சேனல் பிராண்டிங்கை நிர்வகித்தல்

சுயவிவரப் படம், சேனல் பேனர், வீடியோ வாட்டர்மார்க் போன்றவற்றை மாற்றுவதன் மூலம் உங்கள் YouTube சேனலின் அடையாளத்தை பிராண்டிங் செய்யலாம்.

சுயவிவரப் படத்தை மாற்றுதல்

 YouTube Studioவில் உங்கள் சுயவிவரப் படத்தை மாற்றிக்கொள்ளலாம். சுயவிவரப் படம் என்பது உங்கள் சேனலிலும் வீடியோக்களிலும் YouTube சேவைகளில் உங்கள் சேனலின் பொதுவான செயல்பாடுகளிலும் பார்வையாளர்களுக்குக் காட்டப்படும் படமாகும்.

'பிரத்தியேகமாக்கல்' என்பதைத் தேர்வுசெய்ததும் மேற்பகுதியில் 'பிராண்டிங்' பிரிவு காணப்படும்.

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல் அதன் பிறகு பிராண்டிங் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மாற்று என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு விளக்கப்படத்தையோ படத்தையோ தேர்ந்தெடுக்கவும். விளக்கப்படத்தின் முன்னமைவு வண்ணங்களையும் செதுக்கலையும் அல்லது நீங்கள் பதிவேற்றிய படத்தின் அளவை மாற்றி பின்னர் முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் சுயவிவரப் படம் YouTube சேவைகள் முழுவதிலும் மாற்றப்பட சில நிமிடங்கள் ஆகக்கூடும்.

உதவிகரமான தொழில்நுட்பம் அல்லது கீபோர்டு மூலம் படத்தைச் செதுக்குதல்

ஒரு மூலையில் இருந்து படத்தைச் செதுக்குதல்

  1. செதுக்க வேண்டிய படத்தின் ஒரு மூலையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி படத்தைச் செதுக்கவும்.

செதுக்குவதற்கான முழுச் சதுரத்தையும் நகர்த்துதல்

  1. செதுக்குவதற்கான முழுச் சதுரத்திற்குச் செல்லவும்.
  2. செதுக்குவதற்கான சதுரத்தை நகர்த்த அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.

சுயவிவரப் படத்திற்கான வழிகாட்டுதல்கள்

உங்கள் சுயவிவரப் படம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும், அத்துடன் பின்வரும் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்:

  • JPG, GIF, BMP அல்லது PNG ஃபைல் (அனிமேஷன் செய்யப்பட்ட GIFகள் இல்லை)
  • படத்தின் அளவு 15 மெ.பை. அளவுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • 98 X 98 px அளவிலான படம்.

YouTube கிரியேட்டர்கள்

பேனர் படம் உங்கள் YouTube பக்கத்தின் மேற்பகுதியில் பின்னணியாகக் காட்டப்படும்.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல் அதன் பிறகு பிராண்டிங் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மாற்று என்பதைக் கிளிக் செய்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும். மாற்றங்களைச் செய்ய, மாதிரிக்காட்சியைத் தேர்ந்தெடுத்து படத்தைச் செதுக்கவும். பிறகு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: கம்ப்யூட்டர், மொபைல், டிவி ஆகியவற்றில் ஒரே பேனர் படம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உங்கள் சாதனத்தைப் பொறுத்து அது வெவ்வேறு விதமாகக் காட்டப்படும்.

கலைஞரின் அதிகாரப்பூர்வச் சேனல்கள்

உங்களின் பேனர் படம் கம்ப்யூட்டரிலும் மொபைல் சாதனங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பேனரை மாற்ற, மேலே வழங்கப்பட்டுள்ள YouTube கிரியேட்டருக்கான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். 

டிவியிலும் YouTube Musicகிலும் நீங்கள் வைத்திருக்கும் பேனரை மாற்ற:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் சுயவிவரம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சுயவிவரப் படத்திற்கு அடுத்துள்ள என்பதைக் கிளிக் செய்து படத்தைத் தேர்ந்தெடுக்கவும். படத்தில் மாற்றங்களைச் செய்ய,
    • மாதிரிக்காட்சி என்பதைத் தேர்ந்தெடுத்து படத்தை மாற்றவும்.
    • முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பக்கத்தின் மேல் வலதுபுறத்திலுள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பேனர் படத்திற்கான வழிகாட்டுதல்கள்

பேனர் படம் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:

  • பதிவேற்றுவதற்கான குறைந்தபட்சப் பரிமாணம்: 16:9 என்ற தோற்ற விகிதத்துடன் 2560 x 1440 px.
  • இந்தக் குறைந்தபட்சப் பரிமாணத்தில், வார்த்தைகளும் லோகோக்களும் 1235 x 338 px அளவிற்குள் இருக்க வேண்டும்.
  • பெரிய சாதனங்களில் படங்கள் முழுத் திரையில் பொருந்த வேண்டும். ஆனால் சில காட்சிகளிலும் சாதனங்களிலும் அவை செதுக்கப்படும்.
  • கூடுதல் ஃபைல் அலங்காரங்கள் எதையும் சேர்க்க வேண்டாம் (எ.கா. கருமைச் சாயல்கள், பார்டர்கள், ஃபிரேம்கள்).
  • ஃபைல் அளவு: 6 மெ.பை. அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

படங்களின் அளவை மாற்றுவது எப்படி?

படங்களின் அளவை மாற்ற, கம்ப்யூட்டரில் உள்ள பட எடிட்டரையோ படத்தின் அளவை மாற்றுவதற்கான ஆன்லைன் கருவியையோ நீங்கள் பயன்படுத்தலாம். உதாரணமாக Apple கம்ப்யூட்டரில் Preview அல்லது Windowsஸில் Microsoft Photos என்பதை நீங்கள் பயன்படுத்தலாம்.

வீடியோ வாட்டர்மார்க்கைச் சேர்த்தல்

வீடியோவில் வாட்டர்மார்க்கைச் சேர்ப்பதன் மூலம் பார்வையாளர்களை உங்கள் சேனலில் குழு சேர ஊக்குவிக்கலாம். வீடியோ வாட்டர்மார்க்கைச் சேர்த்தால் கம்ப்யூட்டரில் YouTubeஐப் பயன்படுத்தும்போது பார்வையாளர்களால் உங்கள் சேனலில் நேரடியாகக் குழு சேர முடியும்.
  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல் அதன் பிறகு பிராண்டிங் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. காட்டுவதற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • வீடியோவின் முடிவு: விடியோவின் கடைசி 15 வினாடிகளுக்கு வீடியோ வாட்டர்மார்க் காட்டப்படும்.
    • பிரத்தியேகத் தொடக்க நேரம்: நீங்கள் தேர்வுசெய்யும் நேரத்தில் வீடியோ வாட்டர்மார்க் காட்டப்படத் தொடங்கும்.
    • முழு வீடியோவும்: வீடியோ முழுவதும் வீடியோ வாட்டர்மார்க் காட்டப்படும்.
  4. மாற்று என்பதைக் கிளிக் செய்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை மாற்றி, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: ‘சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது’ என அமைக்கப்பட்ட வீடியோக்களில் வீடியோ வாட்டர்மார்க்குகள் காட்டப்படாது. நீங்கள் முன்பே வீடியோ வாட்டர்மார்க்கைச் சேர்த்திருந்து, உங்கள் வீடியோவின் பார்வையாளர் அமைப்பு 'சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்று தற்போது மாற்றப்படும் பட்சத்தில் பார்வையாளர்களுக்கு வாட்டர்மார்க் காட்டப்படாது.

வீடியோ வாட்டர்மார்க் குறித்த வழிகாட்டுதல்கள்

வீடியோ வாட்டர்மார்க் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:

  • குறைந்தபட்சம் 150x150 பிக்சல்கள் இருக்க வேண்டும்.
  • சதுர வடிவிலான படம்: 1 மெ.பை. அளவிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

கிடைக்கும் நிலை

சேனல் வாட்டர்மார்க் கம்ப்யூட்டரிலும் மொபைல் சாதனங்களிலும் (மொபைலில் கிளிக் செய்ய முடியாது) லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் கிடைக்கிறது. Adobe Flash அல்லது பிரத்தியேக YouTube குரோம்லெஸ் பிளேயர்களில் சேனல் வாட்டர்மார்க்குகள் காட்டப்படாது.

வீடியோ வாட்டர்மார்க் தொடர்பான அளவீடுகள்

YouTube பகுப்பாய்வுகளில் சந்தாவிற்கான மூலம் என்ற அறிக்கையில் அளவீடுகளைப் பெறலாம்.

உங்கள் சேனல் பிராண்டிங்கை நிர்வகிப்பது எப்படி என்பதைப் பாருங்கள்

உங்கள் சுயவிவரப் படம், சேனல் பேனர், வீடியோ வாட்டர்மார்க் ஆகியவற்றை எப்படி மாற்றுவது என்பது குறித்து YouTube கிரியேட்டர்களுக்கான சேனல் வெளியிட்டுள்ள பின்வரும் வீடியோவைப் பாருங்கள்.

Customize Your Channel Branding & Layout: Add a Profile Picture, Banner, Trailer, Sections, & more!

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழுசேருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5979071201060966040
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false