சிலநேரங்களில் Googleளில் நீங்கள் தேடும்போது உங்களுக்கான பதில் அடங்கிய பெட்டி மேற்பகுதியில் காட்டப்படும். உங்கள் கேள்விக்கான பதிலைத் தர உதவுகின்ற இணையதளத்தின் சிறுபகுதி இந்தப் பெட்டியில் இருக்கும். இது “பிரத்தியேகத் துணுக்கு" எனப்படும்.
பிரத்தியேகத் துணுக்குகளை இங்கு பார்க்கலாம்:
- தேடல் முடிவுகள் பக்கத்தின் மேற்பகுதியில்.
- "பிறர் இவற்றையும் கேட்டுள்ளனர்" பிரிவில்.
- அதிவிவர கிராஃப் தகவல்களுக்கு (பக்கத்தின் வலதுபக்கம் உள்ளவை) அடுத்ததாக.
பயனர்களுக்கு வேண்டிய பதில்கள் ஓர் இணையதளத்தின் சிறுபகுதியில் இருப்பதாக Google கருதும்போது இந்தப் பிரத்தியேகத் துணுக்குகள் காட்டப்படும்.
நீங்கள் மொபைல் பயன்படுத்தும்போதும் சாதனத்துடன் பேசும்போதும் இவை உதவியாக இருக்கும்.
வழக்கமாக ஒரு பெட்டிதான் இருக்கும் என்றாலும், சில நேரங்களில் அதற்கு அதிகமாகவும் காட்டப்படலாம்.
பிரத்தியேகத் துணுக்குகளை Google தேர்வுசெய்யும் விதம்
பிரத்தியேகத் துணுக்குகள் Google கண்டறியும் இணையதளங்களில் இருந்து காட்டப்படுகின்றன. அவை உங்கள் கேள்விகளுக்கு எந்த அளவு சரியான பதிலைத் தருகின்றன, எந்த அளவு உதவிகரமாக உள்ளன என்பதைப் பொறுத்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதைப் பற்றி Googleளுக்கு உங்கள் கருத்தை வழங்கினால் இன்னும் சிறப்பான பதில்களைக் கண்டறிய அது கற்றுக்கொள்ளும்.
உதவிக்குறிப்பு: நீங்கள் இணையதள உரிமையாளராக இருந்தால் இந்தப் பிரத்தியேகத் துணுக்குகளில் உங்கள் இணையதளத்தை Google காட்ட உதவுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
பிரத்தியேகத் துணுக்குகள் ஏன் அகற்றப்பட்டன?சிலநேரங்களில், எங்கள் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் பிரத்தியேகத் துணுக்கை Google நீக்கும்.
நீக்க வேண்டிய துணுக்குகளைக் கண்டறிய உங்களைப் போன்றவர்களின் புகார்களை Google பயன்படுத்துகிறது. இந்தப் புகார்கள் தயாரிப்புகளை மேம்படுத்த Googleளுக்கு உதவுகின்றன.
ஏதேனும் பிரத்தியேகத் துணுக்கு விதிகளை மீறினால் Google அதை நீக்கும். மேலும், விதிகளை மீறும் பல துணுக்குகள் ஒரு இணையதளத்தில் இருந்தால் அந்த இணையதளத்தில் இருந்து துணுக்குகளைக் காட்டுவதை Google நிறுத்திவிடும்.
பிரத்தியேகத் துணுக்கில் சிக்கல் இருந்தால் துணுக்கின் கீழ் உள்ள கருத்து என்பதைக் கிளிக் செய்யவும். இந்தச் சூழல்களில் நீங்கள் புகாரளிக்கலாம்:
- எங்கள் கொள்கைகளைப் பின்பற்றவில்லை
- தவறான தகவல் உள்ளது
- நீங்கள் விரும்பாத பதிலை வழங்குகிறது
உதவிக்குறிப்பு: பிரத்தியேகத் துணுக்கு உங்களுக்கு உதவிகரமாக இருந்தால் அது குறித்த நேர்மறையான கருத்தையும் நீங்கள் வழங்கலாம்.
பிரத்தியேகத் துணுக்குகள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய, Google Search உள்ளடக்கக் கொள்கைகள், Search அம்சங்களுக்கான பின்வரும் கொள்கைகள் போன்றவற்றை மீறும் துணுக்குகளைக் காட்டுவதைத் தடுக்கும் சிஸ்டங்கள் எங்களிடம் உள்ளன:
- ஆபத்தான உள்ளடக்கம்
- ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள்
- உபத்திரவமான உள்ளடக்கம்
- வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கம்
- உள்நோக்குடன் மாற்றியமைக்கப்பட்ட மீடியா
- மருத்துவ உள்ளடக்கம்
- வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்
- பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கம்
- வன்முறை & கொடூரமான உள்ளடக்கம்
- ஆபாசமான மற்றும் தகாத சொற்கள்
குறிப்பிட்ட அம்சத்திற்கான, பொருந்தக்கூடிய ஒரு கூடுதல் கொள்கையும் பிரத்தியேகத் துணுக்குகளுக்கு உள்ளது::
- பொது நலன் சார்ந்த தலைப்புகளில் பெரும்பான்மையான கருத்துகளில் இருந்து முரண்படுதல்: பொது நலன் சார்ந்த உள்ளடக்கத்தைப் பற்றிய பிரத்தியேகத் துணுக்குகள் நன்கு அறியப்பட்ட அல்லது நிபுணர்களின் ஒருமித்த கருத்துகளுக்கு எதிராக இருக்கக்கூடாது. இந்தத் தலைப்புகளுக்கான உதாரணங்கள்:
- குடிமையியல்
- வரலாறு
- மருத்துவம்
- அறிவியல்
- தனிநபர்களோ குழுக்களோ கடுமையான தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகப் போதிய சான்றுகள் இல்லாமல் உண்மைபோல் காட்டப்படும் தகவல்களை நாங்கள் அகற்றக்கூடும்.
உதவிக்குறிப்பு: பிரத்தியேகத் துணுக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கைகள் பொருந்தும். இணையத் தேடல் விவரங்களுக்கு இவை பொருந்தாது, அவற்றை அகற்ற இவை பயன்படுத்தப்படாது.