களை "cc_load_policy=1" இயக்கும்.
  • "fr" என்பது ஃபிரெஞ்சு மொழியின் குறியீடாகும். ISO 639-1 standard பக்கத்தில் 2 எழுத்து மொழிக் குறியீடுகளைப் பார்க்கலாம்.
உங்கள் வீடியோக்களுக்கான உட்பொதித்தலை முடக்குதல்
நீங்கள் பதிவேற்றிய வீடியோக்களை வேறு தளங்களில் உட்பொதிக்க மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது என்று கருதினால் இவற்றைப் பின்பற்றவும்:
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவிலுள்ள உள்ளடக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நிர்வகிக்க விரும்பும் வீடியோவுக்கு அடுத்துள்ள 'விவரங்கள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கீழுள்ள, மேலும் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. “உட்பொதிக்க அனுமதி” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கிச் சேமிக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12942837550848979711
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false