சில தேடல் முடிவுகளில் உங்கள் கருத்துகளை அனுப்புவதற்கான அல்லது மொழிபெயர்ப்பைப் பரிந்துரைப்பதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள். அனைவருக்கும் பலன் கிடைக்கும் விதத்தில் Google தேடலை மேம்படுத்த உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவும்.
தேடல் முடிவுக்கு கீழே உள்ள கருத்து என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு பின்வருபவை குறித்து எங்களிடம் கூறவும்:
- Google தேடல் குறித்து நீங்கள் விரும்புவது/ விரும்பாதது
- குழப்பமான அல்லது சரியாக செயல்படாத விஷயங்கள்
- Google தேடலைச் சிறப்பாக்குவதற்கான ஆலோசனைகள்
இவற்றைக் குறித்து முடிந்தவரை திட்டவட்டமாகக் கூறுங்கள். எதை மாற்றலாம் என்பது குறித்து தீர்மானிப்பதில் நீங்கள் வழங்கும் விளக்கமான தகவல்கள் எங்களுக்கு உதவும். உங்கள் கருத்துகளுக்கு நேரடியாக பதிலளிக்கமாட்டோம் எனினும் சிக்கல்களைச் சரிசெய்யவும் தேடல் முடிவுகளை மேம்படுத்தவும் நீங்கள் அனுப்பும் தகவல்களைப் பயன்படுத்துவோம்.
கவனத்திற்கு: தேடல் முடிவுகளின் பக்க ரேங்க்கிங்கை நீங்கள் வழங்கும் கருத்து பாதிக்காது.