திரையைப் பகிரும் ஆப்ஸிடம் எச்சரிக்கையுடன் இருத்தல்

Google Pay ஆப்ஸைத் தொடர்ந்து பயன்படுத்த, அனைத்துத் 'திரையைப் பகிரும் ஆப்ஸையும்' மூடவும்.

திரையைப் பகிரும் ஆப்ஸ் என்றால் என்ன?

ஆரம்பத்தில் மொபைலின் சிக்கல்களைத் தொலைவிலிருந்து சரிசெய்யவே திரையைப் பகிரும் ஆப்ஸ் பயன்படுத்தப்பட்டன. அவை உங்கள் மொபைலுக்கான முழு அணுகலையும் கட்டுப்பாட்டையும் அனுமதிக்கும். திரையைப் பகிரும் ஆப்ஸுக்கான எடுத்துக்காட்டுகள்: Screen Share, AnyDesk மற்றும் TeamViewer.

Google Payயில் திரையைப் பகிரும் ஆப்ஸை ஏன் பயன்படுத்தக்கூடாது?

மோசடியாளர்கள் 'திரையைப் பகிரும் ஆப்ஸைப்' பயன்படுத்தி இவற்றைச் செய்யலாம்:

  • உங்கள் சார்பாகப் பணப் பரிமாற்றங்கள் செய்ய உங்கள் மொபைலைக் கட்டுப்படுத்தலாம்.
  • உங்கள் ATM அல்லது டெபிட் கார்டு விவரங்களைப் பார்க்கலாம்.
  • மொபைலுக்கு அனுப்பப்பட்ட OTPயைப் பார்க்கலாம். மேலும் அதைப் பயன்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து பணப் பரிமாற்றம் செய்யலாம்.

மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

எந்தக் காரணத்திற்காகவும் மூன்றாம் தரப்பு ஆப்ஸைப் பதிவிறக்கவோ நிறுவவோ Google Pay எப்போதும் கேட்காது. இந்த ஆப்ஸைப் பதிவிறக்கியிருந்தால் நீங்கள் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கு முன் அவை மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். 

யாரேனும் Google Pay பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டு இந்த ஆப்ஸைப் பதிவிறக்குமாறு அறிவுறுத்தினால் அவற்றை உடனடியாக நிறுவல் நீக்கி மொபைலிலிருந்து நீக்கவும். இந்தச் சிக்கலை Google Pay நிறுவனத்திடமும் புகாரளிக்கலாம்.

மோசடி அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12693928854428205488
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false