YouTube சேனலை உருவாக்குதல்

Google கணக்கு மூலம் வீடியோக்களைப் பார்க்கலாம், அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கலாம், சேனல்களில் குழு சேரலாம். நீங்கள் ஒரு YouTube சேனலை உருவாக்கும் வரை, YouTubeல் உங்கள் செயல்பாடு மற்றவர்களுக்குக் காட்டப்படாது. உங்களிடம் Google கணக்கு இருந்தாலும்கூட வீடியோக்களைப் பதிவேற்றவோ கருத்து தெரிவிக்கவோ பிளேலிஸ்ட்களை உருவாக்கவோ ஒரு YouTube சேனலை நீங்கள் உருவாக்க வேண்டும்.

YouTube இணையதளத்திலோ YouTube மொபைல் தளத்திலோ உங்கள் சேனலை உருவாக்கலாம்.

குறிப்பு: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறைகளில் இந்த அம்சம் கிடைக்காமல் போகலாம். மேலும் அறிக.

YouTube சேனலை உருவாக்குவது & அதைப் பிரத்தியேகப்படுத்துவதற்கான வழிமுறை (கிரியேட்டருக்கான அடிப்படைகள்)

தனிப்பட்ட சேனலை உருவாக்குதல்

உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் மட்டுமே நிர்வகிக்கக்கூடிய ஒரு சேனலை உருவாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

  1. கம்ப்யூட்டரிலோ மொபைல் தளத்திலோ YouTubeல் உள்நுழையவும்.
  2. சுயவிவரப் படம் அதன் பிறகுசேனலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஒரு சேனலை உருவாக்குமாறு கேட்கப்படுவீர்கள்.
  4. சேனலை உருவாக்க, உங்கள் Google கணக்கின் பெயர் மற்றும் படத்துடன் விவரங்களைச் சரிபார்த்து உறுதிசெய்யவும்.
கவனத்திற்கு: சில சமயங்களில் (எ.கா. மொபைலில் கருத்தை இடுகையிடுதல் போன்ற முறைகளின் மூலம் ஒரு சேனலை உருவாக்குதல்), நீங்கள் தேர்வுசெய்த சேனல் பெயரின் அடிப்படையில் YouTube உங்களுக்கு ஒரு ஹேண்டிலை தானாக ஒதுக்கக்கூடும். நீங்கள் தேர்வுசெய்துள்ள சேனல் பெயரை ஹேண்டிலாக மாற்ற முடியாத பட்சத்தில் ரேண்டமாக உங்களுக்கு ஹேண்டில் ஒதுக்கப்படலாம். Studioவிலோ youtube.com/handle எனும் இணைப்பிற்குச் சென்றோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஹேண்டிலைப் பார்க்கலாம் மாற்றலாம்.

பிசினஸ் அல்லது வேறு பெயரில் சேனலை உருவாக்குதல்

ஒன்றுக்கும் மேற்பட்ட நிர்வாகி அல்லது உரிமையாளரைக் கொண்ட சேனலை உருவாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் Google கணக்கு அல்லாத வேறு பெயரை YouTubeல் பயன்படுத்த விரும்பினால், உங்கள் சேனலை பிராண்டு கணக்குடன் இணைக்கலாம். பிராண்டு கணக்குகளைப் பற்றி மேலும் அறிக.

  1. கம்ப்யூட்டரிலோ மொபைல் தளத்திலோ YouTubeல் உள்நுழையவும்.
  2. உங்கள் சேனல் பட்டியலுக்குச் செல்லவும்.
  3. புதிய சேனலை உருவாக்கவும் அல்லது ஏற்கெனவே உள்ள பிராண்டு கணக்கைப் பயன்படுத்தவும்:
    • புதிய சேனலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து சேனலை உருவாக்கவும்.
    • நீங்கள் ஏற்கெனவே நிர்வகிக்கும் பிராண்டு கணக்கிற்கு YouTube சேனலை உருவாக்க, பட்டியலிலிருந்து பிராண்டு கணக்கைத் தேர்வுசெய்யவும். இந்த பிராண்டு கணக்கில் ஏற்கெனவே ஒரு சேனல் இருந்தால், புதிய சேனலை உருவாக்க முடியாது. பட்டியலிலிருந்து பிராண்டு கணக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, அதனுடன் தொடர்புடைய சேனலுக்கு மாற்றப்படுவீர்கள்.
  4. உங்கள் புதிய சேனலுக்குப் பெயரிட விவரங்களை நிரப்பவும். பிறகு, உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். இதன்மூலம் புதிய பிராண்டு கணக்கு உருவாக்கப்படும்.
  5. சேனல் நிர்வாகியைச் சேர்க்க, சேனல் உரிமையாளர்களையும் நிர்வாகிகளையும் மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பிசினஸ் அல்லது வேறு பெயரில் YouTube சேனலைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3282791569637501271
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false