Google தேடல்களைத் துல்லியமாக்குதல்

உங்கள் Google முடிவுகளைத் துல்லியமாக வடிகட்ட அல்லது புதிய வழிகளில் விரிவாக்க வெவ்வேறு வழிகள் உள்ளன.

மேம்பட்ட தேடல்

சிறப்பான இணைய மற்றும் படத் தேடல்களைச் செயல்படுத்த வடிவமைக்கப்பட்ட பக்கங்களை Google வழங்குகிறது:

வடிப்பான்களும் தலைப்புகளும்

நீங்கள் தேடலைத் தொடங்கிய பிறகு, வடிப்பான் மற்றும் தலைப்புகளுக்கான பட்டன்கள் தேடல் பட்டிக்கு அருகில் காட்டப்படும். பக்கத்தின் பிற இடங்களிலும் இவை காட்டப்படலாம்.

வடிப்பான்கள்

முடிவுகளை வடிகட்டி பின்வருபவை போன்ற குறிப்பிட்ட வகை முடிவுகளை மட்டும் பார்க்க வடிப்பான்களைப் பயன்படுத்தலாம்:

  • வீடியோ
  • செய்திகள்
  • படங்கள்

வடிப்பான்களும் அவை காட்டப்படும் வரிசையும் மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் கேள்விக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எங்கள் சிஸ்டங்கள் நினைக்கக்கூடியவற்றின் அடிப்படையில் இது மாறும். நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட வடிப்பான் காட்டப்படவில்லை என்றால் கிடைக்கக்கூடிய பிற வடிப்பான்களைப் பார்க்க, "அனைத்து வடிப்பான்கள்" என்ற விருப்பத்தேர்வைப் பயன்படுத்தவும்.

தலைப்புகள்

தலைப்புகள் மூலம் உங்கள் கேள்வியில் வார்த்தைகளைச் சேர்க்கலாம். குறிப்பிட்ட தகவல்களைக் கூடுதலாகப் பெறவோ தொடர்புடைய தகவல்களைக் கண்டறியவோ அவை உங்களுக்கு உதவலாம். கேள்வியுடன் தொடர்புடைய தலைப்புகள் தானாகவே உருவாக்கப்பட்டுக் காட்டப்படும். மக்கள் தேடும் விதம், இணையம் முழுவதும் உள்ளடக்கம் பகுப்பாய்வு செய்யப்படும் விதம் ஆகியவை குறித்து எங்கள் சிஸ்டங்களுக்கு உள்ள புரிதலின் அடிப்படையில் தலைப்புகள் அமையும். பெரும்பாலான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கம்ப்யூட்டர்களில் தலைப்புகள் கிடைக்கின்றன. மேலும் இவை கூடுதல் நாடுகளிலும் பிராந்தியங்களிலும் மொழிகளிலும் மொபைலில் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

ஆப்பரேட்டர்கள்

உங்கள் முடிவுகளைக் குறிப்பிட்ட வழிகளில் துல்லியமாகப் பெற, தேடலில் சிறப்பு ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆப்பரேட்டருக்கும் உங்கள் தேடல் வார்த்தைக்கும் இடையே இடைவெளி விட வேண்டாம். [site:nytimes.com] என்ற தேடலுக்கு முடிவுகள் கிடைக்கும். ஆனால் [site:nytimes.com] என்ற தேடலுக்குக் கிடைக்காது. பிரபலமான சில ஆப்பரேட்டர்கள் இதோ:

துல்லியமான பொருத்தத்திற்கான தேடல்: மேற்கோள் குறிகளுக்குள் வார்த்தையையோ சொற்றொடரையோ டைப் செய்யவும். உதாரணமாக, [உயரமான கட்டடம்].

மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தி எப்படித் தேடுவது? என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு எங்களின் வலைப்பதிவு இடுகையைப் பார்க்கவும்.

குறிப்பிட்ட தளத்திற்கான தேடல்: தளம் அல்லது டொமைனுக்கு முன்பாக site: என்பதை டைப் செய்யவும். உதாரணமாக, [site:youtube.com பூனை வீடியோக்கள்].

உங்கள் தேடலில் இருந்து வார்த்தைகளைத் தவிர்த்தல்: நீங்கள் தவிர்க்க விரும்பும் வார்த்தைக்கு முன் - என்பதைச் சேர்க்கவும். உதாரணமாக, [ஜாகுவாரின் வேகம் -கார்].

தொடர்புடைய முடிவுகள்

ஓர் இணைய முடிவைக் கிளிக் செய்துவிட்டு தேடல் முடிவுகள் பக்கத்திற்கு நீங்கள் திரும்பும்போது, ஏற்கெனவே காட்டப்பட்ட முடிவுகளுடன் சேர்த்து இன்னும் பல தொடர்புடைய முடிவுகள் காட்டப்படலாம். இவை நீங்கள் கிளிக் செய்த இணைய முடிவுடன் தொடர்புடையவை.

தொடர்புடைய தேடல்கள்

தேடலுக்குப் பிறகு, உங்கள் அசல் தேடலுடன் தொடர்புடைய தேடல்கள் காட்டப்படும். மக்கள் தேடும் விதம் குறித்து எங்கள் சிஸ்டங்களுக்கு உள்ள புரிதலின் அடிப்படையில் தொடர்புடைய தேடல்கள் தானாக உருவாக்கப்படுகின்றன.

அமைப்புகள்

குறிப்பிட்ட உள்ளடக்க வகைகளைப் பொருத்தவோ அகற்றவோ அனுமதிக்கும் அமைப்புகளை Google Searchசில் நீங்கள் பயன்படுத்தலாம்:

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
11583222172239609292
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334