UPI பணப் பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் அனுப்பலாம்/பெறலாம் என்பதற்குத் தினசரி வரம்புகள் உள்ளன.
உதவிக்குறிப்பு: பேங்க் அக்கவுண்ட், கிரெடிட் கார்டு மற்றும் பிற பேமெண்ட் முறைகளுக்கு ஏற்ப Google Payயில் பணப் பரிவர்த்தனை வரம்புகள் மாறுபடும். UPI வசதியை வழங்கும் பேங்க்குகளின் பணப் பரிவர்த்தனை வரம்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
பியர்-டு-பியர் (P2P) பேமெண்ட் வரம்புகள்
இந்த வரம்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அடைந்தால், ஒருவருக்குப் பேமெண்ட் செய்ய முடியாமல் போகலாம்:
- கடந்த 24 மணிநேரத்தில் ஒரே பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ₹1 லட்சம் வரை பேமெண்ட் செய்திருத்தல். இந்த வரம்பு அனைத்து UPI ஆப்ஸிலும் பேங்க்குகளால் அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 24 மணிநேரத்தில் 20 பேமெண்ட்டுகள் செய்திருத்தல்.
- கடந்த 30 நாட்களில் 150 பேமெண்ட்டுகள் செய்திருத்தல்.
இந்தச் சிக்கல்களைச் சரிசெய்ய:
- கூடுதலாகப் பணம் அனுப்ப அடுத்த நாள் வரை காத்திருங்கள்.
- குறைவான தொகையைச் செலுத்துங்கள்.
- வேறொரு பேங்க் அக்கவுண்ட் மூலம் முயன்று பாருங்கள்.
புதிய Google Pay அல்லது UPI பயனராக உங்கள் பரிவர்த்தனை வரம்புகளைத் தெரிந்துகொள்ளுதல்
ஆப்ஸை மீண்டும் நிறுவி, சமீபத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை Google ஆப்ஸில் சேர்த்திருந்தால், UPI வழிகாட்டுதல்கள் இதோ:
-
Android சாதனங்களுக்கு: பாதுகாப்புக் காரணங்களுக்காக முதல் 24 மணிநேரத்தில் ₹5,000 வரை மட்டுமே நீங்கள் பணம் அனுப்ப முடியும்.
- iOS சாதனங்களுக்கு: பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்த்த முதல் 3 நாட்களுக்கு, 24 மணிநேரத்திற்கு ஒருமுறை ₹5,000 வரை அனுப்பலாம். இந்தக் காலக்கட்டத்திற்கான மொத்த அதிகபட்ச வரம்பு ₹15,000 ஆகும்.
வணிகர்களுக்குப் பேமெண்ட் செய்வதற்கான வரம்புகள்
வணிகர்களுக்கு அதிக மதிப்புள்ள பேமெண்ட்டுகளைச் செய்வதை எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற, குறிப்பிட்ட வணிகர் வகைகளுக்குச் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வகை வாரியாகப் புதிய வணிகர் பரிவர்த்தனை வரம்புகள்|
வணிகர் வகை |
புதிய பரிவர்த்தனை வரம்பு |
மொத்தத் தினசரி வரம்பு |
|
மூலதனச் சந்தைகள் (மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குத் தரகு) |
₹5 லட்சம் |
₹10 லட்சம் |
|
காப்பீடு (பிரீமியங்கள்) |
₹5 லட்சம் |
₹10 லட்சம் |
|
கல்வி மற்றும் மருத்துவமனைகள் |
₹5 லட்சம் |
₹10 லட்சம் |
|
வரிகள் மற்றும் அரசாங்கப் பேமெண்ட்டுகள் |
₹5 லட்சம் | ₹10 லட்சம் |
|
பயணம் (விமான நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகள்) |
₹5 லட்சம் | ₹10 லட்சம் |
|
கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்டுகள் |
₹5 லட்சம் | ₹6 லட்சம் |
| நகைகள் | ₹2 லட்சம் | ₹6 லட்சம் |
|
டிஜிட்டல் முறையில் கணக்கைத் திறத்தல் |
₹2 லட்சம் | ₹2 லட்சம் |
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (NPCI) சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு மட்டுமே அதிக வரம்புகள் பொருந்தும். சரிபார்க்கப்பட்ட வணிகருக்கான அடையாளங்கள்:
- பச்சை நிற டிக்: பேமெண்ட் திரையில் வணிகரின் பெயருக்கு அடுத்து பச்சை நிறத் தேர்வுக்குறி காட்டப்படும்.
- மெசேஜ்: உங்கள் UPI பின்னை டைப் செய்வதற்கு முன்பு, "சரிபார்க்கப்பட்ட வணிகர்: ₹5 லட்சம் வரை செலுத்தலாம்." என்பது போன்ற மெசேஜை Google Pay காட்டும்.
உதவிக்குறிப்பு: சரிபார்க்கப்பட்ட வணிகருக்கான அதிக மதிப்புள்ள பரிவர்த்தனை தோல்வியடைந்தால், உங்கள் பேங்க்கின் தினசரி வரம்பு NPCI அதிகபட்ச வரம்பைவிடக் குறைவாக இருக்கக்கூடும்.
பேங்க் வரம்புகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்படும் UPI வரம்பைவிட உங்கள் தினசரிப் பரிவர்த்தனைகள் குறைவாக இருந்தும் உங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டால், வேறு பேங்க் அக்கவுண்ட்டைப் பயன்படுத்திப் பாருங்கள்.
எவ்வளவு பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம் என்பதற்கு உங்கள் வங்கி தனியே வரம்புகளை வைத்திருக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
UPI வசதியை வழங்கும் பேங்க்குகளின் பணப் பரிவர்த்தனை வரம்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
பிற வரம்புகள்
மோசடியிலிருந்து பாதுகாக்க, சில பரிவர்த்தனைகள் கூடுதல் மதிப்பாய்விற்குக் கொடியிடப்படலாம். வரம்பை அடையாமல் இருந்தும் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருந்தால், Google Pay உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
உதவிக்குறிப்பு: நீங்கள் ₹1க்கும் குறைவாக அனுப்ப/பெற முயன்றால், அந்தப் பரிவர்த்தனை நிறைவடையாது, உங்களுக்குப் பிழைச் செய்தி காட்டப்படும்.