Googleளில் தகவல்களை எளிதாகத் தேடுவதற்கான சில உதவிக்குறிப்புகளும் நுட்பங்களும்.
உதவிக்குறிப்பு 1: அடிப்படையில் இருந்து தொடங்கவும்
நீங்கள் எதைத் தேடினாலும், அருகிலுள்ள விமான நிலையம் எது?
போன்ற எளிய தேடலுடன் தொடங்கவும். தேவைப்பட்டால் கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம்.
குறிப்பிட்ட பகுதியில் உள்ள இடத்தையோ தயாரிப்பையோ தேடுகிறீர்கள் என்றால், தேடலில் அந்தப் பகுதியின் பெயரைச் சேர்க்கவும். உதாரணம்: சரவண பவன் வடபழனி
.
உதவிக்குறிப்பு 2: உங்கள் குரல் மூலம் தேடவும்
குரல் மூலம் தேட மைக்ரோஃபோன் ஐகானை தட்டவும். குரல் மூலம் தேடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உதவிக்குறிப்பு 3: வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் தேடும் தளத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தவும். உதாரணமாக, என் தலை வலிக்கிறது
என்பதற்குப் பதிலாக, தலைவலி
என்று டைப் செய்யவும். ஏனென்றால் மருத்துவத் தளத்தில் அந்த வார்த்தைதான் பயன்படுத்தப்படுகிறது.
உதவிக்குறிப்பு 4: சிறு விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்
- எழுத்துவரிசை: டைப் செய்யும் வார்த்தையின் எழுத்துவரிசை எப்படி இருந்தாலும் அந்த வார்த்தையின் மிகப் பொதுவான எழுத்துவரிசையை ‘Googleளின் பிழைதிருத்தி’ பயன்படுத்தும்.
- பேரெழுத்தாக்கம்:
New York Times
என்று தேடுவதும்new york times
என்று தேடுவதும் ஒன்று தான்.
உதவிக்குறிப்பு 5: விரைவான பதில்களைக் கண்டறியவும்
பெரும்பாலான தேடல்களுக்கு, Google தேடல் முடிவுகளில் பதில்களை நேரடியாக வழங்குகிறது. விளையாட்டுக் குழுக்கள் குறித்த விவரங்கள் போன்ற சில அம்சங்கள் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்காது.
- வானிலை: உங்கள் இருப்பிடத்தின் வானிலையைப் பார்க்க
வானிலை
என்று தேடவும் அல்லது குறிப்பிட்ட இடத்தின் வானிலையைப் பார்க்கவானிலை
சென்னை
என்பது போன்று ஒரு நகரத்தின் பெயரைச் சேர்க்கவும். - அகராதி: ஒரு வார்த்தையின் வரையறையைப் பார்க்க அந்த வார்த்தைக்கு முன்
வரையறு
என்று டைப் செய்யவும். - கணக்கீடுகள்:
3*9123
போன்ற கணிதச் சமன்பாட்டை டைப் செய்யலாம் அல்லது சிக்கலான வரைபடச் சமன்பாடுகளைத் தீர்க்கலாம். - அலகு மாற்றங்கள்:
3 டாலர்களின் ரூபாய் மதிப்பு
போன்ற எந்த மாற்றத்தையும் உள்ளிடலாம். - விளையாட்டு: திட்ட அட்டவணை, கேம் ஸ்கோர்கள் மற்றும் பலவற்றைத் தேட, உங்கள் அணியின் பெயரை டைப் செய்து தேடவும்.
- விரைவான உண்மைகள்: பிரபலமான ஒருவர், இடம், திரைப்படம், பாடல் போன்றவை தொடர்பான தகவல்களைப் பெற, பெயரை டைப் செய்து தேடவும்.
நுணுக்கமான Search உதவிக்குறிப்புகள்
மேம்பட்ட தேடலுக்கான கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, இந்த இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.