YouTube Premium ஆஃப்டர் பார்ட்டிகள் & நேரலை அரட்டை

YouTube Premium ஆஃப்டர் பார்ட்டிகள் என்பது Premium உறுப்பினர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாகக் கலைஞர்கள் நடத்தும் லைவ் ஸ்ட்ரீம்கள் ஆகும். இவை வீடியோ ஊட்டம், நேரலை அரட்டை ஆகியவற்றை ஹோஸ்ட் செய்யும் கலைஞர்களுடன் நிகழ்நேரத்தில் உரையாடுவதற்கு YouTube Premium மற்றும் YouTube Music Premium உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகும். YouTube Premium மற்றும் YouTube Music Premium வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் Premium ஆஃப்டர் பார்ட்டிகள் கிடைக்கின்றன.

YouTube Premium ஆஃப்டர் பார்ட்டிகளுக்கான நேரலை அரட்டை மெசேஜ்களையும் கருத்துகளையும் லைவ் ஸ்ட்ரீமை அணுகும் YouTube Premium மற்றும் YouTube Music Premium உறுப்பினர்கள் அனைவராலும் பார்க்க முடியும். அதாவது காப்பகப்படுத்தப்பட்ட லைவ் ஸ்ட்ரீம்களைப் பார்க்க முடிகின்ற தற்போதைய மற்றும் எதிர்கால YouTube Premium, YouTube Music Premium உறுப்பினர்கள் அனைவராலும் இந்த லைவ் ஸ்ட்ரீம்களிலுள்ள நேரலை அரட்டை மெசேஜ்களையும் கருத்துகளையும் அணுக முடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.

தற்போது நீங்கள் YouTube Premium அல்லது YouTube Music Premium உறுப்பினராக இல்லையென்றாலும் கூட உங்களின் சொந்த நேரலை அரட்டை மெசேஜ்களை உங்களால் தொடர்ந்து பார்க்க முடியும். மேலும் உங்களின் இதுவரையான நேரலை அரட்டைகள் என்பதற்குச் சென்று அவற்றை நீக்குவதற்கான விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது. உங்களிடம் தற்போது YouTube Premium அல்லது YouTube Music Premium இல்லையென்றாலும் கூட உங்கள் சொந்தக் கருத்துகளையும் பார்க்க முடியும். மேலும் இதுவரையான கருத்துகள் என்பதற்குச் சென்று அவற்றை நீக்கவும் முடியும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14851523497945802356
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false