Fix sync errors with the Gmail Android app

உங்கள் Gmail ஆப்ஸ் தானாக ஒத்திசைக்கவில்லை எனில் பின்வரும் சிக்கல்களை நீங்கள் கவனிக்கக்கூடும்:

  • அஞ்சலை அனுப்ப முடியவில்லை அல்லது அஞ்சல் அனுப்புவதில் சிக்கியுள்ளது
  • புதிய அஞ்சல் கிடைக்கவில்லை
  • அஞ்சலைத் திறக்கவோ படிக்கவோ முடியவில்லை
  • "கணக்கு ஒத்திசைக்கப்படவில்லை" பிழை
  • Gmail ஆப்ஸ் மிகவும் மெதுவாக உள்ளது

அறிவிப்புகள் கிடைக்கவில்லை

உங்கள் Gmail அறிவிப்புகள் அமைப்புகளைச் சரிபார்க்கவும். அது செயல்படவில்லை எனில் கீழே உள்ள பிழையறிந்து திருத்துதல் படிகளை முயலவும்.

Yahoo, Outlook அல்லது பிற Gmail அல்லாத கணக்கிலிருந்து அஞ்சல் கிடைக்கவில்லை

கம்ப்யூட்டரில் உங்கள் Gmail அல்லாத கணக்கைத் திறக்கவும்.

  • உங்களுக்கு புதிய மெசேஜ்கள் கிடைக்கவில்லை எனில் அந்த மின்னஞ்சல் வழங்குநரின் உதவிக்குறிப்புகளைத் தேடிப்பார்க்கவும்.
  • அனைத்தும் நன்றாக இருப்பதாகத் தெரிந்தால் கீழேயுள்ள பிழையறிந்து திருத்துதல் படிகளை முயலவும்.

பிழையறிந்து திருத்துதல் படிகள்

ஒவ்வொரு படியையும் முயன்றபிறகு சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

படி 1: உங்கள் Gmail ஆப்ஸைப் புதுப்பிக்கவும்

அஞ்சலை அனுப்புவதிலோ பெறுவதிலோ உள்ள சிக்கல்கள் குறித்த சமீபத்திய தீர்வுகளைப் பெற உங்கள் Gmail ஆப்ஸைப் புதுப்பிக்கவும்.

படி 2: உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்

படி 3: உங்கள் அமைப்புகளைச் சரிபார்க்கவும்

நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா என்று பார்த்தல்

இணையதளமொன்றைத் திறக்க முயலவும். நீங்கள் கஃபே அல்லது நூலகம் போன்ற ஒரு பொது இடத்தில் இருந்தால் நீங்கள் உண்மையில் இணையத்துடன் இணைக்கப்படுவதற்கு முன் விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்க வேண்டியிருக்கக்கூடும்.

விமானப் பயன்முறையை ஆஃப் செய்தல்

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. நெட்வொர்க் & இணையம் அதன் பிறகு விமானப் பயன்முறையை முடக்கு என்பதைத் தட்டவும்.

Gmail ஒத்திசைவு அமைப்புகளைச் சரிபார்த்தல்

  1. Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் மெனு மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் கணக்கில் தட்டவும்.
  4. "Gmailலை ஒத்திசை" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

ஃபோன் அல்லது டேப்லெட் அமைப்புகளைச் சரிபார்த்தல்

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. பயனர்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும்.
  3. தரவைத் தானாக ஒத்திசை என்பதை இயக்கவும்.

படி 4: உங்கள் சேமிப்பகத்தை அழிக்கவும்

உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டில் இடம் தீர்ந்துபோய்விட்டால் ஒத்திசைவு இயங்காது. உங்கள் சாதனத்தில் இடத்தை அழிக்க:

  • நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸை நிறுவல் நீக்கவும்
  • பதிவிறக்கிய கோப்புகள் அல்லது நீங்கள் உருவாக்கிய கோப்புகளை நீக்கவும் அல்லது கோப்புகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு நகர்த்தவும்
  • நீங்கள் பதிவிறக்கியுள்ள Google Play இசை, புத்தகங்கள், திரைப்படங்கள் அல்லது டிவி ஷோக்களை அகற்றவும்

படி 5: உங்கள் கடவுச்சொல்லைச் சரிபார்க்கவும்

கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும். உங்களால் உள்நுழைய முடியாவிட்டாலோ கீழே உள்ள பிழைகளில் ஒன்றைப் பெற்றாலோ Gmail ஆப்ஸில் ஒத்திசைவு செயல்படாது.

  • "பயனர்பெயரும் கடவுச்சொல்லும் ஏற்கப்படவில்லை"
  • "தவறான அனுமதிச் சான்றுகள்"
  • உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் மீண்டும் மீண்டும் உள்ளிடுமாறு கேட்கப்படுகிறீர்கள்

நீங்கள் செய்யக்கூடியவை:

படி 6: உங்கள் Gmail தகவலை அழிக்கவும்

எச்சரிக்கை: பின்வரும் படிகள் உங்கள் மெசேஜ் வரைவுகளையும் கையொப்பம், ரிங்டோன் மற்றும் பிற அமைப்புகளையும் அழிக்கக்கூடும். மேலே உள்ள படிகள் செயல்படவில்லை என்றால் மட்டுமே இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. ஆப்ஸ் & அறிவிப்புகள் அதன் பிறகு ஆப்ஸ் தகவல் என்பதைத் தட்டவும்.
  3. Gmail அதன் பிறகு சேமிப்பகம் என்பதைத் தட்டவும்.
  4. தரவை அழி அதன் பிறகு சரி என்பதைத் தட்டவும்.
  5. உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2762639893772698995
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false