ஒரே மொபைல் எண்ணுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட்டுகள் இணைக்கப்பட்டிருப்பது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

Google Pay ஆப்ஸில் ஒரு பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்கும்போதோ மீட்டெடுக்கும்போதோ ஏற்படுகின்ற பிழை

  • யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸில் (UPI) ஜாயின்ட் பேங்க் அக்கவுண்ட்டுகள் ஆதரிக்கப்படுவதில்லை.
    • Google Pay ஆப்ஸில் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள ஜாயின்ட் பேங்க் அக்கவுண்ட்டை உங்களால் சேர்க்க முடியாது.
    • தனிப்பட்ட சேவிங்ஸ்/கரண்ட் பேங்க் அக்கவுண்ட்டைச் சேருங்கள்.
  • Google Pay ஆப்ஸில் பதிவுசெய்துள்ள மொபைல் எண் அதே பேங்க்கில் உள்ள வேறு ஏதேனும் ஜாயின்ட் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பாருங்கள்.
    • அப்படி இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் சேர்க்க முயலும் பேங்க் அக்கவுண்ட்டின் மொபைல் எண்ணை மாற்றுங்கள்.
  • ஒரே பேங்க்கில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட அக்கவுண்ட்டுகளை வைத்திருந்தால், அந்த அக்கவுண்ட்டுகளுக்கான வாடிக்கையாளர் ஐடிகள் ஒன்றாக உள்ளனவா எனப் பாருங்கள்.
    • பேங்க்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் ஐடிகளுடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை Google Pay ஆப்ஸில் சேர்க்க முடியாது. இதற்குத் தீர்வுகாண உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளுங்கள்.

வாடிக்கையாளர் ஐடி என்றால் என்ன?

வாடிக்கையாளர் ஐடி என்பது சேவிங்க்ஸ், கரண்ட், லோன் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பேங்க் வழங்கும் தனிப்பட்ட அடையாள எண்ணாகும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் ஐடிகளைக் கண்டறிதல்

  • வாடிக்கையாளர் ஐடி விவரங்களை பேங்க் வழங்கிய இந்த ஆவணங்களில் ஏதேனுமொன்றைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்:
    • பாஸ்புக்
    • அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்
    • வரவேற்புக் கடிதம்
    • செக்புக்குகள்
  • உங்கள் பாஸ்புக் மற்றும் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டின் முதல் பக்கத்திலும் 11 இலக்க CIF (Customer Identification File) ஐடி அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் ஐடிகளை நிர்வகித்தல்

உங்கள் அக்கவுண்ட்டுகள் அனைத்தையும் ஒரே வாடிக்கையாளர் ஐடியில் ஒருங்கிணைக்கவும் வேறு ஏதேனும் வினவல்களுக்கும் உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் பேங்க்கின் தொடர்பு விவரங்களைப் பெற Digisaathi இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4872516148608526530
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false