உங்கள் வீடியோக்களில் ஃபில்டர்கள், எஃபெக்ட்டுகள், கலர் கரெக்‌ஷன் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்

நீங்கள் புராஜெக்ட்டை உருவாக்கியதும், YouTube Create ஆப்ஸின் எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மேம்படுத்துங்கள். வண்ணங்களைச் சரிசெய்தல், எஃபெக்ட்டுகள், ஃபில்டர்கள் ஆகியவற்றின் மூலம் உங்கள் வீடியோக்களில் உள்ள காட்சிக் கூறுகளை மேம்படுத்துங்கள்.

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

உங்கள் வீடியோக்களில் ஃபில்டர்களைப் பயன்படுத்துதல்

  1. புராஜெக்ட்டைத் திறந்து, நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோ கிளிப்பைத் தட்டித் தேர்ந்தெடுக்கவும்.
  2. கருவிப்பட்டியில் இருந்து, ஃபில்டர்கள்  என்பதைத் தட்டவும்.
  3. விருப்பங்களில் இருந்து முன்னமைவு ஃபில்டரைத் தேடித் தேர்ந்தெடுக்கவும். ஃபில்டரின் அடர்த்தியை மாற்ற நீங்கள் ஸ்லைடரைப் பயன்படுத்தலாம்.
  4. உங்கள் வீடியோவில் ஃபில்டரைச் செயல்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.

உங்கள் வீடியோக்களுக்கு எஃபெக்ட்டுகளைச் சேர்த்தல்

  1. புராஜெக்ட்டைத் திறந்து, நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோ கிளிப்பைத் தட்டித் தேர்ந்தெடுக்கவும்.
  2. கருவிப்பட்டியில் இருந்து, எஃபெக்ட்டுகள்  என்பதைத் தட்டவும்.
  3. விருப்பங்களில் இருந்து வீடியோ எஃபெக்ட்டைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் வீடியோவில் எஃபெக்ட்டைச் செயல்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.

உங்கள் வீடியோக்களில் உள்ள வண்ணத்தைச் சரிசெய்தல்

  1. புராஜெக்ட்டைத் திறந்து, நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோ கிளிப்பைத் தட்டித் தேர்ந்தெடுக்கவும்.
  2. கருவிப்பட்டியில் இருந்து, சரிசெய்தல்  என்பதைத் தட்டவும்.
  3. வீடியோ கான்ட்ராஸ்ட், சேச்சுரேஷன், மென்னிறமாக்குதல் போன்ற அம்சங்களை மாற்ற கலர் கரெக்‌ஷன் விருப்பங்களைப் பயன்படுத்தவும். அடர்த்தியை மாற்ற ஒவ்வொரு விருப்பத்திலும் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தலாம்.
  4. உங்கள் வீடியோவில் இந்த மாற்றங்களைச் செயல்படுத்த முடிந்தது என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14888606108769413849
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false