பல இன்பாக்ஸ்கள் மூலம் உங்கள் மின்னஞ்சல்களை நிர்வகித்தல்

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

முக்கியம்: கம்ப்யூட்டரில் மட்டுமே பல இன்பாக்ஸ்களை அமைக்க முடியும்.

பல இன்பாக்ஸ்களை உருவாக்கும் விதம்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ”இன்பாக்ஸ் வகை” என்பதற்கு அடுத்துள்ள பல இன்பாக்ஸ்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. 'பல இன்பாக்ஸ்' அமைப்புகளை மாற்ற, பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஒவ்வொரு பிரிவுக்கும் நீங்கள் சேர்க்க விரும்பும் தேடல் வரையறையை உள்ளிடவும்.
    • நட்சத்திரமிட்ட மின்னஞ்சல்களைத் தேட is:starred என்பதைப் பயன்படுத்தவும்
    • ஒருவரின் மின்னஞ்சல் முகவரியைத் தேடும்போது அவரின் மாற்று மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் மின்னஞ்சல்களும் அந்தப் பிரிவில் உள்ள முடிவுகளில் காட்டப்படும். அசல் மின்னஞ்சலை மட்டும் பார்க்க, தேடல் வரையறையை இரட்டை மேற்கோள்களில் உள்ளிடவும். உதாரணத்திற்கு: "from:john.doe@gmail.com".
    • “from:மின்னஞ்சல் முகவரி" என்று தேடினால், அந்த நபர் ஒரு கோப்பினை உங்களுடன் பகிர்ந்தபோது வந்த ’Driveவில் பகிர்வது’ தொடர்பான அறிவிப்பு மின்னஞ்சல்களும் காட்டப்படும்.
  6. "பிரிவின் பெயர்" என்பதன் கீழே பிரிவுக்கான பெயரை உள்ளிடவும்.
  7. ”அதிகபட்சப் பக்க அளவு” என்பதற்கு அடுத்து, அந்தப் பிரிவில் நீங்கள் பார்க்க விரும்பும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
  8. "பல இன்பாக்ஸ்களின் நிலை" என்பதற்கு அடுத்து, பிரிவுகளை எங்கு அமைக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  9. கீழ்ப்புறத்தில், மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
687039901671679773
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false