YouTube ஆப்ஸில் தனியுரிமை அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல்

உங்களுக்குப் பாதுகாப்பான ஆன்லைன் அனுபவத்தைத் தருவதே எங்களின் முக்கியமான நோக்கமாகும். நாங்கள் பயன்படுத்தும் தரவு குறித்த வெளிப்படைத்தன்மைக்கு நாங்களே பொறுப்பு. அத்துடன் அது குறித்த விருப்பத்தையும் கட்டுப்பாட்டையும் உங்களுக்கே வழங்குகிறோம்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் Google மற்றும் YouTubeக்கு வழங்கும் தரவு உதவும். YouTubeல் உங்கள் தரவு என்பதிலோ உங்கள் Google கணக்கிலோ YouTube தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்.

Google கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தரவை YouTube எப்படிப் பயன்படுத்தக்கூடும்?

YouTube உங்கள் தரவைப் பயன்படுத்தி, நீங்கள் பார்த்தவை பற்றிய நினைவூட்டல், அதிகம் தொடர்புடைய பரிந்துரைகள், தேடல் முடிவுகள் போன்றவற்றை வழங்கி உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும். YouTube மற்றும் பிற Google சேவைகளில் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, உங்கள் செயல்பாடும் தகவல்களும் பயன்படுத்தப்படலாம். YouTubeல் உங்கள் தரவு என்பதில் செயல்பாட்டுத் தரவை நிர்வகிக்கலாம் அல்லது முடக்கலாம்.

ஒருங்கிணைக்கப்பட்ட தரவை YouTube எப்படிப் பயன்படுத்தக்கூடும்?

எங்கள் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்த, தரவு யாரிடமிருந்து பெறப்பட்டது எனும் அடையாளத்தை நீக்கி ஒருங்கிணைக்கப்பட்ட YouTube தரவைப் பயன்படுத்தி அனைத்துப் பயனர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துகிறோம். உதாரணமாக, YouTube ஆப்ஸின் செயல்திறனைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பிழைகளைச் சரிசெய்யவும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் 'கண்டறிதல்' அம்சத்தைப் பயன்படுத்துகிறோம்.

தனியுரிமையையும் பாதுகாப்பையும் கட்டுப்படுத்த YouTube எப்படி உதவுகிறது?

YouTubeல் உங்கள் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம் — செயல்திறன்மிக்க கருவிகள் மூலம் உங்கள் அமைப்புகளை நிர்வகித்தல், அந்த அமைப்புகளை எங்கள் தயாரிப்புகளில் எளிதாகப் பயன்படுத்துதல்.போன்றவை இதில் அடங்கும். உதாரணமாக, தரவைத் தானாக நீக்குதல் போன்ற தரவுச் சேகரிப்பைக் குறைக்கும் கருவிகளை நாங்கள் வழங்குகிறோம். இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு YouTube தானாகவே தரவை நீக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. உங்கள் செயல்பாட்டுத் தரவை YouTubeல் உங்கள் தரவு என்பதில் நிர்வகிக்கலாம்.

இதுவரை தேடியவற்றையும் பார்த்தவற்றையும் YouTube எப்படிப் பயன்படுத்தக்கூடும், அவற்றை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

இதுவரை தேடியவற்றையும் பார்த்தவற்றையும் பயன்படுத்தி YouTube உங்கள் அனுபவத்தை மேம்படுத்துகிறது. உதாரணமாக, நீங்கள் சமீபத்தில் பார்த்த வீடியோக்களை எளிதாகத் தேடுவதற்கோ உங்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கோ இவற்றைப் பயன்படுத்துகிறது. உங்களுக்குத் தொடர்புடைய மற்றும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்டவும் இதுவரை தேடியவற்றையும் இதுவரை பார்த்தவற்றையும் பயன்படுத்தக்கூடும். உங்களுக்கு மிகவும் தொடர்புடைய விளம்பரங்களையோ பரிந்துரைகளையோ வழங்க இதுவரை தேடியவற்றிலும் பார்த்தவற்றிலும் உள்ள தரவை YouTubeல் உங்கள் தரவு என்பதில் பார்க்கலாம் நீக்கலாம். இதுவரை பார்த்தவை பிரிவில் போதுமான பதிவுகள் இல்லையெனில், அவற்றைச் சார்ந்து வீடியோ பரிந்துரைகளை (YouTube முகப்புப்பக்கத்தில் உள்ள பரிந்துரைகள் போன்றவை) அனுப்பும் YouTube அம்சங்கள் அகற்றப்படும்.
உங்கள் Google கணக்கில் எந்தெந்தச் செயல்பாட்டுத் தரவு சேமிக்கப்படலாம் என்பதை நிர்வகிக்க YouTubeல் உங்கள் தரவு என்பதைப் பார்க்கலாம். உங்கள் YouTube செயல்பாட்டைப் பார்க்கலாம் நீக்கலாம்.

உங்கள் இருப்பிடத் தரவை YouTube எப்படிப் பயன்படுத்தக்கூடும்?

நீங்கள் இருக்கும் இடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கப் பரிந்துரைகளையும் தேடல் முடிவுகளையும் காட்ட, உங்கள் IP முகவரியில் இருந்து கணக்கிடப்பட்ட இருப்பிடத் தகவல்களை (உங்கள் தற்போதைய பொதுவான பகுதி போன்றவை) YouTube பயன்படுத்தக்கூடும். உதாரணமாக, YouTubeல் செய்திகளையோ வானிலை அறிக்கைகளையோ தேடுகிறீர்கள் எனில், உங்கள் பொதுவான பகுதிக்கான முக்கியச் செய்திகளும் உள்ளூர் வானிலை அறிக்கைகளும் தேடல் முடிவுகளில் காட்டப்படலாம். கூடுதலாக, வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமென நீங்கள் தேர்வுசெய்தால், வீடியோவை நீங்கள் பதிவேற்றும்போது இருக்கின்ற உங்கள் பொதுவான பகுதி, வீடியோவில் நீங்கள் குறியிட்டுள்ள இடம் போன்ற உங்கள் இருப்பிடத் தகவல்கள் உள்ளூரில் இருக்கும் தொடர்புடைய பார்வையாளர்களுக்கு உங்கள் வீடியோக்களைப் பரிந்துரைக்கப் பயன்படுத்தப்படலாம்.

பொதுவான பகுதி என்பது 3 சதுர கிலோமீட்டரை விடப் பெரிதாகவும் குறைந்தபட்சம் 1,000 பயனர்களைக் கொண்டதாகவும் இருக்கும். எனவே, பொதுவான பகுதியில் நீங்கள் மேற்கொள்ளும் தேடலால் உங்களை அடையாளம் காண முடியாது. அதற்குப் பதிலாக, பொதுவான பகுதி உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது. இது நகரங்களுக்கு வெளியே, பொதுவாக 3 சதுர கிலோமீட்டரை விட மிகப் பெரியதாக இருக்கும்.

YouTubeல் உங்கள் தரவு என்பதில் இருந்து இதுவரை சென்ற இடங்களைப் பார்க்கலாம் அழிக்கலாம் முடக்கலாம் அல்லது தானாக நீக்கத் தேர்ந்தெடுக்கலாம்.

YouTubeல் உங்களுக்கு மிகவும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்டுவது உட்பட, Google முழுவதும் இருப்பிடம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறித்து மேலும் அறியலாம்.

உங்கள் தேடலில் இருப்பிடத்தைச் சேர்ப்பதன் மூலம் உள்ளூர் உள்ளடக்கத்தைக் கண்டறிதல்

குறிப்பிட்ட ஒன்றை நீங்கள் தேடும்போது அதற்குத் தொடர்பான தேடல் முடிவுகள் கிடைக்கவில்லை எனில், உங்கள் தேடலில் ஓர் இருப்பிடத்தைச் சேர்த்துப் பாருங்கள் (எ.கா. சென்னை வானிலை).

விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க எந்தத் தரவு மற்றும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துங்கள்

Google ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தும்போது, விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க எந்தத் தரவு மற்றும் செயல்பாடு பயன்படுத்தப்படலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம் அல்லது ஒட்டுமொத்தமாக விளம்பரப் பிரத்தியேகமாக்கலை முடக்கலாம். விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்தப்படும் தரவை விளம்பர அமைப்புகளின் மூலமே எளிதாகக் கட்டுப்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம். விளம்பரங்களைக் காட்டுவதற்காக எங்களுடன் இணைந்து பணியாற்றும் பிற விளம்பரதாரர்கள் உடனான உங்கள் செயல்பாடு மற்றும் உரையாடல்களின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடும் என நாங்கள் கணிப்பவையும் Google கணக்கில் நீங்கள் சேர்க்கும் தகவல்களும் இந்தத் தரவில் அடங்கும்.

Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் விளம்பர அமைப்புகளில், விளம்பரங்கள் பிரத்தியேகமாக்கப்படும் விதத்தை நிர்வகிக்கலாம் அல்லது விளம்பரப் பிரத்தியேகமாக்கலை ஒட்டுமொத்தமாக முடக்கலாம்.

Google விளம்பரங்கள் மற்றும் தரவைப் பற்றி மேலும் அறிய எங்கள் பாதுகாப்பு மையத்திற்குச் செல்லவும்.

தனிப்பட்ட தகவல்களை YouTube எப்படிப் பயன்படுத்தக்கூடும்?

உங்கள் பெயர், படம் போன்றவை தனிப்பட்ட தகவல்களில் உள்ளடங்கும். Google கணக்கில் தனிப்பட்ட தகவல்களை நிர்வகிப்பதன் மூலம் Google சேவைகளில் உங்களைப் பற்றிய எந்தெந்தத் தகவல்களைப் பிறர் பார்க்கலாம் என்பதை நீங்கள் முடிவுசெய்யலாம். சில விளம்பரங்கள் மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் போன்ற கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக உங்களுக்குப் படிவங்களைக் காட்டக்கூடும். ஆனால் இவையெல்லாம் விருப்பத்திற்குட்பட்டதுதான். நீங்கள் YouTubeஐத் தொடர்ந்து பயன்படுத்த இவை அவசியமில்லை.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை YouTube விற்காது

உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்கமாட்டோம். பரிந்துரைகள், பிரத்தியேகமாக்கிய தேடல் முடிவுகள், தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவது போன்ற உங்களுக்கான சேவைகளைப் பிரத்தியேகமாக்க நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். இந்த விளம்பரங்கள் எங்கள் சேவைகளுக்கு நிதி வழங்குவதோடு அவற்றை அனைவரும் கட்டணமின்றிப் பயன்படுத்தவும் உதவுகின்றன. ஆனால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் விற்பனைக்கானது அல்ல.

பதிவேற்றப்படும் வீடியோக்களையும் படங்களையும் YouTube எப்படிப் பயன்படுத்தக்கூடும்?

நீங்கள் பதிவேற்றும் உள்ளடக்கம் மட்டுமே YouTube மூலம் சேமிக்கப்பட்டு உங்கள் YouTube சேனலுடன் இணைக்கப்படும். இந்த உள்ளடக்கத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடியோ பார்வையாளர் அனுமதி அமைப்புகளைப் பொறுத்தது. வீடியோ பார்வையாளர் அனுமதி அமைப்புகளைப் பொறுத்து, பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் மற்ற பார்வையாளர்கள் பார்க்கும்படி இருக்கலாம் அல்லது அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படலாம். வீடியோ பார்வையாளர் அனுமதி அமைப்புகளை எப்படி மாற்றுவது என இங்கே மேலும் அறிக. கம்ப்யூட்டரிலோ மொபைல் சாதனத்திலோ YouTube Studioவைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைத் திருத்துவதும் நிர்வகிப்பதும் எப்படி என்பது குறித்து இங்கே மேலும் அறிந்துகொள்ளலாம்.

ஒரு வீடியோவை நீக்கிய பிறகு அதன் உள்ளடக்கமும் அதனுடன் தொடர்புடைய தரவும் என்ன ஆகும்?

YouTubeல் இருந்து வீடியோவை நீக்க நீங்கள் தேர்வுசெய்தால், அது நிரந்தரமாக நீக்கப்படும். அதன் பிறகு அதை மீட்டெடுக்க முடியாது, YouTube தேடலிலும் காட்டப்படாது. பார்த்த நேரம் போன்ற 'வீடியோவுடன் தொடர்புடைய தரவு', தொடர்ந்து ஒருங்கிணைந்த அறிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கும். கம்ப்யூட்டரிலோ மொபைல் சாதனத்திலோ YouTube Studioவைப் பயன்படுத்தி ஓர் உள்ளடக்கத்தை எப்படித் திருத்துவது நிர்வகிப்பது என்பது பற்றி இங்கே மேலும் அறிக. வீடியோக்களை எப்படி நீக்கலாம், மாற்றலாம் என இங்கே மேலும் அறிக.

உங்கள் YouTube சேனலை நீக்கினால் என்ன ஆகும்?

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் YouTube சேனலை மூடலாம் அல்லது நீக்கலாம். உங்கள் YouTube சேனலை மூடினாலோ நீக்கினாலோ உங்கள் உள்ளடக்கம் (வீடியோக்கள், கருத்துகள், மெசேஜ்கள், பிளேலிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்தும்) நிரந்தரமாக நீக்கப்படும். அதன் பிறகு உங்களால் கருத்து தெரிவிக்கவோ உள்ளடக்கத்தை வெளியிடவோ முடியாது.

YouTube மற்றும் Google சேவைகளில் தரவை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்ற கூடுதல் விவரங்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4459953707802836745
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false