Premium ஆஃபர்களைக் கண்டறிதல் மற்றும் ரிடீம் செய்தல்

YouTube Premium உறுப்பினராக இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட விற்பனைப் பொருட்களுக்கும் மெம்பர்ஷிப்களுக்குமான சிறப்புச் சலுகைகளை ரிடீம் செய்ய நீங்கள் தகுதிபெறக்கூடும். புதிய சலுகைகள் குறித்த தகவல்கள் எங்கள் Premium தொடர்பான அறிவிப்புகள் கட்டுரையில் அறிவிக்கப்படும், எனவே அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள அவ்வப்போது அக்கட்டுரையைப் பாருங்கள்!

ஆஃபருக்கான தகுதிநிலை

  • சில ஆஃபர்கள் சில நாடுகள்/பிராந்தியங்களில் கிடைப்பதில்லை.
  • மாணவர் மெம்பர்ஷிப்கள் Premium ஆஃபர்களுக்குத் தகுதிபெறாது.
  • சில ஆஃபர்களைக் கம்ப்யூட்டர் அல்லது உலாவியில் இருந்து மட்டுமே ரிடீம் செய்ய முடியும். YouTube ஆப்ஸில் ஆஃபரை ரிடீம் செய்வதில் சிக்கல் இருந்தால் youtube.com தளத்திலிருந்து மீண்டும் முயலவும்.
  • ஆஃபரை ரிடீம் செய்ய முடியவில்லை எனில் உங்கள் Premium கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும். சிக்கல் தொடர்ந்தால் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

புதிய ஆஃபர்களைக் கண்டறிதல்

உங்களுக்குக் கிடைக்கும் Premium ஆஃபர்களைப் பார்க்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.
  1. YouTube ஆப்ஸைத் திறந்து உங்கள் YouTube Premium கணக்கில் உள்நுழையவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. உங்கள் Premium பலன்கள் என்பதைத் தட்டவும்.
  4. கிடைக்கக்கூடிய ஆஃபர்கள் மற்றும் சலுகைகளைப் பற்றி மேலும் அறிய உங்கள் ஆஃபர்கள் என்பதைப் பார்க்கவும்.
இந்த அம்சம் தற்போது இணையத்திலும் மொபைல் சாதனங்களிலும் கிடைக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் பிற சாதனங்களிலும் கிடைக்கும்படி விரிவுபடுத்தப்படக்கூடும்.

ஆஃபரை ரிடீம் செய்தல்

நீங்கள் ரிடீம் செய்ய விரும்பும் ஆஃபரைக் கண்டறிந்தால், கீழேயுள்ள படிகளைப் பின்பற்றி உங்களுக்கான ஆஃபர்களையும் சலுகைகளையும் பயன்படுத்தத் தொடங்கலாம்.
  1. நீங்கள் ரிடீம் செய்ய விரும்பும் ஆஃபரைத் திறக்கவும்.
  2. ஆஃபர் விவரங்கள் பக்கத்திலிருந்து ஆஃபர் குறியீட்டை நகலெடுக்கவும்.
  3. இப்போதே ரிடீம் செய்க என்பதைக் கிளிக் செய்யவும். ஆஃபரின் ஸ்டோர் முகப்புக்குச் செல்வீர்கள்.
  4. உங்கள் Premium ஆஃபர்கள் பக்கத்திலிருந்து நகலெடுத்த ஆஃபர் குறியீட்டைச் செக்-அவுட்டின்போது உள்ளிடவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
46409180566403362
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false