YouTubeன் போட்டி தொடர்பான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

YouTubeல் நடத்தப்படுகின்ற அல்லது YouTubeஐப் பயன்படுத்துகின்ற அனைத்துப் போட்டிகளும் கீழேயுள்ள விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும். மேலும், எங்கள் தனியுரிமைக் கொள்கையுடன் முரண்படும் வகையில் உங்கள் போட்டியை நடத்தக்கூடாது. அந்த உள்ளடக்கமும் YouTubeன் சேவை விதிமுறைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களுடன் முரண்படக்கூடாது.

விளம்பர யூனிட்களில் போட்டிகளை நடத்த YouTube அனுமதிப்பதில்லை. போட்டி பின்வரும் விதிகளுக்கு இணங்கினால் YouTube பிளாட்ஃபார்மில் உள்ள உங்கள் உள்ளடக்கம் மூலம் போட்டிகளை நீங்கள் நடத்தலாம்.

I. பொதுவான கட்டுப்பாடுகளும் தேவைகளும்:

  1. உங்கள் போட்டிக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
  2. YouTubeல் உங்கள் போட்டியானது தொடர்புடைய அனைத்து ஃபெடரல், மாகாணம் மற்றும் உள்ளூர் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு (அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் உட்பட) இணங்க வேண்டும்.
  3. உங்கள் போட்டியானது எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறவோ அவ்வாறு செய்வதற்கு ஊக்குவிக்கவோ கூடாது. மேலும் எந்தவொரு சட்டத்திற்குப் புறம்பான செயல்பாட்டில் ஈடுபடவும் ஊக்குவிக்கக்கூடாது.
  4. பார்வையாளர் போட்டியில் பங்கேற்பது தொடர்பான அனைத்து உரிமைகளையும் உங்களுக்கு அளிக்குமாறு அல்லது உரிமையை உங்களுக்குப் பரிமாற்றுமாறு நீங்கள் கேட்க முடியாது.
  5. உங்கள் போட்டியில் பங்கேற்பதற்குக் கட்டணம் எதுவும் பெறக்கூடாது (லாட்டரி தொடர்பான உங்கள் உள்ளூர் சட்டத்தை நினைவில் கொள்ளவும்!).
  6. YouTube சேவையுடனான அசல் பார்வையாளர் ஈடுபாட்டைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்த, நீங்களும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் YouTube சேவையிலுள்ள அளவீடுகளை மாற்றக் கூடாது. இந்த அளவீடுகளில் பார்வைகள், விருப்பங்கள், விருப்பமின்மைகள், சந்தாதாரர்கள் எண்ணிக்கை போன்றவை அடங்கும்.
  7. YouTubeன் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி உங்கள் போட்டியுடன் YouTubeஐ இணைக்கவோ தொடர்புபடுத்தவோ கூடாது. YouTube உங்கள் போட்டியுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையது அல்லது அதனைப் பரிந்துரைக்கிறது என வெளிப்படையாகக் கூறுவதையும் அதுபோன்ற அனுமானத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்வதையும் இந்த விதி தடைசெய்கிறது. இதுமட்டுல்லாது மேலும் பலவற்றையும் இந்த விதி தடைசெய்கிறது.

II. உங்கள் போட்டியின் அதிகாரப்பூர்வ விதிகள்:

  1. இவற்றை உள்ளடக்கிய "அதிகாரப்பூர்வ விதிகள்" தொகுப்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்:
    அ. YouTube சமூக வழிகாட்டுதல்களுக்கான இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத போட்டியாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
    ஆ. அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் உட்பட பொருந்தக்கூடிய அனைத்து ஃபெடரல், மாகாணம் மற்றும் உள்ளூர் சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் படி அனைத்து வெளியிடுதல்களும் தேவை எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
    இ. போட்டி விதிமுறைகள் YouTube சேவை விதிமுறைகளுடன் முழுவதும் இணங்கியும் அவற்றைப் பின்பற்றியும் இருக்க வேண்டும்.
  2. உங்கள் அதிகாரப்பூர்வ விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, போட்டி நடத்தப்படுவதோடு அனைத்துப் பரிசுகளும் வழங்கப்பட வேண்டும்.
  3. உங்கள் போட்டி விதிகள் மற்றும் அனைத்து வகையிலான போட்டி நிர்வாகத்திற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.
  4. உங்கள் போட்டியின் ஸ்பான்சர் YouTube இல்லை என்பதையும் உங்கள் போட்டியுடன் தொடர்புடைய பொறுப்புகள் அனைத்திலும் இருந்து பார்வையாளர்கள் YouTubeஐ விடுவிக்க வேண்டும் என்பதையும் உங்கள் விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  5. உங்கள் அதிகாரப்பூர்வ விதிகளில் சட்டத்திற்கு இணங்கும் தனியுரிமை அறிக்கையை நீங்கள் சேர்க்க வேண்டும். போட்டிக்காக நீங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பதையும் அத்தகைய பயன்பாட்டுக்கு இணங்குவதையும் இந்த அறிவிப்பு விளக்குகிறது.

பொறுப்புதுறப்பு: நாங்கள் உங்கள் வழக்கறிஞர்கள் அல்ல, இங்குள்ள தகவல்கள் சட்டப்பூர்வ அறிவுரையும் அல்ல. தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே நாங்கள் இதை வழங்குகிறோம். சட்டப்பூர்வமாகப் போட்டியை நடத்துவதற்கு உங்கள் நாட்டின்/மாநிலத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆலோசனை பெறுமாறு பரிந்துரைக்கிறோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11988064548151784571
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false