ஸ்க்ரீன் ரீடர்கள், கீபோர்டுகள் போன்ற உதவிகரமான தொழில்நுட்பத்தின் மூலம் எளிமையாக அணுகும் வகையில் தேடல் முடிவுகள் ஒழுங்கமைப்பட்டுக் காட்டப்படும்.
தேடல் முடிவுகளின் பக்கங்களில் அணுகலம்ச இணைப்புகளைப் பயன்படுத்துதல்
கம்ப்யூட்டரில் தேடல் முடிவுகளின் பக்கத்தின் மேற்புறத்தில் மூன்று அணுகலம்ச இணைப்புகள் இருக்கும்:
- முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்: பக்கத்தில் முதலில் உள்ள தேடல் முடிவு, விளம்பரம் போன்ற முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லும்.
- அணுகலம்சம் தொடர்பான உதவி: இந்த உதவிக் கட்டுரையைத் திறக்கும்.
- அணுகலம்சம் தொடர்பான கருத்து: Google Searchசில் அணுகலம்சம் குறித்த உங்கள் கருத்தை வழங்குவதற்கான படிவத்தைத் திறக்கும். உங்கள் கருத்தை டைப் செய்து அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அணுகலம்சம் தொடர்பான இணைப்பைத் தேர்ந்தெடுக்க:
- கீபோர்டு மூலம்:
- நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் இணைப்பு ஹைலைட் செய்யப்படும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
- ஹைலைட் செய்யப்பட்டதும் Enter பட்டனை அழுத்தவும்.
- ஸ்க்ரீன் ரீடர் மூலம்: விரைவு வழிகாட்டுதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்.
பிரிவுத் தலைப்புகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்திற்குச் செல்லுதல்
ஸ்க்ரீன் ரீடரைப் பயன்படுத்த உதவும் வகையில் தேடல் முடிவுகளின் பக்கத்தில் பிரிவுத் தலைப்புகள் படிநிலை வாரியாக இருக்கும்.
கம்ப்யூட்டர்களில்
- தலைப்பு நிலை 1 (H1 - Heading level 1): தேடல் முடிவுகள், விளம்பரங்கள், பக்கத்தில் எப்படி உலாவுவது போன்ற பக்கத்தின் முக்கியமான பகுதிகளைக் கொண்டிருக்கும்.
- தலைப்பு நிலை 2 (H2 - Heading level 2): "விளையாட்டு முடிவுகள்", "வீடியோக்கள்" போன்ற குழுவாக்கப்பட்ட முடிவுகளின் பெயர்களைக் கொண்டிருக்கும்.
- தலைப்பு நிலை 3 (H3 - Heading level 3): தனிப்பட்ட தேடல் முடிவுகளின் தலைப்புகள், விளம்பரத் தலைப்புகள், துல்லியமான குழுவாக்கப்பட்ட முடிவுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.
மொபைல்களிலும் டேப்லெட்டுகளிலும்
- தலைப்பு நிலை 1 (H1 - Heading level 1): Google லோகோவையும் Googleளின் முகப்புப்பக்கத்திற்குச் செல்லும் "Google" எனப் பெயரிடப்பட்ட இணைப்பையும் கொண்டிருக்கும்.
- தலைப்பு நிலை 2 (H2 - Heading level 2): முதல் H2 தலைப்பு, தேடல் முடிவுகளைக் கொண்டிருக்கும். இரண்டாவது, விளம்பரங்களைக் கொண்டிருக்கும்.
- தலைப்பு நிலை 3 (H3 - Heading level 3): தனிப்பட்ட தேடல் முடிவின் தலைப்புகளையும் விளம்பரத் தலைப்புகளையும் கொண்டிருக்கும்.
கூடுதல் அணுகலம்ச விருப்பங்களைக் கண்டறிதல்
புதிய தீர்வுகளைக் கண்டறிவதற்கும் Google சேவைகள் குறித்த உதவிக்குறிப்புகளைப் பகிர்வதற்கும் பிற Google பயனர்களுடன் அணுகலம்சச் சிக்கல்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் இவற்றைச் செய்யவும்:
- google.com/accessibility தளத்திற்குச் செல்லவும்
- Google அணுகலம்சங்கள் தொடர்பான பயனர் சமூகத்தில் சேரவும்