Googleளை முகப்புப்பக்கமாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு முறை உலாவியைத் திறக்கும்போதும் Googleளை விரைவாகப் பெறமுடியும்.
முகப்புப்பக்கத்தை மாற்றுதல்
கீழுள்ள உலாவிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள படிகளைக் கம்ப்யூட்டரில் பின்பற்றவும். கீழுள்ளவற்றில் உங்கள் உலாவி காணப்படவில்லை என்றால் உலாவியின் "உதவி" பிரிவிற்குச் சென்று உலாவியின் முகப்புப்பக்கத்தை மாற்றுவது குறித்த தகவல் உள்ளதா என்று பார்க்கவும்.
Firefox- உலாவியைத் திறந்து www.google.com என்பதற்குச் செல்லவும்.
- அந்தப் பக்கத்தை முகப்பு பட்டனுக்கு இழுத்து விடுவிக்கவும்.
- ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கம்ப்யூட்டரின் உலாவியின் மேல் வலது மூலையில் ’மேலும்’
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "தோற்றம்" என்பதன் கீழுள்ள முகப்பு பட்டனைக் காட்டு என்பதை இயக்கவும்.
- உங்களின் தற்போதைய முகப்புப் பக்கம் அல்லது பிரத்தியேக வலைதளத்தின் முகவரியை உள்ளிடவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதை உள்ளிடவும்:
www.google.com
.
- திரையின் மேல் இடதுபுறத்தில் Safari
விருப்பங்கள்
பொது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "புதிய சாளரங்களை இதில் திறக்கவும்" மற்றும் "புதிய பக்கங்களை இதில் திறக்கவும்" என்பதற்கு அடுத்துள்ள முகப்புப்பக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "முகப்புப்பக்கம்" என்பதற்கு அடுத்து இதை உள்ளிடவும்:
www.google.com
.
- உலாவியின் மேற்புறத்தில் கருவிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இணைய விருப்பங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பொது என்பதைக் கிளிக் செய்யவும்.
- "முகப்புப்பக்கம்" என்பதன்கீழ் இதை உள்ளிடவும்:
www.google.com
. - சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உலாவியை மீண்டும் தொடங்கவும்.
- உலாவியின் மேல் வலதுபுறத்தில் ’மேலும்’
அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "Microsoft Edge உடன்" என்பதற்குக் கீழுள்ள 'கீழ்நோக்கிய அம்புக்குறி’
ஒரு குறிப்பிட்ட பக்கம் அல்லது பக்கங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தற்போதைய முகப்புப்பக்கம் காட்டப்பட்டால்: URLலுக்கு அடுத்துள்ள X என்பதைக் கிளிக் செய்யவும்.
- *URLலை உள்ளிடவும்* என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் இதை உள்ளிடவும்:
www.google.com
.
முகப்புப்பக்கமாக எப்போதும் Google மட்டுமே காட்டப்படுகிறது
உங்கள் அனுமதியின்றி முகப்புப்பக்க அமைப்புகளை Google மாற்றாது.
- முகப்புப்பக்கத்தை மீட்டமைக்கவும். முகப்புப்பக்கமாக Googleளுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் தளத்தை மாற்ற, மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலாவிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
- தேவையற்ற நிரல்கள் உள்ளதா என்று பார்க்கவும். முகப்புப்பக்கத்தை மீட்டமைப்பது உங்கள் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால் Google தளத்தைப் போன்றே தோற்றமளிக்கும் மால்வேர் என்று அழைக்கப்படும் தேவையற்ற நிரல்கள் இருக்கலாம். மால்வேரைப் பற்றியும் அதை எவ்வாறு அகற்றுவது என்பதைப் பற்றியும் அறிக.