YouTube Create மூலம் வீடியோக்களை மாதிரிக்காட்சியாகப் பார்த்தல், பதிவேற்றுதல் அல்லது சேமித்தல்

உங்கள் வீடியோவை வெளியிடத் தயாரானதும் YouTube Create ஆப்ஸ் மூலம் வீடியோவை YouTubeல் நேரடியாகப் பதிவேற்றலாம். எடிட் செய்யப்பட்ட உங்கள் புராஜெக்ட்டை மாதிரிக்காட்சியாகப் பார்ப்பது, பதிவேற்றுவது அல்லது சேமிப்பது எப்படியெனக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளுங்கள்.

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

YouTube Create வீடியோவை மாதிரிக்காட்சியாகப் பார்த்தல்

  1. YouTube Create ஆப்ஸைத் திறந்து உங்கள் YouTube கணக்கில் உள்நுழையவும்.
  2. சமீபத்திய புராஜெக்ட்டுகள் பக்கத்தில், நீங்கள் விரும்பும் புராஜெக்ட்டைத் திறக்க, புராஜெக்ட்டின் சிறுபடத்தையோ பெயரையோ தட்டவும்.
  3. உங்கள் வீடியோவை மாதிரிக்காட்சியாகப் பார்க்க, புராஜெக்ட் எடிட்டிங் திரையில் இயக்கு என்பதைத் தட்டவும்.

YouTube Create வீடியோவைச் சேமித்தல்

  1. திறக்கப்பட்ட புராஜெக்ட்டில், வலது மூலையில் உள்ள மேலும்  என்பதைத் தட்டவும்.
  2. ஏற்று என்பதைத் தட்டவும்.
  3. உங்களுக்கு விருப்பமான வீடியோ தரத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்நோக்கிய அம்புக்குறியைத் தட்டவும்.
  4. மொபைல் சாதனத்தில் உங்கள் புராஜெக்ட்டைச் சேமிக்க ஏற்று என்பதைத் தட்டவும்.

உங்கள் சேனலில் YouTube Create வீடியோவைப் பதிவேற்றுதல்

  1. YouTube Create ஆப்ஸின் புராஜெக்ட் எடிட்டிங் திரையில், வலது மூலையில் உள்ள மேலும்  என்பதைத் தட்டவும்.
  2. ஏற்று என்பதைத் தட்டவும்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறியைத் தட்டி உங்களுக்கு விருப்பமான வீடியோ தரத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஏற்று என்பதைத் தட்டவும்.
  4. YouTubeல் பதிவேற்று என்பதைத் தட்டவும்.
  5. தலைப்பு, விளக்கம், சிறுபடம் போன்ற விவரங்களைச் சேர்க்கவும்.
  6. உங்கள் வீடியோவின் தனியுரிமை நிலையைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் வீடியோவுக்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கலாம் அல்லது அதை ஒரு பிளேலிஸ்ட்டிலும் சேர்க்கலாம்.
  7. உங்கள் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்க அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. வீடியோவைப் பதிவேற்று என்பதைத் தட்டவும்.
    • குறிப்பு: YouTube Create ஆப்ஸிலிருந்து நீள வடிவ வீடியோக்களையும் Shorts வீடியோக்களையும் பதிவேற்றலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9430446549387036808
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false