உறுப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அனிமேட் செய்தல்

நீங்கள் புராஜெக்ட்டை உருவாக்கியதும், YouTube Create ஆப்ஸின் எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மேம்படுத்துங்கள். YouTube Create லைப்ரரியில் கிடைக்கும் ஸ்டிக்கர்கள், GIFகள், ஈமோஜிகள் ஆகியவை மூலம் உங்கள் கதைகளுக்கு உயிரூட்டுங்கள்.

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

ஸ்டிக்கர்கள், GIFகள் மற்றும் ஈமோஜிகளைச் சேர்த்தல்

  1. திறக்கப்பட்ட புராஜெக்ட்டில், கருவிப்பட்டியில் உள்ள ஸ்டிக்கர்  என்பதைத் தட்டவும்.
  2. ஸ்டிக்கர்கள், GIFகள், ஈமோஜிகள் ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி உறுப்புகளைத் தேடலாம் உலாவலாம்.
  3. உங்கள் வீடியோவில் சேர்க்க ஒரு கிராஃபிக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
அளவை மாற்ற, படத்தில் அல்லது GIFல் பின்ச் செய்யலாம்/பெரிதாக்கலாம். ஃபிரேமிற்குள் நீங்கள் விரும்பும் இடத்திற்குப் படத்தை அல்லது GIFஐ நகர்த்த அதைத் தட்டி இழுக்கவும்.

பதிப்புரிமைச் சிக்கல்கள் குறித்துப் புகாரளித்தல்

YouTube Create .gif லைப்ரரியில் உள்ள .gifகள், உங்கள் தேடல்களில் இருந்தோ Tenorரில் இருக்கும் பிரத்தியேக இடுகைகளில் இருந்தோ பெறப்படுகின்றன.

YouTube Create ஆப்ஸ் சில .gifகளை Tenor மீடியா லைப்ரரியில் இருந்து பெறுகிறது. உங்களுக்குச் சொந்தமான பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை YouTube Create .gif லைப்ரரியில் கண்டறிந்தால், dmca@tenor.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி நீங்கள் அதைப் புகாரளிக்கலாம்.

நிலைமாற்றங்களைச் சேர்த்தல்

வீடியோ மேல் அடுக்குகள், உறுப்புகள், வார்த்தைகள் போன்ற பல்வேறு உறுப்புகள் உங்கள் வீடியோவில் இருந்தால், அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் நீங்கள் நிலைமாற்றங்களைச் சேர்க்கலாம். இதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி வீடியோவை அமையுங்கள்.

வீடியோ உறுப்புகளை அனிமேட் செய்ய,

  1. ரெக்கார்டிங்கில் உள்ள வீடியோ மேல் அடுக்கு, கிராஃபிக் அல்லது வார்த்தை அடுக்கைத் தேர்ந்தெடுக்க தட்டவும்.
  2. கருவிப்பட்டியில் உள்ள அனிமேஷன்  என்பதைத் தட்டவும்.
  3. நிலைமாற்ற விருப்பத்தேர்வுகளில் உலாவி, அனிமேஷனின் மாதிரிக்காட்சியைப் பார்க்க தட்டவும்.
  4. உங்கள் அனிமேஷனின் கால அளவை அமைக்க ஸ்லைடரைப் பயன்படுத்தவும்.
    • குறிப்பு: ஒவ்வொரு கிராஃபிக்கின் தொடக்கத்தையும் முடிவையும் நீங்கள் அனிமேட் செய்யலாம். நிறைவுப் பிரிவைப் பயன்படுத்தி உங்கள் கிராஃபிக்கின் முடிவில் அனிமேஷனைச் சேர்க்கலாம்.
  5. மாற்றங்களைச் சேமிக்க முடிந்தது என்பதைத் தட்டவும்.

நிலைமாற்றங்களை அகற்றுதல்

  1. நீங்கள் நீக்க விரும்பும் நிலைமாற்றத்தைத் தேர்வுசெய்ய, சீக்வென்ஸரில்  என்பதைத் தட்டவும்.
  2. நிலைமாற்றத்தை அகற்ற ரீசெட் என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1624916603585768884
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false