ஆடியோவைச் சேர்த்தலும் திருத்துதலும்

நீங்கள் புராஜெக்ட்டை உருவாக்கியதும், YouTube Create ஆப்ஸின் எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மேம்படுத்துங்கள். உங்கள் வீடியோவில் YouTube ஆடியோ லைப்ரரியில் இருக்கும் இசையுடன் சவுண்ட் டிராக்கைச் சேருங்கள் அல்லது பின்னணிக் குரல்கள் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்டுகளுடன் ஆடியோ விவரிப்பைச் சேருங்கள்.

குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.

இசையையும் சவுண்ட் எஃபெக்ட்டுகளையும் சேர்த்தல்

YouTube Create ஆப்ஸ் மூலம், உரிமத்தொகை இல்லாத இசையை வீடியோக்களில் சேர்ப்பதன் மூலம் உங்கள் படைப்பை மேம்படுத்தலாம்.

புராஜெக்ட்டிற்கு இசையைச் சேர்க்க,

  1. கருவிப்பட்டியில் உள்ள ஒலி  என்பதைத் தட்டவும்.
  2. ஆடியோ லைப்ரரி, சவுண்ட் எஃபெக்ட்டுகள், உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்ட இசை ஆகியவற்றில் இருந்து இசையை வடிகட்ட, பக்கத்தின் மேலே உள்ள பிரிவுகளைப் பயன்படுத்தவும். 
  3. பாடலைத் தேடவும் அல்லது வகை வாரியாகத் தேடவும்.
  4. பாடலையோ ஒலியையோ மாதிரிக்காட்சியாகப் பார்க்க  அல்லது வீடியோவில் சேர்க்க  என்பதைத் தட்டவும்.

பின்னணிக் குரலை ரெக்கார்டு செய்தல்

பின்னணிக் குரலில் விவரிப்பதன் மூலம் உங்கள் வீடியோக்களுக்கு உயிரூட்டுங்கள். உங்கள் வீடியோவில் பின்னணிக் குரலைச் சேர்க்க:

  1. புராஜெக்ட்டைத் திறந்து, கருவிப்பட்டியில் உள்ள  பின்னணிக் குரல்  என்பதைத் தட்டவும்.
  2. பின்னணிக் குரலைச் சேர்க்க  என்பதை அழுத்திப் பிடித்திருக்கவும். அதே வீடியோவிற்கு மற்றொரு பின்னணிக் குரலைச் சேர்க்க இதே செயல்முறையை மீண்டும் செய்யவும்.
  3. உங்கள் வீடியோவிற்கு ரெக்கார்டிங்கைச் சேர்க்க முடிந்தது என்பதைத் தட்டவும்.

ஆடியோவைத் திருத்துதல்

தேவையற்ற இரைச்சலைக் குறைக்கவும் வீடியோக்களிலிருந்து ஆடியோவை அகற்றவும், YouTube Create ஆப்ஸின் ஆடியோ கருவிகளைப் பயன்படுத்தவும். ஆடியோவைத் திருத்த,

  1. புராஜெக்ட்டைத் திறந்து நீங்கள் திருத்த விரும்பும் ஆடியோ லேயரைத் தட்டித் தேர்ந்தெடுக்கவும்.
  2. உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்கைத் திருத்த கருவிப்பட்டியைப் பயன்படுத்தவும்:
    • பிரித்தல் : உங்கள் ஆடியோ லேயரின் கால அளவை வெட்டலாம்
    • ஒலியளவு: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியோவின் ஒலியளவை மாற்ற ஸ்லைடரைப் பயன்படுத்தலாம்
    • ஃபேடு : உங்கள் வீடியோவில் ஆடியோ ஃபேடு-இன் மற்றும் ஃபேடு-அவுட் ஆக வேண்டிய இடங்களை அமைக்க ஸ்லைடர்களைப் பயன்படுத்தி நேரமுத்திரைகளை அமைக்கலாம்
    • பீட்ஸைக் கண்டறிதல் : உங்கள் வீடியோவின் பாடல் லேயரை எளிதாகத் திருத்த பீட் மார்க்கர்களைப் பயன்படுத்தலாம்
    • ஆடியோ கிளீன்-அப் : உங்கள் ரெக்கார்டிங்கில் தேவையற்ற இரைச்சலை அகற்றி உங்கள் குரலின் தரத்தை மேம்படுத்தலாம்.
    • நீக்குதல் : உங்கள் வீடியோவில் இருந்து ஆடியோ கிளிப்பை அகற்ற என்பதைத் தட்டலாம்.
  3. மாற்றங்களைச் சேமிக்க முடிந்தது என்பதைத் தட்டவும்.
கவனத்திற்கு: ஆடியோ டிராக்குகள் உங்கள் வீடியோவின் நீளத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது. ரெக்கார்டிங்கின் நீளத்தை டிரிம் செய்ய, ஆடியோ கிளிப்பை நீங்கள் தட்டி இழுக்கலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16124963937186180983
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false