ஏன் YouTube எனது வீடியோக்களை 'தனிப்பட்டவை' என மாற்றியுள்ளது?

சில சூழல்களில், உங்கள் சேனலில் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறியும்போது, வீடியோக்களை ஹேக்கர் பதிவேற்றியதாக நாங்கள் நினைத்தால் அவற்றை 'தனிப்பட்டவை' என அமைப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்கக்கூடும். உங்கள் சேனலையும் சமூகத்தையும் சிறப்பாகப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

உங்கள் வீடியோக்களில் ஏதேனுமொன்றை 'தனிப்பட்டது' என நாங்கள் அமைத்தால், உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்போம். கூடுதலாக, நீங்களும் எங்களின் YouTube சமூகமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய உங்கள் கணக்கிலிருந்து உங்களை வெளியேற்றுவோம்.

நான் என்ன செய்ய வேண்டும்?

வீடியோக்களை வெளியிட்டது நீங்கள் எனில்

தனிப்பட்ட வீடியோக்களை மீண்டும் பொதுவில் வெளியிடலாமா வேண்டாமா என முடிவுசெய்வதற்கு முன்பு அவற்றைப் பாருங்கள். வீடியோக்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன என நீங்கள் நினைத்தால், அவற்றை 'பொது' என்று மாற்றிக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் வீடியோக்களைப் பொதுவில் மாற்றவில்லை எனில், வேறு காரணங்களுக்காக வீடியோ தனிப்பட்டதாகக் குறிக்கப்படக்கூடும். தொடர்பில்லாத அல்லது தவறாக வழிநடத்தும் குறிச்சொற்களைப் பயன்படுத்துவதன் காரணமாக 'தனிப்பட்டவை' என அமைக்கப்பட்ட வீடியோக்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

வீடியோக்களை நீங்கள் வெளியிடவில்லை எனில்

  1. studio.youtube.com தளத்திற்குச் சென்று நீங்கள் பதிவேற்றாத வீடியோக்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீக்கவும். தனிப்பட்ட வீடியோக்களாக இருந்தாலும்கூட சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் பதிவேற்றாத வீடியோவிற்கு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
  2. உங்கள் Google கணக்கில் பாதுகாப்புச் சரிபார்ப்பைச் செயல்படுத்தவும் மற்றும் ஏதேனும் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். கடவுச்சொல்லை மாற்றுதல், பழைய சாதனங்களை அகற்றுதல் போன்றவை பரிந்துரைக்கப்படும் செயல்பாடுகளில் அடங்கும்.
  3. யாருக்கெல்லாம் உங்கள் சேனலுக்கான அணுகல் உள்ளது என்பதைப் பார்க்கவும். தேவையற்ற பயனர்கள் யாரும் உங்கள் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சேனல் அனுமதிகளைப் பார்க்கவும்.
  4. பேனர், வீடியோ விளக்கங்களில் உள்ள இணைப்புகள், பின் செய்யப்பட்ட கருத்துகள் போன்ற வேறு எதையும் உங்கள் சேனலில் ஹேக்கர் மாற்றியிருக்கிறாரா என்று பார்க்கவும்.

எங்கள் கிரியேட்டர் பாதுகாப்பு மையத்திலோ உங்கள் YouTube கணக்கைப் பாதுகாத்தல் என்பதற்குச் சென்றோ ஹேக்கர்களிடமிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது பற்றி மேலும் அறியலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14158494990911465978
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false