பயன்படுத்தக்கூடிய & பகிரக்கூடிய படங்களைக் கண்டறிதல்

நீங்கள் Google தேடலை மேற்கொள்ளும்போது, மீண்டும் பயன்படுத்துவதற்கான உரிமங்களைக் கொண்ட படங்களைக் கண்டறியும் வகையில் உங்கள் முடிவுகளை வடிகட்ட முடியும்.

முக்கியம்: படங்கள் பதிப்புரிமைக்கு உட்பட்டவையாக இருக்கலாம். மீண்டும் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தை எப்படிக் கண்டறிவது என அறிக.

உரிமம் & மீண்டும் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளைப் பார்த்தல்

உள்ளடக்கத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் உரிமம் சட்டப்பூர்வமானது என்பதை உறுதிசெய்துகொண்டு மீண்டும் பயன்படுத்துவது குறித்த சரியான விதிமுறைகளைப் பார்க்கவும். உதாரணமாக, படத்தைப் பயன்படுத்தும்போது அதை உருவாக்கியவரை ‘பங்களித்தவர்’ எனக் குறிப்பிட வேண்டுமென அதன் உரிமம் வலியுறுத்தக்கூடும்.

இவற்றைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்:

  • உரிமத் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கும் படங்களைக் கண்டறிய “பயன்பாட்டிற்கான உரிமை” வடிப்பானைப் பயன்படுத்துதல். படங்களை ஹோஸ்ட் செய்யும் தளங்களோ பட வழங்குநரோ வழங்கிய தகவல்களின் அடிப்படையிலான உரிமத்தின்படி படங்களை Google வடிகட்டும்.
  • படத்தின் உரிமத் தகவல்களை எப்போதும் உறுதிப்படுத்துதல். உரிம வழங்குநரின் தளம், படத்தை ஹோஸ்ட் செய்யும் தளம் ஆகிய இரண்டிலும் ”உரிம விவரங்கள்” இணைப்பைக் கிளிக் செய்து துல்லியமாக உள்ளதா என்று சரிபார்க்கலாம்.

மீண்டும் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த தகவலுடன் கூடிய படங்களைக் கண்டறிதல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ images.google.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
  2. படத்தைத் தேடவும்.
  3. பயன்படுத்துவதற்கான உரிமத் தகவல் அடங்கிய படங்களை மட்டும் முடிவுகளில் பெற, தேடல் பெட்டிக்குக் கீழ் உள்ள வடிப்பான் Filter என்பதைத் தட்டி அதன் பிறகு பயன்பாட்டிற்கான உரிமை அதன் பிறகு உரிமத்தின் வகை என்பதைத் தட்டவும்.
  4. உங்களுக்கு வேண்டிய படத்தைத் தட்டவும்.
  5. படத்திற்கான உரிமத்தைப் பெற்று அதைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த தகவலை அறிய, படத்திற்குக் கீழே உள்ள உரிம விவரங்கள் என்பதைத் தட்டவும்.

படத்தைப் பகிர்தல்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் images.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஏதேனும் ஒரு படத்தைத் தேடவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள ‘மேலும்’ மேலும் அதன் பிறகு பகிர் Share என்பதைத் தட்டவும்.

பயன்பாட்டிற்கான உரிமை வகைகள்

உரிம விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் மட்டும் முடிவுகளில் காட்டப்படும் வகையில் ஒவ்வொரு “பயன்பாட்டிற்கான உரிமை” வடிப்பானுக்கும் வரம்பை அமைக்க முடியும். நீங்கள் படத்திற்கான உரிமத்தைப் பெற்று அதைப் பயன்படுத்தும் விதமும் இதில் அடங்கும்.

உரிம விவரங்களைக் கண்டறிய: படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு அதற்குக் கீழே உள்ள உரிம விவரங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் படங்களின் உரிமம் சார்ந்த நிபந்தனைகளை எப்போதும் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

  • கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள்: வழக்கமாக இந்தப் படங்களைக் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றாலும் பங்களித்தவர்களின் பெயரைக் குறிப்பிட வேண்டும். எப்படி/எந்தச் சூழலில் பயன்படுத்தலாம் என்பதற்கான வரம்புகளும் அவற்றுக்கு இருக்கக்கூடும். உதாரணமாக, ஒரு படத்தின் உரிமத்தில் உங்களால் மாற்றம் செய்ய முடியாது என்றோ தொழில்ரீதியான காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியாது என்றோ குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
  • தொழில்ரீதியான அல்லது பிற உரிமங்கள்: இந்தப் படங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் அல்லாத உரிமங்களைக் கொண்டிருக்கும். இவற்றைக் கட்டணம் இல்லாத தளங்களிலிருந்தோ கட்டணம் செலுத்த வேண்டிய தொழில்ரீதியான தளங்களிலிருந்தோ பெறலாம்.

பயன்பாட்டிற்கான உரிமை செயல்படும் விதம்

நியாயமான பயன்பாட்டை மீறி நீங்கள் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிய பயன்பாட்டிற்கான உரிமை உதவும். தள உரிமையாளர்கள் அவர்களது தளங்களிலுள்ள உள்ளடக்கத்தை நீங்கள் மீண்டும் பயன்படுத்தலாமா என்பதையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக உரிமங்களைப் பயன்படுத்தலாம்.

பயன்பாட்டிற்கான உரிமை தவறாக உள்ளது எனப் புகாரளித்தல்

உங்கள் பதிப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த புகார்களுக்கு பதிப்புரிமை மீறல் சார்ந்த அறிவிப்புக்கான நிபந்தனைகள் என்பதையோ புகாரைப் பதிவு செய்தல் என்பதையோ பார்க்கவும்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
1712687099810757842
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334