உங்களின் தனிபட்ட தகவலை Googleளிலிருந்து அகற்றுதல்

Google Searchசில் வரும் உங்களைப் பற்றிய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான வழிமுறை சிலநேரங்களில் உங்களுக்குத் தேவைப்படக்கூடும் என அறிவோம். குறிப்பிட்ட சமயங்களில், Google Searchசில் இருந்து அதுபோன்ற தகவல்களுக்கான இணைப்புகளை Google அகற்றக்கூடும்.

முக்கியம்: இணையம் முழுவதும் உள்ள இணையதளங்களில் இருந்து சேகரித்த தகவல்களை Google Search காட்டுகிறது. உள்ளடக்கத்தை Google Searchசில் இருந்து நாங்கள் அகற்றினாலும் அது இணையத்தில் காட்டப்படக்கூடும். அதாவது அந்த உள்ளடக்கம் இருக்கும் வலைப்பக்கத்திலோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ, பிற தேடல் இன்ஜின்களிலோ, பிற வழிகளிலோ உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். எனவே தளத்தின் வலைநிர்வாகியைத் தொடர்புகொண்டு உள்ளடக்கத்தை அகற்றுமாறு நீங்கள் கேட்கலாம். வலைநிர்வாகியை எப்படித் தொடர்புகொள்வது என அறிக.

இந்தத் தகவல்களை இணையதள உரிமையாளர் அகற்றியிருந்தால் எங்களுடைய வழக்கமான புதுப்பிப்புச் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக Google Searchசில் இருந்தும் இவை அகற்றப்படும். இருப்பினும், பழைய உள்ளடக்கத்தை அகற்றும் கருவி மூலமாகவும் பழைய உள்ளடக்கம் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

Google அகற்றும் தனிப்பட்ட தகவல்கள்

இணைய உரிமையாளரைத் தொடர்புகொண்டு தளத்தில் இருக்கும் உள்ளடக்கத்தை உங்களால் அகற்ற முடியாத பட்சத்தில் அடையாளத் திருட்டு, நிதி மோசடி போன்ற குறிப்பிடத்தக்க ஆபத்துகளையோ பிற குறிப்பிட்ட தீங்குகளையோ உருவாக்கும் தனிப்பட்ட தகவல்களை Google அகற்றக்கூடும். எந்த வகையான உள்ளடக்கத்தை அகற்றலாம் என்பது குறித்து பின்வரும் கட்டுரைகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்:

உங்கள் கோரிக்கையுடன் தொடர்புடைய அகற்றுதல் குறித்த கட்டுரையைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுடன் உங்கள் கோரிக்கை பொருந்துவதாகக் கருதினால் அதில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

Google அகற்றும் பிற தகவல்கள்

DMCA பதிப்புரிமை மீறல் குறித்த புகார்கள், சிறார் பாலியல் கொடுமை சார்ந்தவை போன்ற குறிப்பிட்ட சட்டப்பூர்வக் காரணங்களுக்காகவும் உள்ளடக்கத்தை Google அகற்றும். சட்டப்பூர்வக் காரணத்திற்காக உள்ளடக்கத்தை அகற்றுமாறு கோருவதற்கு, சட்ட ரீதியான சிக்கல் தீர்வுப் படிவத்தைப் பயன்படுத்தவும்.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
100334
false