அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Discoverரில் கண்டறிவதைப் பிரத்தியேகமாக்குதல்

உங்களுக்குப் பிடித்த விளையாட்டு அணிகள், செய்தித் தளங்கள் போன்ற நீங்கள் விரும்பும் விஷயங்களைத் தேடாமலேயே அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை Discover மூலம் பெறலாம். மொபைலில் Google ஆப்ஸிலோ இணையத்தில் உலாவும்போதோ Discoverரில் எந்த வகையான அறிவிப்புகளைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம். 

முக்கியம்: இவற்றில் சில அம்சங்கள் சில மொழிகளிலும் நாடுகளிலும் கிடைக்காமல் போகலாம்.

Discoverரைக் கண்டறிதல்

Discoverரைப் பல்வேறு வழிகளில் கண்டறியலாம்:

  • Google ஆப்ஸில் கண்டறியலாம்.
  • Android மொபைல்/டேப்லெட்டில் உள்ள உலாவியில் google.com தளத்திற்குச் சென்று கண்டறியலாம்.
  • சில சாதனங்களில், சாதனத்தின் முகப்புத் திரையில் இருந்து வலதுபுறம் ஸ்வைப் செய்து கண்டறியலாம்.

Discoverரைப் பிரத்தியேகமாக்குதல்

Discoverரில் உங்கள் உள்ளடக்கத்தை நிர்வகிக்க, கீழே உள்ள விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் பயன்படுத்துவது:

  • Chrome எனில் பரிந்துரைக்கப்படும் கட்டுரைகளை நிர்வகி என்பதற்குச் செல்லவும்.
  • Google ஆப்ஸ் அல்லது google.com: எந்த அறிவிப்புகளைப் பெறுவது, பின்தொடர்வது, பின்தொடர்வதை நிறுத்துவது போன்றவற்றைத் தேர்வுசெய்ய கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

Step 1: Turn on Web & App Activity & personal results

உங்கள் தேடல்கள், இதுவரை இணையத்தில் பார்த்தவை, பிற செயல்பாடுகள் ஆகியவற்றை ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பு உங்கள் Google கணக்கில் சேமிக்கும். நீங்கள் விரும்பக்கூடிய செய்திக் கட்டுரைகள் போன்ற பிரத்தியேகமாக்கப்பட்ட பயனுள்ள முடிவுகளை வழங்க உங்களின் சேமிக்கப்பட்ட செயல்பாட்டைத் தனிப்பட்ட முடிவுகள் அம்சம் பயன்படுத்துகிறது.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அதன் பிறகு எனது Search தரவு என்பதைத் தட்டவும்.
  3. "Google முழுவதுமான கட்டுப்பாடுகள்" என்பதற்குக் கீழ் உள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதைத் தட்டவும்.
  4. இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பை இயக்கவும்.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்து அதன் பிறகு எனது Search தரவு என்பதைத் தட்டவும்.
  3. தனிப்பட்ட முடிவுகள் என்பதைத் தட்டவும்.
  4. தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை இயக்கவும்.

படி 2: நீங்கள் பெற விரும்பும் அறிவிப்புகளைத் தேர்வுசெய்யவும்

தலைப்பைப் பின்தொடர்வதை நிறுத்துதல்

உங்களுக்குப் பிடித்த விஷயத்தைத் தேடும்போது அதைப் பின்தொடர்ந்தால் அதுகுறித்த அறிவிப்புகளை Discoverரில் பெறலாம்

Google ஆப்ஸில்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு பிரத்தியேகமாக்கம் அதன் பிறகு ஆர்வங்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
  4. ஒரு தலைப்பைப் பின்தொடர்வதை நிறுத்த, ஆர்வங்கள் பக்கத்தில் உள்ள பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
    • அறிவிப்புகளை முடக்க  ஐகானைத் தட்டவும்.

தலைப்புகளை அனுமதித்தல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அமைப்புகள் அதன் பிறகுபிரத்தியேகமாக்கம் அதன் பிறகுஉங்கள் ஆர்வங்களை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  3. ஆர்வமில்லாதவை என்பதைத் தட்டவும்.
  4. தலைப்பை அனுமதிக்க, அகற்றுவதற்கான ஐகானை தட்டவும்.
குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது மூலங்களில் இருந்து கதைகளைப் பெறுவதை நிறுத்துதல்

முக்கியம்: இந்த அம்சம் சில நாடுகள்/பிராந்தியங்களிலும் சில மொழிகளிலும் கிடைக்காமல் இருக்கக்கூடும். உங்கள் சேகரிப்புகளைப் பார்க்க Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்.

  1. Google ஆப்ஸைத் திறக்கவும் அல்லது உலாவியில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கார்டின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் More என்பதைத் தட்டி அதன் பிறகு [Topic] தலைப்பில் ஆர்வமில்லை என்பதையோ [Source] வெளியிடும் உள்ளடக்கத்தைக் காட்டாதே என்பதையோ தட்டவும்.
நீங்கள் அகற்றியுள்ள தலைப்புகளையோ தளங்களையோ மீட்டெடுத்தல்

Google ஆப்ஸில்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு ஆர்வங்கள் அதன் பிறகு மறைக்கப்பட்டுள்ளவை என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் தலைப்பிற்கோ தகவலுக்கோ அடுத்துள்ள காட்டு காட்டு என்பதைத் தட்டவும்.

உலாவியில்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் உள்ள உலாவியில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு Menu அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. "Discover" என்பதற்குக் கீழே உள்ள ஆர்வங்களை நிர்வகியுங்கள்அதன் பிறகு மறைக்கப்பட்டுள்ளவை என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் தலைப்பிற்கோ தகவலுக்கோ அடுத்துள்ள காட்டு காட்டு என்பதைத் தட்டவும்.

படி 3: Discoverரில் எப்போதெல்லாம் தலைப்புகளைக் கண்டறியலாம் என்பதை மாற்றவும்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் திறக்கவும் அல்லது உலாவியில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. நீங்கள் விரும்பும் கார்டின் கீழ் வலதுபுறத்தில் உள்ள விருப்பம் தெரிவிப்பதற்கான ஐகானை பிடித்தவை தட்டவும்.
  3. நீங்கள் விரும்பிய உள்ளடக்கத்தைக் கண்டறிய, Discoverரில் விரும்பியவை என்பதற்குச் செல்லவும்.
முக்கியம்: 'பிடித்தது' எனக் குறித்துள்ள கட்டுரைகளை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். இருப்பினும் நீங்கள் எவற்றைத் தேர்வுசெய்கிறீர்கள் என்ற தகவல், பெயர் குறிப்பிடப்படாமல் வெளியீட்டாளர்களுடன் பகிரப்படக்கூடும்.

Discoverரில் எதை உங்களுக்குக் காட்ட வேண்டும் என Google தீர்மானிக்கும் விதம்

Discoverரில் எதைக் காட்ட வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கு உங்கள் சாதனத்திலிருந்தும் பிற Google தயாரிப்புகளில் இருந்தும் பெற்ற தகவல்களை Google பயன்படுத்துகிறது.

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தரவையும் Google பயன்படுத்துகிறது. இந்தத் தரவு நீங்கள் மாற்றக்கூடிய அல்லது இயக்க/முடக்கக்கூடிய அமைப்புகளைப் பொறுத்தது. உதாரணத்திற்கு:

Discoverரில் பிரத்தியேகமாக்கலை முடக்குதல்

பிரத்தியேகமான கதைகளைப் பெற விரும்பவில்லை எனில் தனிப்பட்ட முடிவுகள் அம்சத்தை முடக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16162243607429832628
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false