YouTube Create மூலம் புராஜெக்ட்டைத் தொடங்குதல் அல்லது நிர்வகித்தல்

YouTube Create மூலம் நீள வடிவ வீடியோக்களையும் Shorts வீடியோக்களையும் உருவாக்குவது எளிது. ஆப்ஸைப் பதிவிறக்கி புதிய புராஜெக்ட்டை உருவாக்குவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

NEW: YouTube Create App

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

புதிய புராஜெக்ட்டை உருவாக்குதல்

  1. YouTube Create ஆப்ஸைத் திறந்து உங்கள் YouTube கணக்கில் உள்நுழையவும்.
  2. புதிய புராஜெக்ட்டைத் தொடங்க, முகப்புத் திரையில் கூட்டல்  ஐகானைத் தட்டவும்.
  3. புராஜெக்ட்டில் சேர்ப்பதற்காக உங்கள் கேலரியில் இருந்து படங்களையோ வீடியோக்களையோ ஏற்கெனவே பதிவேற்றிய மீடியாவையோ தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பு: உங்கள் சாதனத்திலுள்ள பிற ஆப்ஸிலிருந்து மீடியாவைப் பதிவேற்ற, திரையின் மேற்பகுதியில் உள்ள கேலரி என்பதற்கு அடுத்துள்ள அம்புக்குறியை தட்டவும். ஒரே புராஜெக்ட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களையோ வீடியோக்களையோ சேர்க்கலாம்.
  4. உங்கள் புராஜெக்ட்டில் படங்களையும் வீடியோக்களையும் சேர்ப்பதற்கு பதிவேற்று என்பதைத் தட்டவும்.

உங்கள் புராஜெக்ட்டை உருவாக்கியதும், வீடியோவை மேம்படுத்த எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தவும்.

ஏற்கெனவே இருக்கும் புராஜெக்ட்டைக் கண்டறிதல், நிர்வகித்தல் அல்லது நீக்குதல்

  1. YouTube Create ஆப்ஸைத் திறந்து உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  2. சமீபத்திய புராஜெக்ட்டுகள் பக்கத்தில் நீங்கள் நிர்வகிக்க விரும்பும் புராஜெக்ட்டிற்கு அடுத்துள்ள மெனு '' என்பதைத் தட்டவும். பட்டியலில் புராஜெக்ட் காட்டப்படவில்லை எனில் வேறொரு கணக்கு மூலம் உள்நுழையவும்.
  3. காட்டப்படும் விருப்பத்தேர்வுகளில் ஏதேனுமொரு செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
    • பெயர் மாற்றுதல்: உங்கள் புராஜெக்ட்டிற்குப் புதிய பெயர் வழங்குதல்
    • நகலெடுத்தல்: உங்கள் புராஜெக்ட்டை நகலெடுத்தல்
    • நீக்குதல்: புராஜெக்ட்டை நீக்குதல்
  4. கேட்கப்படும்போது மாற்றங்களை உறுதிப்படுத்தவும்.
புதிய புராஜெக்ட்டை உருவாக்க, உங்கள் புராஜெக்ட் பட்டியலில் இருந்து கூட்டல்  ஐகானையும் நீங்கள் தட்டலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7858216776702558547
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false