Googleளில் படத்தைச் சேர்த்தல்

Google தேடல் முடிவுகளில் ஒரு படத்தைச் சேர்ப்பதற்கு, படத்துடன் அதற்கான விளக்கத்தையும் இணையதளத்தில் சேர்க்கவும். உங்களால் தேடல் முடிவுகளில் நேரடியாகப் படங்களை ஏற்ற முடியாது என்றாலும் ஒரு இணையதளத்தில் இடுகையிடப்பட்ட தேடப்படக்கூடிய படங்கள் எங்கள் தேடல் முடிவுகளில் காட்டப்படலாம்.

இணையத்தில் உங்கள் படத்தைச் சேர்த்தல்

  1. ஒரு இணையதளத்தில் உங்கள் படத்தை இடுகையிடுதல்

    Google தேடல் முடிவுகளில் உங்கள் புகைப்படம் அல்லது படம் காட்டப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்தப் படத்தை ஒரு இணையதளத்தில் இடுகையிடவேண்டும். உங்களிடம் இணையதளம் இல்லை என்றால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில இலவச உள்ளடக்க ஹோஸ்டிங் சேவைகள் இங்கு உள்ளன:

    • Bloggerரைப் பயன்படுத்தி ஒரு வலைப்பதிவில் படங்களைச் சேர்த்தல்
    • Google Sitesஸைப் பயன்படுத்தி சொந்த இணையதளத்தை உருவாக்குதல்
  2. நீங்கள் இடுகையிடும் படம், தேடப்படக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யவும்

    பொதுவான மற்றும் தேடப்படக்கூடிய இணையதளத்தில் படத்தை இடுகையிடுவது, உங்கள் படத்தை Google கண்டறிந்து படங்கள் அட்டவணையில் சேர்ப்பதைச் சாத்தியமாக்கிடும். படத்தைப் பதிவேற்றும்போது உங்கள் படம் இருக்கக்கூடிய பக்கம் பொதுவில் அணுகத்தக்க வகையில் இருப்பதை உறுதி செய்யவும். எடுத்துக்காட்டாக Google+ஸில் படத்தைப் பதிவேற்றியிருந்தால் தனியுரிமை அமைப்பைப் பொதுவில் அமைத்திருப்பதை உறுதிசெய்யவும்.

    Google அட்டவணையிடக்கூடிய தளங்களில் இடுகையிடுவதைப் பற்றிய கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு Googleளில் இணையதளத்தைச் சேர்த்தல் என்பதற்குச் செல்லவும்.

தேடலில் உங்கள் படம் தோன்றுவதற்கான உதவிக்குறிப்புகள்

Google தேடல் முடிவுகளில் உங்கள் படம் தோன்றுவதற்கு இந்தப் படத்தை வெளியிடுவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்:

  • விளக்க உரையை சேர்த்தல். படத்தின் அருகில் எங்கேயாவது "alt'" குறி அல்லது தலைப்பு போன்ற உரையை சேர்க்கவும். படத்தில் உள்ளது என்ன என்பதையும் அதனுடன் தொடர்புடைய தேடல்கள் என்னென்ன என்பதையும் Google புரிந்துகொள்ள இது உதவும்.
  • உயர்தரமான படங்களைப் பதிவேற்றுதல். உங்கள் தளத்திற்கு ட்ராஃபிக்கைக் கட்டமைப்பதற்கான சிறந்ததோர் வழி சிறந்த பட உள்ளடக்கத்தை அதில் தருவதாகும்.

பொறுமையாகக் காத்திருக்கவும். இணையத்தில் நீங்கள் பதிவேற்றுகிற படங்கள் உடனடியாகத் தேடல் முடிவுகளில் தோன்றாது. உங்கள் தளத்தை Google அட்டவணையிட்டு தேடல் முடிவுகளில் காட்டும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12124141944066257073
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false
false