UPI பின்னை மீட்டமைத்தல்

UPI பின் என்பது நீங்கள் ஒவ்வொரு முறையும் புதிய பேமெண்ட் அக்கவுண்ட்டைச் சேர்க்கும்போதோ பணப் பரிமாற்றம் செய்யும்போதோ உள்ளிடும் எண்ணாகும்.

நீங்கள் முதன்முறையாக பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்கும்போது UPI பின்னை அமைக்கும்படி உங்களிடம் கேட்கப்படும். உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிற்கு ஏற்கனவே UPI பின் இருந்தால் அதே UPI பின்னை Google Payயில் பயன்படுத்தலாம். Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தியும் உங்கள் UPI பின்னை மாற்றலாம்.

UPI பின்னை மாற்றுதல்

Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தியும் உங்கள் UPI பின்னை மாற்றலாம்:
  1. Google Pay ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் படத்தைத் தட்டவும்.
  3. பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  4. UPI பின்னை மாற்ற விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டைத் தட்டவும்.
  5. 'மேலும் More அதன் பிறகு UPI பின்னை மாற்று' என்பதைத் தட்டவும்.
  6. புதிய UPI பின்னை உருவாக்கவும்.
  7. அதே UPI பின்னை மீண்டும் உள்ளிடவும்.

உதவிக்குறிப்பு: UPI பின்னை 3 முறைக்கு மேல் தவறாக உள்ளிட்டால் அடுத்த பணப் பரிமாற்றம் செய்ய, பின்னை மீட்டமைக்க வேண்டும் அல்லது 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் பணம் அனுப்பவோ பெறவோ முடியாது.

UPI பின்னை மீட்டமைத்தல்

UPI பின்னை மறந்துவிட்டீர்கள் எனில் புதிதாக ஒன்றை உருவாக்கலாம்.
முக்கியம்: உங்கள் UPI பின்னை மீட்டமைக்க, டெபிட் கார்டு அல்லது ஆதார் கார்டின் விவரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.
  1. Google Pay ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் படத்தைத் தட்டி அதன் பிறகு பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  3. UPI பின்னை மாற்ற விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டைத் தட்டவும்.
  4. UPI பின் மறந்துவிட்டது என்பதைத் தட்டவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: UPI பின்னை 3 முறைக்கு மேல் தவறாக உள்ளிட்டால் அடுத்த பணப் பரிமாற்றம் செய்ய, பின்னை மீட்டமைக்க வேண்டும் அல்லது 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் பணம் அனுப்பவோ பெறவோ முடியாது.

பொதுவான கேள்விகள்

ஆதார் கார்டுடன் எனது UPI பின்னை மீட்டமைக்க முடியவில்லை

நீங்கள் Google Pay ஆப்ஸில் சேர்க்க விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டுடன் பதிவுசெய்துள்ள அதே மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணைக் கண்டறிய:

  1. உங்கள் மொபைலில் https://uidai.gov.in தளத்திற்குச் செல்லவும்.
  2. விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்தல் என்பதைத் தட்டவும்.
  3. எனது ஆதார் அதன் பிறகு ஆதார் சேவைகள் அதன் பிறகு மின்னஞ்சல் முகவரி/மொபைல் எண்ணைச் சரிபார்த்தல் என்பதைத் தட்டவும்.
    • Google Pay ஆப்ஸுடன் உங்கள் UPI பின்னை மீட்டமைப்பதற்கான விருப்பத்தை உங்களால் கண்டறிய முடியவில்லை எனில் உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளவும். 
      • உங்கள் ஆதார் கார்டுடன் பேங்க் அக்கவுண்ட்டை இணைக்க பேங்க் உங்களுக்கு உதவும். 
    • உங்கள் பேங்க்கின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய www.digisaathi.info தளத்திற்குச் செல்லவும்.

எனது ஆதார் கார்டுடன் UPI பின்னை மீட்டமைக்க முடியவில்லை

Google Pay ஆப்ஸுடன் உங்கள் UPI பின்னை மீட்டமைப்பதற்கான விருப்பத்தைக் கண்டறிய உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளவும்.

  • உங்கள் ஆதார் கார்டுடன் பேங்க் அக்கவுண்ட்டை இணைக்க பேங்க் உங்களுக்கு உதவும்.
  • உங்கள் பேங்க்கின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய www.digisaathi.info தளத்திற்குச் செல்லவும்.

உங்கள் டெபிட் கார்டு விவரங்களின் மூலமாகவும் உங்கள் UPI பின்னை நீங்கள் மீட்டமைக்கலாம்.

எனது ஆதார் எண் தவறானது எனும் பிழைச் செய்தி காட்டப்படுகிறது

நீங்கள் Google Pay ஆப்ஸில் சேர்க்க விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டுடன் பதிவுசெய்துள்ள அதே மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • சரியான ஆதார் எண்ணை உள்ளிட்டு மீண்டும் முயலவும்.
    • பிழைச் செய்தி இப்போதும் காட்டப்பட்டால் உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளவும்.
      • உங்கள் ஆதார் கார்டின் விவரங்களைச் சரிபார்க்கவும்.
      • உங்கள் பேங்க்கின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய www.digisaathi.info தளத்திற்குச் செல்லவும்.

கவனத்திற்கு: 3 முறைக்கு மேல் UPI பின்னைத் தவறாக உள்ளிட்டால் அடுத்த பணப் பரிமாற்றம் செய்ய, பின்னை மீட்டமைக்க வேண்டும் அல்லது 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் உங்களால் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியாது.

Android iPhone & iPad
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12868898838959513777
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false