YouTube Shortsஸைப் பாருங்கள்

YouTube Shorts என்பது புதிய மற்றும் ஆர்வமூட்டும் உள்ளடக்கத்தைக் கண்டறிய முடிவில்லா வாய்ப்புகளை வழங்கும் சிறு வடிவச் செங்குத்து வீடியோக்களாகும். ஒவ்வொரு Shorts வீடியோவும் 60 வினாடிகளோ அதற்கும் குறைவாகவோ இருக்கும். எனவே சுவாரஸ்யம் நிறைந்த பல உள்ளடக்கத்தை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.

Shorts ஊட்டங்களில் முடிவில்லா Shorts வீடியோக்களைப் பார்க்கவும் அவற்றுடன் தொடர்புகொள்ளவும் YouTube Shorts பிளேயர் உங்களை அனுமதிக்கிறது.

ஸ்மார்ட் டிவிகளிலும் கேம் கன்சோல்களிலும் Shorts வீடியோக்களைப் பார்த்தல்

உங்கள் டிவியில் YouTube Shorts பார்த்தல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகளிலும் கேம் கன்சோல்களிலும் பிற ஸ்ட்ரீமிங் சாதனங்களிலும் உள்ள YouTube ஆப்ஸில் நீங்கள் Shorts வீடியோக்களைப் பார்க்கலாம். ஆனால் 2019க்கு முன் வெளியிடப்பட்ட சில சாதனங்களில் Shorts பிளேயர் இயங்காமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் YouTube முகப்புப்பக்கத்தில் உள்ள Shorts அடுக்கிலும் தேடல் முடிவுகளிலும் YouTube முழுவதும் உள்ள சேனல் பக்கங்களிலும் Shorts வீடியோக்கள் காட்டப்படும். ஒரு Shorts வீடியோவை நீங்கள் தேர்வுசெய்யும்போது, அது Shorts பிளேயரில் தொடர்ந்து பிளே ஆகும்.

ரிமோட்டைப் பயன்படுத்தி பிளேயரில் உலாவுவதற்கான வழிமுறை இதோ:

  1. Shorts வீடியோவைத் தொடங்க அல்லது இடைநிறுத்த, அதை நேரடியாகக் கிளிக் செய்யவும்.
  2. Shorts வீடியோ பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க, வலதுபக்க பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. அடுத்த Shorts வீடியோவிற்குச் செல்ல, கீழே நகர்த்தவும் அல்லது கீழ்நோக்கிய பட்டனைக் கிளிக் செய்யவும்.
  4. முந்தைய Shorts வீடியோவிற்குச் செல்ல, மேலே நகர்த்தவும் அல்லது மேல்நோக்கிய பட்டனைக் கிளிக் செய்யவும்.

YouTubeல் Shorts வீடியோக்களைப் பார்த்தல்

YouTubeல் Shorts வீடியோக்களைப் பார்க்க:

  1. முகப்புக்கு "" செல்லவும்.
  2. YouTube Shorts பிளேயருக்குச் செல்ல, இடதுபுறத்தில் உள்ள Shorts "" என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13944867106674605567
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false