வயது இலக்கிடல் மற்றும் விளம்பரங்கள்

YouTube வயதுக் கட்டுப்பாடு:

விளம்பரதாரரின் விருப்பத்தின்படியோ சமூக வழிகாட்டுதல்களின் மீறலுக்குப் பிறகோ வீடியோக்கள் அல்லது பிராண்டு சேனல்களுக்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்த வீடியோக்களைக் “குறிப்பிட்ட வயதிற்கு” மேற்பட்ட பார்வையாளர்களால் மட்டுமே பார்க்க முடியும், மேலும் அவர்கள் YouTubeல் உள்நுழைந்திருக்க வேண்டும். சில நேரங்களில், விளம்பர வீடியோவை விளம்பரதாரர் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்துவதற்கு முன்பே அதற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டியிருக்கும். உதாரணமாக, மதுபான விளம்பரத்தில் விளம்பர வீடியோக்களைக் காட்டுவதற்கு முன்பு இவ்வாறு செய்ய வேண்டும். வீடியோ முகப்புப் பக்கத்தில் வயதுக் கட்டுப்பாட்டுக் கோரிக்கைகளுக்கு இருக்கும் ஒரே வழி YouTube வயதுக் கட்டுப்பாடு அம்சம் மட்டுமே.

விளம்பரங்களுக்கு வயதின் அடிப்படையில் மக்கள்தொகையியல் சார்ந்து இலக்கிடுதல்:

எங்களின் கொள்கைகளின்படியோ விளம்பரதாரர்களின் விருப்பத்தின்படியோ சில நேரங்களில் குறிப்பிட்ட வயதினருக்கு விளம்பரத்தைக் காட்ட வேண்டியிருக்கும். உள்நுழைந்துள்ள YouTube பயனர்களின் பிறந்த தேதிகளை அடிப்படையாகக் கொண்டு எங்களின் விளம்பரச் சேவை தொழில்நுட்பம் இந்த விளம்பரங்களை இலக்கிடலாம். உதாரணமாக, எங்கள் கொள்கைகளின்படி பொதுப் பார்வையாளர்களுக்குப் பொருந்தாத விளம்பரமாக இருந்தால் அந்த விளம்பரம் 18+ பார்வையாளர்களுக்குக் காட்டப்பட வேண்டும். அதாவது குறைந்தது 18 வயதுள்ள, உள்நுழைந்துள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே எங்கள் தளத்தில் இந்த விளம்பரம் காட்டப்படும். வெளியேறிய பார்வையாளர்களுக்கு வேறு விளம்பரம் காட்டப்படும்.

பிரத்தியேக வயதுக் கட்டுப்பாடுகள்:

திரைப்படம், மது மற்றும் கேமிங் விளம்பரதாரர்கள் முகப்புப்பக்க விளம்பரங்களில் பிரத்தியேக வயதுக் கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட தொழில்துறைகள் என்பதால் இதை அனுமதிக்கிறோம். மேலும் YouTube வயதுக் கட்டுப்பாடுகள் தொழில்துறைக் கட்டுப்பாடுகளைப் பூர்த்திசெய்யாமல் இருக்கலாம். உதாரணமாக, வீடியோ கேம் விளம்பரதாரர்கள் வயதுவந்தோருக்கான கேம்களில் ESRB வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். பிரத்தியேக வயதுக் கட்டுப்பாடுகளுக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவதற்கான கோரிக்கைகளை YouTube விளம்பரக் கொள்கைக் குழுவிற்கு இந்த விளம்பரதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பிற அனைத்து விளம்பரதாரர்களும் பிராண்டு சேனல்களிலும் வீடியோ முகப்புப் பக்கங்களிலும் உள்ள YouTubeன் வழக்கமான வயதுக் கட்டுப்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11703800565939945269
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false