உங்கள் Gmail கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் கணக்கிற்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் யாரிடமாவது இருப்பதாகக் கருதினால், உடனடியாக உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும்.
படி 1: பாதுகாப்புச் சரிபார்ப்பை நிறைவு செய்யவும்
பாதுகாப்புச் சரிபார்ப்புப் பக்கத்திற்குச் சென்று கணக்கு மீட்டெடுப்பு விருப்பங்களைச் சேர்த்தல், கூடுதல் கணக்குப் பாதுகாப்புக்காக இருபடிச் சரிபார்ப்பை அமைத்தல், உங்கள் கணக்கின் அனுமதிகளைச் சரிபார்த்தல் போன்றவற்றைச் செய்யவும்.
எனது பாதுகாப்புச் சரிபார்ப்பைத் தொடங்கு
படி 2: பாதுகாப்பு குறித்த இந்த Gmail உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
முதலில் வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவது எப்படி என்பதை அறிக.
பிறகு உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்.
- கணக்குப் பாதுகாப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
- கடவுச்சொல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
நீங்கள் சரிபார்க்க முடிந்த சில அமைப்புகளின் மூலம் உங்கள் மின்னஞ்சல்களுக்கான அணுகல் வேறு யாரிடமும் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
- உலாவியில் Gmailலைத் திறக்கவும்.
- மேலே வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- அமைப்புகளைச் சரிபார்க்க, கீழே உள்ள பிரிவுகளைக் கிளிக் செய்யவும்.
'பொதுவானவை' பிரிவு
- உங்கள் கையொப்பத்தில் எழுத்துகள் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொள்ளவும்.
- உங்கள் விடுமுறைப் பதிலளிப்பானில் உள்ள வார்த்தைகள் சரியாக இருப்பதையும் இந்த அம்சம் உங்களுக்குத் தேவையில்லாத சமயத்தில் இயக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்துகொள்ள, அதனைச் சரிபார்க்கவும்.
'கணக்குகள் & இறக்குதல்' பிரிவு
- பட்டியலிடப்பட்ட அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் உங்களுடையவைதான் என்பதை உறுதிப்படுத்த, "இவராக அஞ்சலை அனுப்பு" பிரிவைச் சரிபார்க்கவும்.
- அறியாத நபர்கள் எவருக்கும் உங்கள் கணக்கிற்கு அணுகல் இல்லை என்பதைப் பார்க்க "எனது கணக்கிற்கான அணுகலை வழங்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பட்டியலிடப்பட்ட அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் உங்களுடையவைதான் என்பதை உறுதிப்படுத்த, "பிற கணக்குகளின் அஞ்சலைப் பார்க்கவும் (POP3 ஐப் பயன்படுத்தி)" பிரிவைச் சரிபார்க்கவும்.
'வடிப்பான்கள் & தடுக்கப்பட்ட முகவரிகள்' பிரிவு
- உங்களுக்குத் தெரியாத கணக்கிற்கு மின்னஞ்சல் தானாக முன்னனுப்பப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள, "இவருக்கு முன்னனுப்பு" என்ற வடிப்பானைப் பயன்படுத்திச் சரிபார்க்கவும்.
- மெசேஜ்களைத் தானாக நீக்கும் ("அதை நீக்கு") வடிப்பான்களை அமைத்துள்ளீர்களா என்று சரிபார்க்கவும்.
'முன்னனுப்புதல் மற்றும் POP/IMAP' பிரிவு
- கம்ப்யூட்டரில் Chromeமை திறக்கவும்.
- மேலே வலதுபுறத்தில் உள்ள மேலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உதவி Google Chrome குறித்த விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
"Google Chrome" தலைப்பின் கீழே உள்ள எண்களின் தொடரே தற்போதைய பதிப்பு எண் ஆகும். நீங்கள் இந்தப் பக்கத்தில் இருக்கும்போது புதுப்பிப்புகள் ஏதேனும் உள்ளனவா என Chrome சரிபார்க்கும்.
ஏதேனும் புதுப்பிப்பு இருந்தால் அதைப் பயன்படுத்த, மீண்டும் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலை நீங்கள் பெற்றால் அதற்குப் பதிலளிக்கவோ அந்த மெசேஜில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவோ வேண்டாம்.
தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுப்பது அல்லது மோசடிகளைத் தவிர்ப்பது மற்றும் புகாரளிப்பது எப்படி என்பதை அறிக.