கிளிப்புகளை உருவாக்குதலும் நிர்வகித்தலும்

வீடியோ அல்லது லைவ் ஸ்ட்ரீமின் ஒரு சிறிய பகுதியை வீடியோ கிளிப்பாக உருவாக்கி சமூக ஊடகங்களிலோ மின்னஞ்சல், மெசேஜ்கள் போன்ற நேரடித் தகவல்களாகவோ பிறருடன் பகிரலாம். கிளிப்புகள் பொதுவில் காட்டப்படுபவை என்பதால் அணுகல் உள்ள எவராலும் கிளிப்பையும் அதன் அசல் வீடியோவையும் பார்க்க முடியும். உங்கள் கிளிப்புகள் லைப்ரரி பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய கிளிப்புகளையும் உங்கள் வீடியோக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளிப்புகளையும் பார்க்கலாம். வீடியோ கிரியேட்டர்கள் அவர்களது வீடியோக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளிப்புகளை YouTube Studioவில் நிர்வகிக்கலாம்.

கவனத்திற்கு: வீடியோக்களைக் கிளிப் செய்தல் அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். அதை முடக்குவது எப்படி என அறிக.

YouTube கிளிப்புகள்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழு சேரவும்.

கிளிப்பை உருவாக்கிப் பகிர்தல்

  1. YouTube ஆப்ஸை  திறக்கவும்.
  2. நீங்கள் கிளிப் செய்ய விரும்பும் வீடியோவிற்குச் செல்லவும்.
  3. குழு சேர் பட்டனுக்குக் கீழ், விருப்பத்தேர்வுகளை வலதுபுறமாக ஸ்லைடு செய்து கிளிப் என்பதைத் தட்டவும்.
  4. ஸ்லைடரை இழுப்பதன் மூலம் நீங்கள் கிளிப் செய்ய விரும்பும் வீடியோவின் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்வுசெய்த பகுதியின் நீளத்தை அதிகபட்சம் 60 வினாடிகள் அல்லது குறைந்தபட்சம் 5 வினாடிகள் அதிகரிக்கலாம்/குறைக்கலாம்.
  5. கிளிப்பைப் பகிர் என்பதைத் தட்டவும்.
  6. கிளிப்பைப் பகிர்வதற்கான விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • உட்பொதித்தல்: நீங்கள் இணையதளத்தில் வீடியோவை உட்பொதிக்கலாம்.
    • சமூக வலைத்தளங்கள்: Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளத்தில் உங்கள் கிளிப்பைப் பகிரலாம்.
    • இணைப்பை நகலெடுத்தல்: உங்கள் கிளிப்பின் இணைப்பை நகலெடுத்து வேறொரு இடத்தில் ஒட்டலாம்.
    • மின்னஞ்சல்: உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள இயல்பு மின்னஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் கிளிப்பைப் பகிரலாம்.
கவனத்திற்கு: கிளிப்புகள் லைப்ரரியில் நீங்கள் உருவாக்கிய கிளிப்புகளையும் உங்கள் உள்ளடக்கத்தில் இருந்து பார்வையாளர்கள் உருவாக்கிய கிளிப்புகளையும் பார்க்கலாம். இதை முதன்மை ஆப்ஸில் உள்ள நீங்கள் பிரிவு அதன் பிறகு உங்கள் கிளிப்புகள் என்பதில் கண்டறியலாம்.

உங்கள் வீடியோக்களின் கிளிப்புகளை நிர்வகித்தல்

  1. YouTube Studio ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழ்ப்புறத்தில், உள்ளடக்கம் பிரிவை  தட்டவும்.
  3. மேற்புறத்தில், ஃபில்டர் என்பதைத் தட்டவும்.
  4. கிளிப்புகளைக் கொண்டுள்ள வீடியோ அதன் பிறகு பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வீடியோவின் கிளிப்புகளைப் பார்க்க அதைத் தட்டவும்.
  6. சமீபத்திய கிளிப்புகள் என்பதன் கீழ் மேலும் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. நீங்கள் நிர்வகிக்க விரும்பும் கிளிப்பில் உள்ள '' ஐகானைத் தட்டவும்.
  8. நீங்கள் எடுக்க விரும்பும் நடவடிக்கையைப் பொறுத்து, கிளிப்பைப் பகிர் , கிளிப்பைப் பிளே செய் , சேனலில் இருந்து பயனரை மறை அல்லது கிளிப்பைப் புகாரளி என்பதைத் தட்டவும்.

நீங்கள் உருவாக்கிய கிளிப்பை நீக்குதல்

YouTube ஆப்ஸில்

  1. YouTube ஆப்ஸை    திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படத்தை தட்டவும்.
  3. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் கிளிப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் நீக்க விரும்பும் கிளிப்பில், மெனு '' என்பதைத் தட்டவும்.
  5. கிளிப்பை நீக்கு என்பதைத் தட்டவும்.

YouTube Studio ஆப்ஸில்

  1. YouTube Studio ஆப்ஸை     திறக்கவும்.
  2. உள்ளடக்கம் பிரிவை    தட்டவும்.
  3. ஃபில்டர்    என்பதைத் தட்டவும்.
  4. கீழே ஸ்க்ரோல் செய்து கிளிப்புகளைக் கொண்டுள்ள வீடியோ அதன் பிறகு  பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. கிளிப்புகளைப் பார்க்க விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சமீபத்திய கிளிப்புகள் கார்டின் கீழ் உள்ள மேலும் காட்டு என்பதைத் தட்டவும்.
  7. நீங்கள் நிர்வகிக்க விரும்பும் கிளிப்பின் அருகில் உள்ள  ''  ஐகானைத் தட்டவும்.
  8. கிளிப்பை நீக்கு   என்பதைத் தட்டவும்.

பொதுவான கேள்விகள்

YouTubeல் கிளிப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை.

YouTubeல் வீடியோவிலோ லைவ் ஸ்ட்ரீமிலோ கிளிப்புகளை உருவாக்க வேண்டுமெனில்:

  • உள்நுழைந்திருக்க வேண்டும்.
  • தகுதிபெறும் மற்றும் கிளிப் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள சேனலில் இருந்து கிளிப்பை உருவாக்க வேண்டும். சேனலில் இருந்து கிளிப்பை உருவாக்க முடியாதபடியும் சேனல் அமைப்புகள் முடக்கப்பட்டிருக்கலாம்.

இவற்றிலிருந்து கிளிப்புகளை உருவாக்க முடியாது:

  • 2 நிமிடங்களுக்கும் குறைவான வீடியோக்கள்
  • சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோக்கள்
  • DVR இல்லாத லைவ் ஸ்ட்ரீம்கள்
  • 8 மணிநேரத்திற்கு மேலுள்ள லைவ் ஸ்ட்ரீம்கள்
  • நேரலையில் இருக்கும் பிரீமியர்கள்
  • நியூஸ் சேனல்களில் இருந்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள்

நான் உருவாக்கிய கிளிப்புகளை யாரெல்லாம் பார்க்கலாம்?

கிளிப்புகள் பொதுவில் காட்டப்படுபவை என்பதால் அணுகல் உள்ள எவராலும் கிளிப்பைப் பார்க்கவும் பகிரவும் முடியும் மற்றும் அதன் அசல் வீடியோவையும் பார்க்க முடியும். அசல் வீடியோவின் உரிமையாளரான கிரியேட்டர்கள் அதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளிப்புகள் அனைத்தையும் அவர்களின் லைப்ரரி பக்கத்திலும் YouTube Studioவிலும் அணுகலாம். மேலும் அந்த வீடியோவின் கிளிப்புகளைப் பார்க்கலாம் பகிரலாம். YouTubeல் குறிப்பிட்ட தேடல், கண்டறிதல்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் கிடைக்கும் பகுப்பாய்வுகள் பக்கங்களிலும் கிளிப்புகளைப் பார்க்கலாம்.

உருவாக்கப்பட்ட கிளிப்புகள் ஏன் கிடைக்கவில்லை?

அசல் வீடியோக்கள் நீக்கப்பட்டாலோ தனிப்பட்டதாக அமைக்கப்பட்டாலோ அந்த வீடியோவின் கிளிப்புகள் கிடைக்காது. ஆனால் வீடியோ பட்டியலிடப்படாதவையில் இருந்தால் அந்த வீடியோவின் கிளிப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.

அசல் வீடியோ எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறினால் அதிலிருந்து உருவாக்கப்பட்ட கிளிப்புகள் அகற்றப்படும்.

லைவ் ஸ்ட்ரீமிலிருந்து நான் உருவாக்கிய கிளிப் வேலை செய்யவில்லை.

லைவ் ஸ்ட்ரீம் முடிந்து வீடியோவாகப் பதிவேற்றப்பட்டதும் கிளிப்புகள் காட்டப்பட்டும். DVR இல்லாத அல்லது DVR கால அளவை விட அதிக நீளமுள்ள லைவ் ஸ்ட்ரீம்களிலிருந்து கிளிப்புகளை உருவாக்க முடியாது. லைவ் ஸ்ட்ரீம்களில் DVRஐ இயக்குவது எப்படி என அறிக.

DVR கால அளவை விட லைவ் ஸ்ட்ரீம் நீளமாக இருந்தால், DVR கால அளவுக்கு மேல் உள்ள கிளிப்புகள் எவற்றையும் லைவ் ஸ்ட்ரீம் முடிந்து அசல் வீடியோவைப் பதிவேற்றும் வரையிலும் பிளே செய்ய முடியாது.

கிளிப்புகளிலிருந்து Shorts வீடியோவை என்னால் உருவாக்க முடியுமா?

ஆம். கிளிப்பின் அசல் வீடியோ ரீமிக்ஸ் செய்யத் தகுதிபெற்றிருந்தால் கிளிப்பை ரீமிக்ஸ் செய்யலாம். ஒரு வீடியோவில் உங்களுக்குக் கிடைக்கும் ரீமிக்ஸ் கருவிகள் அனைத்தும் அந்த வீடியோவின் அனைத்துக் கிளிப்புகளுக்கும் கிடைக்கும், இங்கே மேலும் அறிக.

கிளிப்பின் அசல் வீடியோவின் கிரியேட்டரால் மொத்தக் கிளிப்பையும் Shorts வீடியோவாக மாற்ற முடியும், இங்கே மேலும் அறிக.

எனது கிளிப்புகளின் வரவேற்பை எங்கே பார்க்கலாம்?

YouTube Studioவில் உள்ள கிளிப்புகள்  பிரிவில் உங்கள் வீடியோவில் இருந்து உருவாக்கப்பட்ட கிளிப்புகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு கிளிப்பும் பெற்ற பார்வைகளின் எண்ணிக்கை, அதை உருவாக்கியவர் யார் மற்றும் பிற தகவல்களை நீங்கள் பார்க்கலாம். 

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11998897009046433095
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false