நீங்கள் ஒவ்வொரு முறை தேடும்போதும் Googleளில் இருந்து முடிவுகளைப் பெற Googleளை இயல்புத் தேடல் இன்ஜினாக அமைக்கலாம்.
பிரவுசரில் Googleளை இயல்புத் தேடல் இன்ஜினாக அமைத்தல்
உங்கள் பிரவுசர் கீழே காட்டப்படவில்லை என்றால் தேடல் அமைப்புகளை மாற்றுவது குறித்த தகவலுக்கு அதன் உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்.
Google Chrome
கம்ப்யூட்டர்
- Google Chromeமைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில், மேலும்
என்பதைத் தட்டி
அமைப்புகள் என்பதைத் தட்டவும். அல்லது முகவரிப் பட்டியில்
chrome://settings
என உள்ளிடவும்.- உதவிக்குறிப்பு: Chrome புதுப்பிப்பு இருப்பின், மேல் வலதுபுறத்தில் ‘புதுப்பிப்பு’
என்ற விருப்பம் காட்டப்படும். புதுப்பிப்பு
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உதவிக்குறிப்பு: Chrome புதுப்பிப்பு இருப்பின், மேல் வலதுபுறத்தில் ‘புதுப்பிப்பு’
- "தேடல் இன்ஜின்" என்பதற்குக் கீழ், Google என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Android ஃபோன் அல்லது டேப்லெட்
- Chrome ஆப்ஸை
திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில், மேலும்
என்பதைத் தட்டி
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
- "அடிப்படைகள்" என்பதற்குக் கீழ், தேடல் இன்ஜின் என்பதைத் தட்டி
Google என்பதைத் தட்டவும்.
iPhone அல்லது iPad
- Chrome ஆப்ஸை
திறக்கவும்.
- கீழ்ப்பகுதியில், மேலும்
என்பதைத் தட்டி
அமைப்புகள்
என்பதைத் தட்டவும்.
- தேடல் இன்ஜின் என்பதைத் தட்டி
Google என்பதைத் தட்டவும்.
Microsoft Edge
Microsoft Edge 79 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பு
- Microsoft Edge பிரவுசரைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில், அமைப்புகள் & பலவற்றைக் காட்டும் மூன்று புள்ளி ஐகானை
கிளிக் செய்து
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள தனியுரிமை, தேடல் மற்றும் சேவைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "சேவைகள்" என்பதற்குச் செல்லவும்.
- முகவரிப் பட்டி மற்றும் தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "முகவரிப் பட்டியில் பயன்படுத்தப்படும் தேடல் இன்ஜின்" என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றுதலில் Google என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "புதிய பக்கங்களில் தேடுவதற்குத் தேடல் பெட்டி அல்லது முகவரிப் பட்டியைப் பயன்படுத்து" என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றுதலில் முகவரிப் பட்டி என்பதைக் கிளிக் செய்யவும்.
Internet Explorer 8 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பு
உதவிக்குறிப்பு: நீங்கள் Internet Explorerரின் எந்தப் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, உதவி Internet Explorer பற்றி என்பதைக் கிளிக் செய்யவும்.
Internet Explorer 11
- Internet Explorerரைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள பற்சக்கர ஐகானைக் கிளிக் செய்யவும்.
- செருகு நிரல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழ்ப்பகுதியில் உள்ள கூடுதல் கருவிப்பட்டிகளையும் நீட்டிப்புகளையும் கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
- Google Search நீட்டிப்புக்குச் செல்லவும்.
- சேர் என்பதைக் கிளிக் செய்யவும். உறுதிப்படுத்த சேர் என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள பற்சக்கர ஐகானைக் கிளிக் செய்யவும்.
- செருகு நிரல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள "செருகு நிரல் வகைகள்" என்பதன் கீழ் தேடல் வழங்குநர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- வலதுபுறத்தில் உள்ள Google Search என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழ்ப்பகுதியில் உள்ள இயல்பாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
Internet Explorer 10
- Internet Explorerரைத் திறக்கவும்.
- பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள பற்சக்கர ஐகானைக் கிளிக் செய்யவும்.
- செருகு நிரல்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- பக்கத்தின் இடதுபுறத்தில் தேடல் வழங்குநர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழே இடது மூலையில் மேலும் வழங்குநர்களைக் கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
- Google என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Internet Explorerரில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "இதை இயல்புத் தேடல் வழங்கும் நிறுவனமாக அமை" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
- சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
Internet Explorer 9
- Internet Explorerரைத் திறக்கவும்.
- உலாவியின் மேல் வலது மூலையில் உள்ள கருவிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
- இணைய விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பொதுத் தாவலில் "தேடல்" பிரிவைக் கண்டறிந்து அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Google என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இயல்பாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- மூடுக என்பதைக் கிளிக் செய்யவும்.
Internet Explorer 8
- Internet Explorerரைத் திறக்கவும்.
- உலாவியின் மேல் வலது மூலையிலுள்ள தேடல் பெட்டியில் கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.
- மேலும் வழங்குநர்களைக் கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
- Google என்பதைக் கிளிக் செய்யவும்.
- "இதை இயல்புத் தேடல் வழங்கும் நிறுவனமாக அமை" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
- சேவை வழங்குநர்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
Firefox
- Firefoxஸைத் திறக்கவும்.
- உலாவியின் மேல் வலதுபுறத்தில் உள்ள சிறிய தேடல் பட்டியில் ’தேடு’
என்பதைக் கிளிக் செய்யவும்.
- தேடல் அமைப்புகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- "இயல்புத் தேடல் இன்ஜின்" என்பதன் கீழ் Google என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Safari
- Safariயைத் திறக்கவும்.
- தேடல் பட்டியைக் கிளிக் செய்யவும்.
- தேடல் பட்டியின் இடது மூலையிலுள்ள உருப்பெருக்கியைக் கிளிக் செய்யவும்.
- Google என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Android உலாவி
- உலாவி ஆப்ஸைத் திறக்கவும். அது இணையம் என்றோ உலாவி என்றோ அழைக்கப்படலாம்.
- மொபைலிலோ உலாவியின் மேல் வலதுபுறத்திலோ உள்ள மெனு பட்டனைத் தட்டவும்.
- அமைப்புகள்
மேம்பட்டவை
தேடல் இன்ஜினை அமை என்பதைத் தட்டவும்.
- Google என்பதைத் தட்டவும்.
தேடல் விட்ஜெட்
முக்கியம்: ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (European Economic Area - EEA) மார்ச் 1, 2020 அன்றோ அதற்குப் பிறகோ விநியோகிக்கப்பட்ட புதிய சாதனங்களில் இந்த அம்சம் கிடைக்கிறது.
- Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத்
திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
- தேடல் விட்ஜெட்
Googleளுக்கு மாற்று என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: Googleளை எப்படி முகப்புப்பக்கமாக அமைப்பது என அறிக.