இனிவரும் விமானப் பயணங்கள் அல்லது ஹோட்டல் முன்பதிவுகள் குறித்து Gmailலில் இருந்து பெறக்கூடிய தகவல்களை Googleளில் தேட முடியும்.
- google.com தளத்திற்குச் செல்லவும்.
- "https" என்பதற்குப் பதிலாக "http" என்பதை URL காட்டினால் இந்த முடிவுகள் காண்பிக்கப்படாது.
- மேல் வலதுபுறத்தில், உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Google கணக்கின் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து காட்டப்பட்டால் ஏற்கெனவே உள்நுழைந்துள்ளீர்கள் என அர்த்தம்.
- கீழே உதாரணத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தேடலை முயன்று பார்க்கவும்.
தேடல் உதாரணங்கள்
உதவிக்குறிப்பு: சில உதாரணங்கள் சில பிராந்தியங்களில் மட்டுமே வேலை செய்யும்.
- ஹோட்டல் முன்பதிவுகள்:
எனது முன்பதிவுகள்
எனத் தேடி ஹோட்டல் முன்பதிவுகளைக் கண்டறியலாம். - விமானங்கள்:
எனது விமானப் பயணங்கள்
எனத் தேடி இனிவரும் உங்களது விமானப் பயணங்கள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறலாம். -
போக்குவரத்து:
எனது கார் முன்பதிவு, பேருந்து டிக்கெட்டுகள்
அல்லதுஎனது ரயில் டிக்கெட்டுகள்
எனத் தேடி உங்கள் கார், பேருந்து அல்லது ரயில் முன்பதிவுகளைக் கண்டறியலாம்.
உங்கள் தேடல் முடிவுகளின் தனியுரிமை
Google தயாரிப்புகளில் பெறக்கூடிய முடிவுகள் தனிப்பட்டவையாகும். உங்கள் தகவல்களை நீங்கள் வெளிப்படையாகப் பிறருடன் பகிரும் வரை அல்லது பொதுவில் கிடைக்கும் வரை யாராலும் அவற்றைப் பார்க்க முடியாது.
உங்கள் Gmailலில் பெறக்கூடிய முடிவுகளை நீங்கள் மட்டுமே பார்ப்பீர்கள்.
Gmailலில் இருந்து முடிவுகளைப் பெறுவதை இயக்குதல் அல்லது முடக்குதல்
Gmailலில் இருந்து பெறப்படும் முடிவுகளைப் பார்க்கலாமா வேண்டாமா என்ற முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே இருக்கும்.
உதவிக்குறிப்பு: இந்தப் படிகளைப் பின்பற்ற https://www.google.com தளத்திற்குச் சென்று, Google கணக்கில் உள்நுழைந்து தேட வேண்டும்.
- கம்ப்யூட்டரில் தனிப்பட்ட முடிவுகளுக்கான அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
- உள்நுழையுமாறு கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
- தனிப்பட்ட முடிவுகளைக் காட்டு என்பதை இயக்கவும்/முடக்கவும்.
‘தனிப்பட்ட முடிவுகள்’ அம்சத்தை முடக்கினால் உங்கள் Google கணக்கில் உள்நுழையும் வரை அது முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டின் அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து முடிவுகளைப் பெறக்கூடும். உங்கள் செயல்பாட்டுத் தரவைப் பயன்படுத்தி Search எவ்வாறு செயல்படுகிறது என அறிக.
உங்கள் கணக்கின் செயல்பாடுகள் மற்றும் பிற Google தயாரிப்புகளின் அடிப்படையில் தேடல் முடிவுகள் பெறுவதை நிறுத்த, இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை எப்படி முடக்குவது எனத் தெரிந்துகொள்ளவும்.