பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்க்கும்போது ஏற்படும் பொதுவான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

Google Pay ஆப்ஸில் பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்ப்பதற்காக நீங்கள் மெசேஜ் அனுப்பும்போது சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் மொபைல் மற்றும் மெசேஜ் அமைப்புகளைச் சரிபாருங்கள்.

மெசேஜை இயக்குதல்

பரிசோதனை மெசேஜை அனுப்புங்கள். அதை அனுப்ப முடியவில்லை எனில், உங்கள் ஆப்பரேட்டரைத் தொடர்புகொண்டு மெசேஜ் அனுப்புவதற்கான பேக் செயலில் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு: சில மெசேஜ் ரீசார்ஜ் பேக்குகள் மூலம் மெசேஜ் அனுப்ப முடியாது. நீங்கள் பிரீபெய்டு மொபைல் சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், திட்ட விவரங்களைப் பாருங்கள்.

போதுமான பேலன்ஸ் இல்லை

நீங்கள் பிரீபெய்டு மொபைல் சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்:

  • மெசேஜ் அனுப்ப: உங்களிடம் தேவையான மெசேஜ் பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • உங்கள் பேலன்ஸைச் சரிபார்க்க: உங்கள் ஆப்பரேட்டர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • வெவ்வேறு ஆப்பரேட்டர்களில் உங்கள் பேலன்ஸைச் சரிபார்ப்பதற்கு, பின்வரும் எண்களை டயல் செய்யவும்:
    • Jio: 333#
    • BSNL: *123*1#
    • Airtel: *121*7#
    • MTNL: *123#
    • Tata: *111#
    • VI: *199*1*8#
நெட்வொர்க்கைச் சரிபார்த்தல்

மெசேஜ்களை அனுப்புவதற்கு/பெறுவதற்கு:

  • உங்கள் மொபைலில் நல்ல நெட்வொர்க் கவரேஜ் இருக்க வேண்டும்.
  • உங்களிடம் நெட்வொர்க் இணைப்பு இருக்கிறதா என்று பார்க்கவும்.
இரட்டை சிம் கார்டுகள்

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணைப் பயன்படுத்திதான் நீங்கள் மெசேஜ் அனுப்புகிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்களிடம் இரட்டை சிம் மொபைல் இருந்தால்:

  • உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து SMS அனுப்புவதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • உங்கள் மெசேஜ் அமைப்புகள் “ஒவ்வொரு முறையும் கேள்” என அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சிம்மை முதன்மை சிம்மாக அமைக்கவும்.
    1. “நெட்வொர்க் மற்றும் அமைப்புகள்” என்பதற்குச் செல்லவும்.
    2. சிம்கள் அதன் பிறகு மெசேஜ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. உங்கள் மெசேஜ் அமைப்புகளை மாற்றவும்.
உங்கள் மெசேஜ் சேவை மையத்தை (SMSC - SMS Service Center) ரெஃப்ரெஷ் செய்தல்

SMSC எண் சரியானதுதான் என்பதை உறுதிசெய்ய அதை ரெஃப்ரெஷ் செய்யவும்.

  1. மொபைலில், *#*#4636#*#* என்பதை டயல் செய்யவும்.
  2. மொபைல் தகவல்கள் என்பதைத் தட்டவும்.
  3. “SMSC” என்பதன் கீழ், புதுப்பி என்பதைத் தட்டவும்.
மெசேஜிங் ஆப்ஸின் தற்காலிகச் சேமிப்பை அழித்தல்
  1. உங்கள் மொபைல் சாதனத்தில், அமைப்புகள் ஆப்ஸை Settings திறக்கவும்.
  2. ஆப்ஸ் & அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் மெசேஜிங் ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமிப்பகம் அதன் பிறகு தற்காலிகச் சேமிப்பை அழி என்பதைத் தட்டவும்.
இன்னமும் சிக்கல் தொடர்தல்

Android சாதனம்

ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் மெசேஜ் அனுப்பவும். நீங்கள் ஒரு நாளைக்கு 4 முறை அனுப்பிப் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: உங்கள் முதல் முயற்சிக்குப் பிறகும் மெசேஜ் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால் சிம் கார்டில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று பாருங்கள். உங்கள் ஆப்பரேட்டரைத் தொடர்புகொள்ளுங்கள்.

iPhone & iPad

ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் மெசேஜ் அனுப்பவும். நீங்கள் 24 மணிநேரத்தில் 3 முறை அனுப்பிப் பார்க்கலாம். 24 மணிநேரத்திற்குள் 3 முறைகளுக்கு மேல் நீங்கள் முயன்றால்:

  • அடுத்த 24 மணிநேரத்திற்கு உங்கள் அக்கவுண்ட் தடைசெய்யப்படும்.
  • உங்களால் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்த முடியாது.

உதவிக்குறிப்பு: உங்கள் முதல் முயற்சிக்குப் பிறகும் மெசேஜ் சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால் சிம் கார்டில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று பாருங்கள். உங்கள் ஆப்பரேட்டரைத் தொடர்புகொள்ளுங்கள்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12643711985480427455
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false