Google Searchசில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட, பாதுகாக்கவேண்டிய அல்லது பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை நீங்கள் கண்டறிந்தால், அதை அகற்றும்படி எங்களிடம் கேட்கலாம். நீங்கள் சிக்கலைப் புகாரளிக்கும்போது அந்தச் செயல்முறையில் படிப்படியாக உங்களுக்கு வழிகாட்டுவோம்.
உள்ளடக்கம் உங்களைப் பற்றியதாக இருந்தால், நீங்களோ பிரதிநிதியோ கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். உங்கள் கோரிக்கையில் உள்ள உள்ளடக்கத்தைச் சரிபார்த்து, அது எங்கள் தனிப்பட்ட உள்ளடக்கக் கொள்கைகளை மீறினால் Google தேடல் முடிவுகளில் இருந்து அதை அகற்றுவோம். எங்கள் தனிப்பட்ட உள்ளடக்கக் கொள்கைகள் உலகம் முழுவதும் பொருந்தும்.
குறிப்பு: 18 வயதிற்குட்பட்டவர்களை நிர்வாணமாகவோ பாலியல் ரீதியாகவோ காட்டும் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம்.
அகற்றுதல் கோரிக்கையைத் தொடங்குங்கள்
அகற்றும்படி நீங்கள் கேட்கக்கூடிய உள்ளடக்க வகைகள்
தனிப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான எங்கள் கொள்கைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
- 18 வயதிற்குட்பட்ட தனிநபர்களுக்கான உள்ளடக்கம்
- தனிநபர் அடையாளத் தகவல்கள் மற்றும் டாக்ஸிங் உள்ளடக்கம்
- தனிப்பட்ட பாலியல் உள்ளடக்கம்
- முறைகேடான அகற்றல் நடைமுறைகளைப் பின்பற்றும் தளங்களில் உள்ள உங்களைப் பற்றிய உள்ளடக்கம்
இந்தத் தகவல்களை இணையதள உரிமையாளர் அகற்றியிருந்தால் எங்களுடைய வழக்கமான புதுப்பிப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக Google Searchசில் இருந்தும் அவை அகற்றப்படும். இருப்பினும், பழைய உள்ளடக்கத்தைப் புதுப்பிப்பதற்கான கருவியைப் பயன்படுத்தியும் பழைய உள்ளடக்கத்தைப் புதுப்பிக்கும்படி நீங்கள் கேட்கலாம்.
பதிப்புரிமை மீறல், குறிப்பிட்ட வர்த்தக முத்திரை மீறல்கள் அல்லது சட்டப்படி அகற்றப்பட வேண்டிய பிற வகையான தகவலைக் கொண்ட உள்ளடக்கத்தை நீங்கள் கண்டறிந்தால், சட்டப்பூர்வக் காரணங்களுக்காக அகற்றும்படி கேட்கலாம்.
நீங்கள் இருக்கும் பாலியல் உள்ளடக்கம் உங்கள் அனுமதி இல்லாமல் பகிரப்பட்டிருந்தால், அதற்கான உதவித் தகவல்கள் உள்ளன. வெளிப்படையான அல்லது அந்தரங்கப் படங்களை அகற்றுவதற்கு உதவி பெறுங்கள்.