உங்கள் UPI ஐடியை உருவாக்குதல் அல்லது கண்டறிதல்

UPI என்பது பேமெண்ட் ஆப்ஸில் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கான பேங்க் அமைப்பாகும். Google Payயில் பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்க, UPI உடன் உங்கள் பேங்க் செயல்பட வேண்டும்.

UPI ஐடி என்பது UPIயில் உங்களை அடையாளப்படுத்தும் முகவரியாகும் (பொதுவாக yourname@bankname என்ற வடிவில் இருக்கும்).

Google Payயில் புதிய UPI ஐடியை உருவாக்குதல்

  1. Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்திலுள்ள உங்கள் படத்தின் மீது தட்டவும்.
  3. பேமெண்ட் முறைகள் என்பதைத் தட்டவும்.
  4. எந்த பேங்க் அக்கவுண்ட்டுக்குப் புதிய UPI ஐடியை உருவாக்க விரும்புகிறீர்களோ அதன் மீது தட்டவும்
  5. UPI ஐடிகளை நிர்வகித்தல் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  6. நீங்கள் உருவாக்க விரும்பும் UPI ஐடிக்கு அடுத்துள்ள 'சேர் Add' என்பதைத் தட்டவும்.
  7. பேமெண்ட் செய்யும்போது, “பணம் அனுப்பும் அக்கவுண்ட்டைத் தேர்வுசெய்க” என்பதில் நீங்கள் விரும்பும் UPI ஐடியைத் தேர்வுசெய்யலாம்.

உதவிக்குறிப்பு: சீரான அனுபவத்தைப் பெற, உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு 4 UPI ஐடிகள் வரை சேர்க்கலாம். அத்துடன் எப்போது வேண்டுமானாலும் அவற்றை அகற்றலாம். ஒரே பேங்க் அக்கவுண்ட்டுக்கு நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட UPI ஐடிகளை வைத்துக்கொள்ளலாம்.

Google Payயில் உங்கள் UPI ஐடியைக் கண்டறிதல்

உங்கள் UPI ஐடியைக் கண்டறிய:
  1. Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்கள் படத்தைத் தட்டவும்.
  3. பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் பார்க்க விரும்பும் UPI ஐடிக்குரிய பேங்க் அக்கவுண்ட்டைத் தட்டவும்.
  5. "UPI ஐடிகள்" என்பதன் கீழ், தொடர்புடைய UPI ஐடியை நீங்கள் பார்க்கலாம்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13272625603894669289
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false