YouTube Create ஆப்ஸில் பதிவேற்றச் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

YouTube Create வீடியோவைப் பதிவேற்றுவதிலோ பதிவிறக்குவதிலோ சிக்கல்களை எதிர்கொண்டால், சிக்கலைச் சரிசெய்ய இந்தப் பிழையறிந்து திருத்துதல் படிகளை முயன்று பாருங்கள்.

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

பதிவிறக்குதல் மற்றும் ஏற்றுதல் தொடர்பான சிக்கல்கள்

YouTube Create வீடியோவைப் பதிவிறக்க முடியவில்லை

சிக்கலான புராஜெக்ட்டுகளைக் கையாள்வதற்குச் சாதனங்கள் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளன. உங்கள் சாதனம் அது கையாளும் அதிகபட்சத் திறனை எட்டியதால் பதிவிறக்கம் தொடர்பான சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்.

இவற்றை அகற்ற முயலுங்கள்:

  • வீடியோ லேயர்கள், குறிப்பாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் லேயர்கள் (உதாரணமாக, உங்கள் புராஜெக்ட்டின் ஏதேனுமொரு இடத்தில் ஏராளமான லேயர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியிருத்தல்)
  • ஸ்டிக்கர்கள்
  • எஃபெக்ட்டுகள்
  • காட்சி மாற்றங்கள்

பதிவிறக்கத் தரத்தைக் குறைத்தல்:

  • நீங்கள் 1080பி தரத்தில் பதிவிறக்குகிறீர்கள் எனில் 720பி தரத்தில் முயலுங்கள்

பதிவிறக்கங்கள் தோல்வியடைவது அறியப்பட்ட சிக்கல்தான், காலப்போக்கில் இந்தச் சிக்கல் சரிசெய்யப்படும்.

கருத்தையும் ஸ்கிரீன்ஷாட்களையும் சமர்ப்பிக்க:

  1. YouTube Create ஆப்ஸின் மேல் வலது மூலையில் இருக்கும் உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  2. கருத்தை அனுப்பு என்பதைத் தட்டவும்.

இசையையோ ஸ்டிக்கர்களையோ ஏற்றுவது தொடர்பான சிக்கல்கள்

மோசமான நெட்வொர்க் இணைப்பின் காரணமாக இசை, ஸ்டிக்கர்கள் போன்ற அம்சங்கள் ஏற்றப்படுவதற்கு நீண்ட நேரமாகக்கூடும். உங்களிடம் நிலையான நெட்வொர்க் இணைப்பு இருக்கும்போது அம்சங்களை மீண்டும் ஏற்றுங்கள்.

வெளியிடுவது தொடர்பான சிக்கல்கள்

YouTube Create ஆப்ஸிலிருந்து YouTubeக்கு வீடியோவைப் பதிவேற்ற முடியவில்லை

முதலில், நிலையான நெட்வொர்க் சிக்னல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

YouTube ஆப்ஸ் பதிவிறக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். YouTube Create பதிவிறக்கப்பட்ட அதே Android "சுயவிவரத்தில்" YouTube ஆப்ஸ் பதிவிறக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் வீடியோவை வெளியிட முடியாது.

YouTube Create, YouTube ஆப்ஸ் ஆகியவற்றில் ஒரே கணக்கில்தான் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

வேறு சேனலில் YouTube Create வீடியோவை வெளியிட விரும்புகிறீர்களா?

YouTube Create ஆப்ஸில் நீங்கள் உள்நுழைந்துள்ள அதே சேனலுடன் YouTube Create வீடியோ தானாகவே இணைக்கப்படும். வெளியிடும் செயல்பாட்டைத் தொடங்கிய பிறகு உங்களால் சேனல்களை மாற்ற முடியாது.

சரிசெய்ய:

  1. YouTube ஆப்ஸை திறக்கவும்.
  2. உருவாக்கு அதன் பிறகு வீடியோவைப் பதிவேற்று என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்ட YouTube Create வீடியோவைத் தேர்வுசெய்யவும்.

அல்லது

  1. உங்கள் சேனலுடன் தொடர்புடைய விருப்பமான கணக்கில் உள்நுழையவும். அங்கே உங்கள் புராஜெக்ட்டை உருவாக்கவும் (YouTube Create ஆப்ஸில் உள்ள புராஜெக்ட்டுகள் உங்கள் கணக்குடன் தொடர்புடையவை).

ஆப்ஸை நீக்குவது தொடர்பான சிக்கல்கள்

ஆப்ஸை நீக்குவதால் வீடியோக்களை இழத்தல்

YouTube Create ஆப்ஸை நீக்குவதற்கு முன்போ புதிய சாதனத்திற்கு மாறுவதற்கு முன்போ உங்கள் சாதனத்தின் புகைப்பட கேலரிக்கு வீடியோக்களைப் பதிவிறக்கிக்கொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் இருந்து ஆப்ஸை நீக்கினாலோ புதிய மொபைலை வாங்கினாலோ தற்போதுள்ள புராஜெக்ட்டுகள் அனைத்தும் நீக்கப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17441819152539482603
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false