உங்கள் வீடியோக்களில் வார்த்தைகளைச் சேர்த்தல்

நீங்கள் புராஜெக்ட்டை உருவாக்கியதும், YouTube Create ஆப்ஸின் எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மேம்படுத்துங்கள். பல்வேறு மொழிகளில் கிடைக்கும் நூற்றுக்கணக்கான Google எழுத்து வடிவங்கள் மூலம் உங்கள் வீடியோக்களைப் பிரத்தியேகமாக்குங்கள்.

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

உங்கள் வீடியோக்களில் வார்த்தைகளைச் சேர்த்தல்

  1. திறக்கப்பட்ட புராஜெக்ட்டில், கருவிப்பட்டியில் உள்ள வார்த்தைகள்  என்பதைத் தட்டவும்.
  2. எளிய வார்த்தை  அல்லது வார்த்தை எஃபெக்ட்டுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வார்த்தைகளைச் சேர்க்க டைப் செய்யவும். வார்த்தைகளை எப்படி வடிவமைப்பது எனக் கீழே அறிந்துகொள்ளுங்கள்.
  4. நிறைவுசெய்ததும் முடிந்தது என்பதைத் தட்டவும்.

வார்த்தைகளை வடிவமைத்தல்

  1. உங்கள் புராஜெக்ட்டில் நீங்கள் திருத்த விரும்பும் வார்த்தைகள் அடுக்கைத் தேர்ந்தெடுக்கவும். 
  2. கருவிப்பட்டியில், பின்வரும் விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்தி வார்த்தைகளைத் திருத்தவும்:
    • பிரித்தல் : உங்கள் வார்த்தைகளின் கால அளவை வெட்டலாம்.
    • திருத்துதல் : உங்கள் வீடியோவில் காட்டப்படும் வார்த்தைகளை டைப் செய்து மாற்றலாம்
    • ஸ்டைல் : பிரிவுகளைத் தட்டி அளவு, எழுத்து வடிவம், வண்ணம், பின்புலம், வடிவமைப்பு, அவுட்லைன், ஷேடோ ஆகியவற்றை மாற்றலாம்.
    • அனிமேஷன் : ஓர் அனிமேஷனைத் தேர்ந்தெடுத்து ஸ்லைடர்களைப் பயன்படுத்தி அதன் கால அளவை அமைக்கலாம். 
  3. மாற்றப்பட்ட வார்த்தைகளைச் சேமிக்க முடிந்தது என்பதைத் தட்டவும்.

உங்கள் வீடியோவிற்குள் வார்த்தைகள் அடுக்கை நகர்த்த, அதைத் தட்டி இழுத்து உங்கள் வீடியோவின் விருப்பமான பகுதியில் வைக்கவும்.

வார்த்தைகளை நீக்குதல்

  1. நீங்கள் நீக்க விரும்பும் வார்த்தைகள் அடுக்கைத் தேர்ந்தெடுக்க தட்டவும்.
  2. நீக்கு  என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13675306951102702102
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false