இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைப் பார்த்தலும் கட்டுப்படுத்தலும்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருந்தால் பிற Google சேவைகளில் செய்யப்படும் தேடல்களும் செயல்பாடும் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். இதன் மூலம் விரைவான தேடல்கள் போன்ற பிரத்தியேகமாக்கப்பட்ட அனுபவங்களையும் மிகவும் பயனுள்ள ஆப்ஸ் மற்றும் உள்ளடக்கப் பரிந்துரைகளையும் பெறலாம்.

எப்போது வேண்டுமானாலும் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை முடக்கவோ கடந்த காலச் செயல்பாட்டை நீக்கவோ முடியும்.

கவனத்திற்கு: பணியிடத்திலோ பள்ளியிலோ Google கணக்கு வழங்கப்பட்டிருந்தால், இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை உங்கள் நிறுவனத்திற்கான கூடுதல் சேவையாக இயக்குவதற்கு நிர்வாகியைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம்.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்குதல் அல்லது முடக்குதல்

 1. கம்ப்யூட்டரில் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் Google கணக்கில் உள்நுழையுமாறு கேட்கப்படக்கூடும்.
 2. இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைஇயக்கவும் அல்லது முடக்கவும்.
 3. இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருந்தால்:
  • "Chrome உலாவல் வரலாற்றையும் Google சேவைகளையும் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் ஆப்ஸின் செயல்பாட்டைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  • "குரல் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: சில உலாவிகளும் சாதனங்களும் கூடுதல் அமைப்புகளைக் கொண்டிருக்கலாம், அவை இந்தச் செயல்பாடு சேமிக்கப்படும் முறையைப் பாதிக்கலாம்.

உங்கள் செயல்பாட்டைப் பார்க்கவோ நீக்கவோ செய்தல்

எனது செயல்பாடு என்பதற்குச் சென்று உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைப் பார்க்கவோ நீக்கவோ முடியும். செயல்பாட்டை நீங்களே எவ்வாறு நீக்கலாம்? அல்லது தானியங்கு நீக்கத்தை எவ்வாறு அமைக்கலாம்? என்பது குறித்து மேலும் அறிக.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடாக எவை சேமிக்கப்படும்?

உங்கள் தேடல்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் Google தளங்கள், ஆப்ஸ் மற்றும் சேவைகளில் செய்யப்படும் பிற செயல்பாடு

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருக்கும்போது Google பின்வரும் தகவல்களைச் சேமிக்கும்:

 • Maps, Play போன்ற Google தயாரிப்புகளிலும் சேவைகளிலும் நீங்கள் செய்யும் தேடல்களும் பிற செயல்பாடுகளும்
 • உங்கள் இருப்பிடம், மொழி, IP முகவரி, பரிந்துரைப்பவர் மற்றும் நீங்கள் உலாவி பயன்படுத்துகிறீர்களா ஆப்ஸ் பயன்படுத்துகிறீர்களா என்ற தகவல்கள்
 • நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரங்கள் அல்லது விளம்பரதாரரின் தளத்தில் வாங்கும் பொருட்கள்
 • சமீபத்திய ஆப்ஸ் அல்லது நீங்கள் தேடிய தொடர்புப் பெயர்கள் போன்ற உங்கள் சாதனத்திலுள்ள தகவல்கள்

கவனத்திற்கு: நீங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் செயல்பாடு சேமிக்கப்படலாம்.

உங்கள் உலாவல் குறித்த தகவல்கள் மற்றும் Google சேவைகளைப் பயன்படுத்துகின்ற தளங்கள், ஆப்ஸ் மற்றும் சாதனங்களில் செய்யப்படும் பிற செயல்பாடு

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருக்கும்போது பின்வரும் கூடுதல் செயல்பாட்டை உங்களால் சேர்க்கமுடியும்:

 • விளம்பரங்களைக் காட்டுவதற்காக Googleளுடன் கூட்டாளராக இருக்கும் தளங்களும் ஆப்ஸும்
 • Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்களும் ஆப்ஸும், இதில் Googleளுடன் ஆப்ஸ் பகிரும் தரவும் உள்ளடங்கும்
 • உங்கள் Chrome உலாவல் வரலாறு
 • பேட்டரி நிலை, சிஸ்டம் பிழைகள் போன்றவை உள்ளிட்ட Android உபயோகம் & பிழை கண்டறிதல்

இந்தத் தகவல்களை Google சேமிக்க அனுமதிப்பதற்கு:

 • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • "Chrome வரலாற்றையும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டையும் உள்ளடக்கு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்வுசெய்யப்படிருக்க வேண்டும்.

உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்து Chrome ஒத்திசைவை இயக்கியிருந்தால் மட்டுமே உங்களின் Chrome வரலாறு சேமிக்கப்படும். Chrome ஒத்திசைவு பற்றி மேலும் அறிக.

கவனத்திற்கு: பலர் பயன்படுத்தும் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தினாலோ ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குடன் உள்நுழைந்திருந்தாலோ நீங்கள் பயன்படுத்தும் உலாவி அல்லது சாதனத்தில் இருக்கும் இயல்புக் கணக்கில் செயல்பாடு சேமிக்கப்படலாம்.

குரல் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகள்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருக்கும்போது உங்கள் செயல்பாட்டின் ஒரு பகுதியாக குரல் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகளையும் சேர்க்க முடியும். குரல் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகள் பற்றி மேலும் அறிக.

இந்தத் தகவல்களை Google சேமிக்க அனுமதிப்பதற்கு:

 • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • "குரல் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகளைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

சேமிக்கப்பட்ட உங்கள் செயல்பாடு எவ்வாறு பயன்படுத்தப்படும்?

சேமிக்கப்பட்ட உங்கள் செயல்பாட்டை Google எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றியும் அதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றியும் மேலும் அறிக.

தேடல் வினவல்களை Google பொதுவாக எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தனியுரிமைக் கொள்கை FAQ என்பதைப் பார்க்கவும்.

கணக்கிலிருந்து வெளியேறும்போது இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு எவ்வாறு செயல்படும்?

கணக்கிலிருந்து வெளியேறினாலும் கூட தேடல் தொடர்புடைய செயல்பாட்டைப் பயன்படுத்தி தேடல் மற்றும் விளம்பர முடிவுகளைப் பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம். இந்த வகையான தேடல் பிரத்தியேகமாக்குதலை முடக்க, தனிப்பட்ட முறையில் தேடலாம், உலாவலாம். எப்படியென அறிக.

உலாவல் வரலாறு

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் பக்கத்தில் "Chrome வரலாற்றையும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டையும் உள்ளடக்கு" என்ற பெட்டியைத் தேர்வுசெய்யலாம். இந்தப் பெட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கும்போது உங்கள் சாதனத்தில் இருந்து செயல்பாடு சேமிக்கப்படுகிறதா என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் தேடல்களும் நீங்கள் பார்க்கும் தளங்களும்கூட உலாவியிலோ Google Toolbarரிலோ சேமிக்கப்பட்டிருக்கலாம். Chrome, Toolbar, Safari, Internet Explorer, Firefox போன்ற உலாவிகளில் உங்கள் தேடல் வரலாற்றை எவ்வாறு நீக்குவது என்பதை அறிக.