YouTube Premium/YouTube Music Premiumமில் பதிவுசெய்தல் தொடர்பான பிழைகளைச் சரிசெய்தல்

YouTube Premiumமிலோ YouTube Music Premiumமிலோ சேர முயலும்போது பிழைச் செய்தி காட்டப்பட்டால் பிழையறிந்து திருத்துவதற்கும் சிக்கலைச் சரிசெய்வதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புடைய பிழைச் செய்தியைப் பார்க்கவும்.

"உங்கள் நாட்டை எங்களால் சரிபார்க்க முடியவில்லை"

உங்களுக்கான திட்டங்களையும் சலுகைகளையும் காட்ட YouTube உங்கள் நாட்டைச் சரிபார்க்க வேண்டும். "உங்கள் நாட்டை எங்களால் சரிபார்க்க முடியவில்லை" என்ற செய்தியைப் பெற்றால், சிக்கலைச் சரிசெய்ய பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • வேறொரு நெட்வொர்க்கில் இணைக்கவும்.
  • வேறு சாதனத்தைப் பயன்படுத்தவும்.
  • மொபைல் ஆப்ஸில் YouTube Premiumமை வாங்கவும்:
  1. உங்கள் மொபைலிலோ டேப்லெட்டிலோ YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் மெம்பர்ஷிப்பைத் தொடங்க விரும்பும் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. உங்கள் சுயவிவரப் படம்  > YouTube Premiumமைப் பெறுக அல்லது Music Premium பெறுக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. தகுதிபெற்றால் கட்டணமற்ற உபயோகத்தைத் தொடங்குங்கள். இல்லையென்றால் கட்டண மெம்பர்ஷிப்பைத் தொடங்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
நீங்கள் VPN/ப்ராக்ஸி சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள் எனில், அதை எப்படி முடக்குவது என்ற தகவலை அறிய அந்தச் சேவையின் உதவி மையத்தையோ இணையதளத்தையோ பார்க்கவும். முடக்கிய பின், youtube.com/premium அல்லது youtube.com/musicpremium என்ற முகவரியில் மெம்பர்ஷிப்புக்காகப் பதிவு செய்யவும்.

Workspace கணக்குகள்

  • Workspace கணக்கை (Workspace Individual பதிப்புக் கணக்கைத் தவிர) பயன்படுத்தி YouTube Premium தனிநபர் அல்லது குடும்ப மெம்பர்ஷிப்பில் பதிவுசெய்ய முடியாது.
  • எந்தவொரு Workspace கணக்கையும் பயன்படுத்தி YouTube Premium மாணவர் மெம்பர்ஷிப்புக்கு நீங்கள் பதிவுசெய்யலாம்.
  • கட்டணமற்ற உபயோகக் காலத்திற்குத் தகுதிபெற்றிருந்து அதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்குக் காட்டப்படவில்லை என்றால் உங்களின் தனிப்பட்ட கணக்கிற்கு மாறி youtube.com/premium பக்கத்தில் பதிவு செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
339777776378871918
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false