பேங்க் அக்கவுண்ட்டை மாற்றுதல் அல்லது அகற்றுதல்

Tezஐ முதன்முறையாக அமைக்கும் போது, பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்காக இந்திய பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்கும்படி கேட்கப்படும்.

பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்த்தல்

  1. உங்கள் வங்கியானது இந்த UPI பட்டியலில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இல்லை எனில், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை Tez இல் பயன்படுத்த முடியாது.
  2. Tez Tez பயன்பாட்டைத் திறக்கவும்.
  3. மேலே இடப்புறத்தில், உங்கள் படம் > பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  4. பேங்க் அக்கவுண்ட்டைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. பட்டியலில் இருந்து வங்கியைத் தேர்வு செய்யவும். பட்டியலில் உங்கள் வங்கி இல்லை எனில், அது இன்னும் Tez உடன் செயல்படவில்லை என அர்த்தமாகும்.
    • குறிப்பு: உங்கள் வங்கிக்கு, சரிபார்ப்பு SMS ஒன்றை அனுப்புவதற்கு Tezஐ நீங்கள் அனுமதிக்க வேண்டியிருக்கலாம்.
  6. உங்களிடம் ஏற்கனவே UPI பின் இருந்தால், அதை உள்ளிடவும். பின் நினைவில்லை எனில், பின் நினைவில்லை என்பதைத் தட்டி, வழிமுறைகளைப் பின்பற்றவும். UPI பின் இல்லை எனில், உங்கள் டெபிட் கார்டு தகவலை உள்ளிட வேண்டும்.
    • Maestro டெபிட் கார்டுகளுக்குக் காலாவதித் தேதிகள் இல்லை என்பதால், காலாவதித் தேதியாக 01/49 என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

பேங்க் அக்கவுண்ட்டைப் புதுப்பித்தல் அல்லது நீக்குதல்

குறிப்பு: பேங்க் அக்கவுண்ட்டைப் புதுப்பிக்க, அதை அகற்றி, மீண்டும் சேர்க்கவும்.

  1. Tez Tez பயன்பாட்டைத் திறக்கவும்.
  2. மேலே இடப்புறத்தில், உங்கள் படம் > பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  3. நீக்க விரும்பும் அக்கவுண்ட்டைத் தட்டவும்.
  4. மேலும் மேலும் அதன் பிறகுஅக்கவுண்ட்டை அகற்று என்பதைத் தட்டவும்.

எந்த அக்கவுண்ட்டில் பணம் பெற வேண்டும் என்பதைத் தேர்வு செய்தல்

பிறர் உங்களுக்குப் பணம் அனுப்பும் போது, அது முதன்மை அக்கவுண்ட்டிற்குச் செல்லும்.

  1. Tez Tez பயன்பாட்டைத் திறக்கவும்.
  2. மேலே இடப்புறத்தில், உங்கள் படம் > பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  3. புதுப்பிக்க விரும்பும் அக்கவுண்ட்டைத் தட்டவும்.
  4. பக்கத்தின் கீழே, முதன்மை அக்கவுண்ட்டாக அமை என்பதைத் தட்டவும்.

பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்கும் போது ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்தல்

Tez இல் பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்ப்பதில் சிக்கல் இருந்தால், பின்வரும் பிழைகளில் ஏதேனும் ஒன்று தோன்றும்.

பேங்க் அக்கவுண்ட் இல்லை
  1. பட்டியலில் உங்கள் வங்கி இல்லை எனில், அது UPI இல் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
  2. Tez இல் பயன்படுத்தும் அதே மொபைல் எண்ணைத் தான் உங்கள் வங்கியில் பட்டியலிட்டுள்ளீர்களா எனச் சரிபார்க்கவும். இல்லை எனில், நீங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும்.
  3. உங்கள் அக்கவுண்ட் (அ) கார்டு எண், பின் அல்லது OTP இல் எழுத்துப்பிழைகள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  4. அக்கவுண்ட்டை மீண்டும் சேர்க்க முயலவும்.
  5. இவற்றைச் செய்தும் பலனில்லை எனில், Tez ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
UPI கணக்கைச் சரிபார்க்க முடியவில்லை
  1. சரியான UPI பின்னை உள்ளிட்டுள்ளீர்கள் என்பதை நன்றாகச் சரிபார்க்கவும். UPI பின்னை மறந்துவிட்டீர்கள் எனில், அதை மாற்றிக்கொள்ளலாம்.
  2. மாற்றிவிட்டால், பிறகு முயலவும். இந்தச் சமயத்தில் UPI செயல்படாமலிருப்பதற்குச் சாத்தியமுள்ளது.
Android iPhone & iPad
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17965357392214090403
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false