வசனங்களைச் சேர்த்து வீடியோக்களை மேம்படுத்துதல்

வீடியோவை எடிட் செய்தபிறகு, வசனங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் வீடியோக்களை மேம்படுத்துங்கள். உங்கள் வீடியோக்கள் பார்வையாளர்களைச் சென்றடைய வசனங்கள் கருவியைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீடியோவிற்குத் தானாக எழுத்தாக்கம் செய்வது அல்லது வசனங்களைத் திருத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

""

குறிப்பு: YouTube Create ஆப்ஸால் 60 வினாடிகளுக்கு மேல் உள்ள கிளிப்புகளுக்கு வசனங்களை உருவாக்க முடியாது.
 
குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

உங்கள் வீடியோக்களில் வசனங்களைச் சேர்த்தல்

ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் YouTube Create ஆப்ஸால் வசனங்களை உருவாக்க முடியும். வீடியோவிற்கு வசனங்களைச் சேர்க்க,

  1. புராஜெக்ட்டைத் திறந்து கருவிப்பட்டியில் உள்ள வசனங்கள்  என்பதைத் தட்டவும்.
  2. கருவிப்பட்டியில் இருந்து நீங்கள் எழுத்தாக்கம் செய்ய விரும்புவதைத் தேர்ந்தெடுக்கவும்:
  • அனைத்து வீடியோக்கள் எனும் விருப்பம் அசல் வீடியோ ரெக்கார்டிங்கில் கண்டறியப்பட்ட எந்தப் பேச்சுக்கும் வசனங்களைச் சேர்க்கும்
  • பின்னணிக் குரல் எனும் விருப்பம் ஆப்ஸில் ரெக்கார்டு செய்யப்பட்ட பின்னணிக் குரல்களுக்கு மட்டுமே வசனங்களைச் சேர்க்கும்
  1. “மொழி” மெனுவில், உங்கள் பின்னணிக் குரலுக்குப் பயன்படுத்திய மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. உருவாக்கு என்பதைத் தட்டவும்.

வசனங்களைத் திருத்துதல்

வசனத்தின் டிரான்ஸ்கிரிப்ஷன்கள் தவறாக இருந்தால், உங்கள் பார்வையாளர்களுக்குக் காட்டப்படும் வசனங்களை மாற்ற எடிட்டிங் கருவியைப் பயன்படுத்தவும். எடிட்டிங் கருவியில் உள்ள திறக்கப்பட்ட புராஜெக்ட்டில்,

  1. உங்கள் வீடியோவிற்காக உருவாக்கப்பட்ட வசன லேயரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. திருத்து "" என்பதைத் தட்டவும்.
  3. டிரான்ஸ்கிரிப்ட்டில் இருக்கும் தவறான வார்த்தையைத் தட்டவும்.
  4. வார்த்தைகளை மாற்ற டைப் செய்யவும்.

வசனங்களை வடிவமைத்தல்

வசன உரையை வடிவமைப்பதன் மூலம் உங்கள் வீடியோவின் தீமுக்கு ஏற்றது போல உங்கள் வசனங்களை நீங்கள் அமைக்கலாம். எடிட்டிங் கருவியில் உள்ள திறக்கப்பட்ட புராஜெக்ட்டில்,

  1. உங்கள் வீடியோவில் உள்ள வசன லேயரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஸ்டைல்  என்பதைத் தட்டவும்.
  3. அளவு, எழுத்து வடிவம், வண்ணம், பின்னணி, வடிவம், அவுட்லைன், நிழல் ஆகியவற்றை மாற்ற பிரிவுகளில் தேடிப் பார்க்கவும்.
  4. மாற்றங்களைச் சேமிக்க முடிந்தது என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8355970359459699933
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false