உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டைச் சரிபார்ப்பது எப்படி?

டெபிட் அல்லது ரிவர்ஸல் சரிபார்ப்பு

நீங்கள் பணம் அனுப்பியவராக இருந்தால், பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடியுடன் Google Pay ஆப்ஸில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடி பொருந்துகிறதா எனப் பார்க்கவும்.

கவனத்திற்கு: சமீபத்திய விரிவான பேங்க் ஸ்டேட்மெண்ட் அல்லது சமீபத்திய பாஸ்புக்கைக் கொண்டு மட்டுமே எப்போதும் சரிபார்க்கவும்.

UPI பணப் பரிமாற்ற ஐடியைக் கண்டறியும் வழிமுறை

  1. Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழே நகர்த்தி "பணத்தை நிர்வகித்தல்" என்ற பிரிவைக் கண்டறியவும்.
  3. இதுவரையிலான பணப் பரிமாற்றங்களைப் பாருங்கள் என்பதைத் தட்டவும்.
  4. UPI பணப் பரிமாற்ற ஐடியைக் கண்டறிய, பணப் பரிமாற்றத்தின் மீது தட்டவும்.
உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் பணப் பரிமாற்றத்தைச் சரிபார்க்கும் வழிமுறை

உங்கள் Google Pay கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள பேங்க்கின் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டில்:

  1. கேள்விக்குரிய பணப் பரிமாற்றத்தின் தேதியைக் கண்டறியவும்.
  2. பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடியுடன் Google Pay ஆப்ஸில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடி பொருந்துகிறதா எனப் பார்க்கவும். சாய்வுக்கோட்டிற்கு (/) அடுத்துள்ள முதல் 9 இலக்க எண்ணே UPI பணப் பரிமாற்ற ஐடி ஆகும்.
  3. உங்கள் ஸ்டேட்மெண்ட்டின் டெபிட் பிரிவில் உள்ள தொகையும் Google Payயில் உள்ள பணப் பரிமாற்றத் தொகையும் பொருந்துகிறதா எனப் பார்க்கவும்.
  4. டெபிட் செய்யப்பட்ட தொகை உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டின் குளோசிங் பேலன்ஸில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  5. உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டின் கிரெடிட் பிரிவில் அதே UPI பணப் பரிமாற்ற ஐடியையும் தொகையையும் கொண்டு ரிவர்ஸல் இருக்கிறதா எனப் பார்க்கவும்.

கிரெடிட் சரிபார்ப்பு

நீங்கள் பணம் பெற்றவராக இருந்தால், பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடியுடன் Google Pay ஆப்ஸில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடி பொருந்துகிறதா எனப் பார்க்கவும்.

கவனத்திற்கு: சமீபத்திய விரிவான பேங்க் ஸ்டேட்மெண்ட் அல்லது சமீபத்திய பாஸ்புக்கைக் கொண்டு மட்டுமே எப்போதும் சரிபார்க்கவும்.

UPI பணப் பரிமாற்ற ஐடியைக் கண்டறியும் வழிமுறை

  1. Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழே நகர்த்தி "பணத்தை நிர்வகித்தல்" என்ற பிரிவைக் கண்டறியவும்.
  3. இதுவரையிலான பணப் பரிமாற்றங்களைப் பாருங்கள் என்பதைத் தட்டவும்.
  4. UPI பணப் பரிமாற்ற ஐடியைக் கண்டறிய, பணப் பரிமாற்றத்தின் மீது தட்டவும்.
உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் பணப் பரிமாற்றத்தைச் சரிபார்க்கும் வழிமுறை

உங்கள் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டில்:

  1. கேள்விக்குரிய பணப் பரிமாற்றத்தின் தேதியைக் கண்டறியவும்.
  2. பேங்க் ஸ்டேட்மெண்ட்டில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடியுடன் Google Pay ஆப்ஸில் உள்ள UPI பணப் பரிமாற்ற ஐடி பொருந்துகிறதா எனப் பார்க்கவும். சாய்வுக்கோட்டிற்கு (/) அடுத்துள்ள முதல் 9 இலக்க எண்ணே UPI பணப் பரிமாற்ற ஐடி ஆகும்.
  3. உங்கள் ஸ்டேட்மெண்ட்டின் கிரெடிட் பிரிவில் உள்ள தொகையும் Google Payயில் உள்ள பணப் பரிமாற்றத் தொகையும் பொருந்துகிறதா எனப் பார்க்கவும்.
  4. கிரெடிட் செய்யப்பட்ட தொகை உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டின் குளோசிங் பேலன்ஸில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
எனது ஸ்டேட்மெண்ட்டில் வழங்கப்பட்டுள்ள சுருக்கங்களின் அர்த்தம் என்ன?
APR கிரெடிட் வட்டி தொடர்பான ஆண்டுச் சதவீத விகிதம் (APR - Annual Percentage Rate)
BBP பில் பேமெண்ட் (BBP - Bill payment)
BGC பேங்க் கிரோ கிரெடிட் (BGC - Bank giro credit)
CAT இது ISAக்களில் (International society of Automation - சர்வதேச தன்னியக்கச் சமூகம் ) பயன்படுத்தப்படும் ஒரு தரநிலை ஆகும். இதன் விரிவாக்கம் நியாயமான 'கட்டணங்கள்', எளிதான 'அணுகல்' மற்றும் நியாயமான 'விதிமுறைகள்' (CAT - reasonable Charges, easy Access, and fair Terms) என்பதாகும்
CDL கேரியர் டெவலப்மெண்ட் லோன் (CDL -Career Development Loan)
CHAPS கிளியரிங் ஹவுஸ் ஆட்டோமேட்டட் பேமெண்ட் சிஸ்டம் (CHAPS - Clearing House Automated Payment System) - இது பணம் அனுப்புவதற்கான ஒரு வழி
CRE கிரெடிட் பேமெண்ட் (CRE - Credit payment)
DDR நேரடி டெபிட் (DDR - Direct Debit)
DR டெபிட் பேலன்ஸ் (DR - Debit balance) - அக்கவுண்ட்டில் இருக்கும் தொகையைவிட அதிகமாக டெபிட் ஆனது
REV ரிவர்ஸல் (REV - Reversal) - நிலுவையில் உள்ள ஆர்டர் அல்லது நேரடி டெபிட் நிறுத்தப்பட்டது
STO நிலுவையில் உள்ள ஆர்டர் (STO - Standing order)
UNP செலுத்தாத தொகை

பொதுவான சிக்கல்களைச் சரிசெய்தல்

  • 3 நாட்களில் பணம் கிரெடிட் செய்யப்படவில்லை எனில்:
    1. சில சமயங்களில் பேங்குகள் மெசேஜ் அனுப்புவதில்லை, எனவே உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை மீண்டும் பார்க்கவும்.
    2. Google Payயில் உள்ள இதுவரை செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்கள் போன்ற பிற தகவல் மூலங்களை நம்பியிருக்க வேண்டாம்.
  • பணம் டெபிட் செய்யப்பட்டு, 3 நாட்கள் கழித்து பணப் பரிமாற்றம் தோல்வியடைந்தால்:
    1. அந்தப் பணம் அக்கவுண்ட்டில் திரும்பிச் செலுத்தப்படும், உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை மீண்டும் பார்க்கவும்.
  • பணப் பரிமாற்றம் நிறைவடைந்து, ஆனால் அது உங்கள் கணக்கில் காட்டப்படவில்லை எனில்:
    1. சில சமயங்களில் பேங்குகள் மெசேஜ் அனுப்புவதில்லை, எனவே உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை மீண்டும் பார்க்கவும்.
    2. Google Payயில் உள்ள இதுவரை செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்கள் போன்ற பிற தகவல் மூலங்களை நம்பியிருக்க வேண்டாம்.

பிற பயனுள்ள இணைப்புகள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11365184952929369472
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false